Tuesday, January 3, 2017

உத்திரம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

உத்திரம்:

உங்கள் நட்சத்திரநாதன் சூரியனே உங்கள் ராசிநாதன் ஆவதால் இந்த வருடத்தை சாதகமாக மாற்றிக் காட்ட உங்களால் முடியும். இந்த வருடம் பூமி லாபம் உங்களுக்கு உண்டு. காலிமனை வாங்க முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு.

யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். உங்களில் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிக நல்ல வருடம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

No comments :

Post a Comment