Thursday, December 1, 2016

மேஷம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

மேஷம்:

டிசம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் உச்சமாகவும், குருவின் பார்வையிலும் இருப்பதால் இந்த மாதம் எந்தவித சோதனைகளையும் உங்களுக்கு தராத மாதமாக இருக்கும். ஐந்துக்குடைய சூரியன், எட்டில் சனியுடன் மறைவதால் குறிப்பிட்ட சிலருக்கு அதிர்ஷ்டத் தடைகளும், வரவேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச்சங்கடங்களும் இருக்கும்.

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை இந்த மாதம் தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். அலுவலகத்தில் மரியாதை இருக்கும். பணிச்சுமை குறையும்.

வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். மாத பிற்பகுதியில் செவ்வாய் பலவீனமாவதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

1,3,5,6,9,10,13,14,15,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி இரவு 9 மணி முதல் 28-ம் தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் சுபகாரியங்களைச் செய்வதோ, புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதோ வேண்டாம். குறிப்பாக புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதையும் தவிர்க்கவும்.

No comments :

Post a Comment