Friday, July 1, 2016

மீனம்: 2016 ஜூலை மாத பலன்கள்

மீனம்:

அடுத்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் மீன ராசிக்காரர்கள் கடந்த சிலவருடங்களாக உங்களுக்கு இருந்துவந்த சாதகமற்ற விஷயங்கள், பின்னடைவுகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். பிறந்த ஜாதக அமைப்பின்படி யோகதசாபுக்திகள் நடக்கும் சிலரைத் தவிர பெரும்பாலான மீனராசிக்காரர்கள் 2012-ம் ஆண்டிலிருந்து சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். சமீபத்தில் நடந்த ராகு-கேதுப்பெயர்ச்சியும் ராசிநாதன் குருபகவான் ஆறில் மறைந்தால் உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாமல் போய் விட்டது. அடுத்த மாதம் முதல் கோட்சாரக் குறைகள் அனைத்தும் மீனராசிக்கு நீங்குவதால் இனிமேல் சந்தோஷங்களை மட்டுமே அனுபவிக்கும் ராசிகளில் மீனமும் ஒன்றாக இருக்கும்.

எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். மீனராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி மதியம் 2 மணி முதல் 15-ம்தேதி அதிகாலை 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

1 comment :

  1. Date of birth 22/02/1985 time of birth 10:43AM New york time. Place of birth New York.
    I Do have a job for the past 8 years. I have a post degreed in Economoics.
    When will I get a job. My rasi is Meenam. Pl help me sir replying to my Questions.
    Thanks

    ReplyDelete