Monday, 28 March 2016

துலாம் : 2016 – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

துலாம்:

இன்னும் சில மாதங்களில் ஏழரைச்சனி விலக இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு வர இருக்கும் துன்முகி தமிழ்ப்புத்தாண்டு நன்மையான மாறுதல்களையும், நிலையான எதிர்காலத்தையும் தரும். அனைத்து துலாம் ராசிக்காரர்களும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டில் வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஒரு நிலையை கண்டிப்பாக உணர்வீர்கள்.

இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த துலாம் ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள். பொதுவாகச் சொல்லப் போனால் இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை உடனடியாக அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த அதிருப்திகள் இனிமேல் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று முன்னேறுவதற்கு தற்போது வாய்ப்பு வரும். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றங்கள் விலகி பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் தேசத்தில் சுமுக நிலை இருக்கும்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு நல்ல பலன்களையே தரும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது. காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள்.

நடந்து கொண்டிருக்கும் ஏழரைச்சனியால் முதல் திருமணத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு வழக்கு கோர்ட் என்று அலைபவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது திருமண அமைப்பு இப்போது உருவாகும். அது நல்லபடியாக நீடித்தும் இருக்கும்.

பிறந்த ஜாதகப்படி இரண்டாவது திருமண அமைப்பு இல்லாத விவாகரத்து வரை போன தம்பதிகள் மற்றும் பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி இணைவீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

துலாம் ராசிக்காரர்கள் எதிலும் நடுநிலை கொண்ட நேர்மையானவர்கள் என்பதாலும் என்பதாலும், எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வீர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும், மிக முக்கியமாக ஏழரைச்சனி முடியப்போகிறது என்பதாலும் இனிமேல் நல்லபடியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.

பெண்களுக்கு நன்மைகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும்.

ஏழரைச் சனி முடியப்போவதால் வாழ்க்கையில் உங்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் ஆரம்ப ஆண்டாக இது இருக்கும். எனவே இதை நன்கு பயன்படுத்தி மேன்மைகளைப் பெறுவீர்கள் என்பது உறுதி.

15 comments :

 1. நன்றி குருஜி...

  ReplyDelete
 2. நன்றி குருஜி...

  ReplyDelete
 3. வாக்குப்படியே நடக்கட்டும் ஐயா

  ReplyDelete
 4. வாக்குப்படியே நடக்கட்டும் ஐயா

  ReplyDelete
 5. வாக்குப்படியே நடக்கட்டும் குருஜி

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Dear Guruji,
  this is hari from Saudi Arabia.one of my biggest fan of u.i lost every thing in last 7 and half years sani. by gods grace i don't like to get back every thing which i lost in my past.but i want to live my future life peaceful. that's what i want.when i read this i hope my dreams come true.

  ReplyDelete
 8. Dear Guruji,
  this is hari from Saudi Arabia.one of my biggest fan of u.i lost every thing in last 7 and half years sani. by gods grace i don't like to get back every thing which i lost in my past.but i want to live my future life peaceful. that's what i want.when i read this i hope my dreams come true.

  ReplyDelete
 9. Dear Guruji,
  this is hari from Saudi Arabia.one of my biggest fan of u.i lost every thing in last 7 and half years sani. by gods grace i don't like to get back every thing which i lost in my past.but i want to live my future life peaceful. that's what i want.when i read this i hope my dreams come true.

  ReplyDelete
 10. Dear Guruji,
  this is hari from Saudi Arabia.one of my biggest fan of u.i lost every thing in last 7 and half years sani. by gods grace i don't like to get back every thing which i lost in my past.but i want to live my future life peaceful. that's what i want.when i read this i hope my dreams come true.

  ReplyDelete