Friday, July 1, 2016

மிதுனம்: 2016 ஜூலை மாத பலன்கள்

மிதுனம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் ஆட்சி வலுவுடன் இருக்கிறார் என்பதோடு அவருக்கு நண்பர்களான சூரியனுடனும் சுக்கிரனுடனும் இருப்பதால் மிதுனத்திற்கு இந்த மாதம் மேன்மையான ஒரு மாதம்தான். ஜூலை மாதம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மைகள் மட்டுமே உள்ள மாதமாக இருக்கும் என்பது உறுதி.

மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு. இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப்பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

குருபகவான் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது. செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் கடன் வாங்கியாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி இரவு 10 மணி முதல் 22-ந்தேதி காலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

No comments :

Post a Comment