Tuesday, September 1, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 53 (1.9.2015)

கரீம் முல்லா, நெல்லித்தோப்பு.

கேள்வி :

கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்க்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு நிச்சயித்து பின் நின்றுவிட்டது. நானாக ஒரு பெண்ணை பார்த்து காதலித்து அதுவும் முடியும் தருவாயில் நின்றுவிட்டது. எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் தோஷம் உண்டா? வீட்டில் பார்க்கும் திருமணமா? அல்லது காதல் திருமணமா? பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

பதில்:

நீங்கள் கொடுத்துள்ள 16.1.1987 அதிகாலை 4.15 செவ்வாய்கிழமை என்பது தவறாக உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால் சரியான பிறந்த விவரங்களை அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

கே. மல்லிகேஸ்வரி, சேலம்.

கேள்வி :

ரா
செவ்
ராசி
சந்,பு
சூ,சுக்
கே
குரு
சனி


கட்டங்களுக்குள் கட்டுண்டு இருக்கும் என் மகனின் கஷ்டங்களை கட்டவிழ்த்து விடுமாறு குருஜி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மகனின் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. மறுமணத்திற்கு நான்கு வருடங்களாக தடை. சமீபத்தில் ஒரு விருச்சிகராசிப் பெண்ணைப் பத்துப் பொருத்தம் இருக்கிறது என்று பார்த்து நிச்சயதார்த்தம் செய்ததில் அந்த பெண் என் மகனிடம் போனில் இன்னொருவரை காதலிப்பதாக சொல்லி அழுததால் அதுவும் நின்று விட்டது. என் கணவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இவன். எனக்கு பிறந்த மகளின் கணவர் ஏற்கனவே ஒரு வீடு எழுதி கொடுத்தும் என் மகனின் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். என் மகனுக்கு நல்ல அழகான மனைவி அமைவாளா? சொத்துக்கள் கிடைக்குமா? ஆயுள் எப்படி? எங்களை நன்றாக வைத்துக் கொள்வானா?

பதில்:

வரிக்கு வரி என் மகன் என் மகன் என்று குறிப்பிட்டு சொத்துப் பிரச்சினையை சொல்லும்போது மட்டும் இவன் இறந்துபோன இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் என்று குறிப்பிட்ட உங்களின் பாசத்திற்கும் பரந்த மனப்பான்மைக்கும் முதலில் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

மகனுக்கு சிம்மலக்னம், மகரராசியாகி லக்னத்திற்கு ஏழில் ராசிக்கு இரண்டில் செவ்வாய் என்ற அமைப்போடு உச்சசனி. ராசிக்கு ஏழையும் பார்த்த அமைப்பு என்பதால் இரண்டு தார யோகம்.

தற்போது நான்காம் வீட்டில் அமர்ந்து தனது எட்டாம் வீட்டைப் பார்க்கும் குருதசை நடப்பதால் சொத்துக்கள் கை விட்டுப் போக துளியும் வாய்ப்பு இல்லை. ஏழுக்குடைய சனி உச்சமானதால் நல்ல அந்தஸ்தான மனைவி அமைவாள். ஆயுள் ஸ்தானாதிபதியான எட்டுக்குடையவன் அந்த வீட்டைப் பார்த்து லக்னாதிபதி வர்க்கோத்தமம் ஆகி லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த ஆயுள்காரகன் சனி உச்சமானதால் உங்கள் மகன் எண்பது வயது தாண்டி தீர்க்காயுள் வாழ்வார். இரண்டாவது திருமணம் 2016 இறுதியில் நடக்கும்.

ஆர். செங்கேணி, சென்னை -81.

கேள்வி :

சுக்
ராசி
பு,ரா
கே
சூ
குரு
சந்
செவ்
சனி


திருமணம் நடந்து முப்பது நாட்களுக்குள் என் மகளின் வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது என்ற நிலை வந்து விட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு குடும்பங்களும் எழுதி கொடுத்து விட்டு என் மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற மனநிலையில் மிகவும் வேதனையில் இருக்கிறேன். ஜாதக நிலை எப்படி உள்ளது. மறுமணம் நடக்குமா?

பதில்:

கடகலக்னம், விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு எனது கணிப்புப்படி ஏழரைச்சனியோ, அஷ்டமச்சனியோ நடந்து கொண்டிருக்கும் ஒரு வரனைச் சேர்த்திருப்பீர்கள். அதனால் பிரிவு ஏற்பட்டு இருக்கும். மேலும் உங்கள் பெண்ணிற்கு நீசசந்திர தசையோடு ஏழரைச்சனி நடப்பதும் குற்றம்.

ஏழாமிடத்தோடு ராகு கேதுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் ஶ்ரீகாளகஸ்தியில் சர்ப்ப சாந்தி பூஜைகளைச் செய்ய வேண்டும். நடக்கும் சந்திரதசையில் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் செவ்வாய்புக்தியில் 2016 கடைசி அல்லது 2017 தை மாதம் மறுமணம் நடக்கும். அந்த வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

என். குபேந்திரன், ஆழ்வார் திருநகர்.

கேள்வி :

சந்
கே
சனி
ராசி
பு
சுக்
ல,செவ்
சூ,குரு
ரா


கல்லூரியில் படிக்கும் மகனின் படிப்பு, வேலை வாய்ப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும், வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை குருஜி அவர்களின் மூலம் தெரிந்து கொள்ள  ஆவல்.

பதில்:

தனுசுலக்னம், மீனராசி. லக்னத்தில் சூரி, செவ், குரு. இரண்டில் புதன், சுக். மூன்றில் சனி. பத்தில் ராகு.

லக்னத்தில் ஒன்று, ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் இணைந்து லக்னாதிபதி ஆட்சி பெற்ற அருமையான யோகஜாதகம் என்பதோடு இல்லாமல் 28 வயதிற்கு பிறகு சூரியன், சந்திரன், செவ்வாய் என யோக தசைகளும் ஆரம்பிக்கின்றன.

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் வெளிநாட்டைக் குறிக்கும் ராகு அமர்ந்து, பத்தாம் வீட்டை வெளிதேசம் போவதைக் குறிக்கும் எட்டுக்குடையவன் பார்த்து, வெளிநாட்டில் நீடித்து வேலை செய்வதைக் குறிக்கும் எட்டாம் பாவத்தை பத்துக்குடைய புதனும் பார்த்ததால் உங்கள் மகன் நிரந்தரமாக வெளிநாட்டில் வேலை செய்வார். ஜாதகம் யோகமாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

அப்பாக்கள் அனைவருமே அயோக்கியர்கள்....!

ஒரு மகள் சென்னை 19

கேள்வி

சனி
கே
ராசி
குரு
ரா
சுக்
செவ்
பு
சந்
சூ


அப்பாக்கள் அனைவருமே அயோக்கியர்கள்.. முதலில் மகளே மகளே என்று தேன் ஒழுக ஒழுக பேசிப் பேசிப் பிறகு மனதை மாற்றச் செய்பவர்கள். காதலிப்பது பெரிய தவறா. குற்றமா? இந்த உலகில் யார்தான் காதலிக்கவில்லை? நீங்களும் ஒரு தந்தையின் கேள்விக்கு உங்கள் பெண் காதலிப்பவனையே கல்யாணம் செய்து கொள்வாள் அவன் நல்லவன் என்று பதில் சொல்கிறீர்கள்... ஆனால் காதலிப்பவன் கேள்வி கேட்டால் நீ அயோக்கியன் அந்த பெண்ணை விட்டு விட்டுப் போய் விடுவாய் என்று பதில் சொல்கிறீர்கள். நீங்களெல்லாம் தெய்வீகமான காதல் என்றால் என்னவென்று தெரியாதவர்கள். உங்கள் காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். ஆனால் எங்கள் காலம் இப்படியில்லை. நாலும் எங்களுக்குத் தெரியும். அரைகுறை ஜோதிடம் தெரிந்த என் அப்பா உங்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ஜோதிடத்தைச் சொல்லி எங்களைப் பிரிக்கப் பார்க்கிறார். உலகமே தலைகீழாக மாறினாலும் எங்களைப் பிரிக்க முடியாது. சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

பதில்

( மிதுனலக்னம் விருச்சிகராசி மூன்றில் ராகு ஐந்தில் சூரி ஆறில் புத ஏழில் சுக் செவ் எட்டில் குரு பத்தில் சனி 3-11-1997 இரவு 9.10 சென்னை )

மகளே... பக்கம் பக்கமாக நீ எழுதியிருக்கும் கடிதத்தையும் திட்டையும் இதற்கு மேல் என்னால் சுருக்க முடியவில்லை. உன் எழுத்திலிருந்து உன் அப்பா என்னிடம் உன்னைப்பற்றி நேரில் வந்து ஜோதிடம் பார்த்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

எல்லாம் தெரிந்த மகளே.. பெற்றவர்களின் வலி நீ பெற்ற பின்தான் தெரியும். பதினெட்டு வயது கூட நிரம்பாத உன்னைப் படிக்க அனுப்பினோமா? காதலிக்க அனுப்பினோமா? மகள் பள்ளிக்குத்தான் செல்கிறாளா என்று ஒவ்வொரு நாளும் உன் பின்னால் உளவு பார்க்க வேண்டுமா அம்மா? அந்தந்த வயதுக் கடமைகளை நீதானே சரியாகச் செய்யவேண்டும்? இந்த வயதில் படிப்பது மட்டும்தானே உன் வேலை?

அப்பாக்கள் அனைவரும் அயோக்கியர்கள்தான் மகளே... பேஸ்புக்கில் மகளின் காதலுக்கு லைக் கொடுத்து மகிழ்ந்து பின் அவள் தேர்ந்தெடுத்தவன் சரியில்லை என்று தெரிந்ததும் இருபது வயதுக் குழந்தை மகளை மீட்க அனைத்து முயற்சியும் செய்து இறுதியாய் மாண்புமிகு நீதிமன்றம் மூலமாய் மீட்டெடுத்து நீதிமன்ற வாசல் மண்ணைக் கும்பிட்டுக் கலங்கிய அந்த திரைத்துறைத் தகப்பனின் பாசத்தை டி.வியில் பார்த்து இரவு முழுக்க தூக்கம் வராமல் புரண்ட எத்தனையோ அயோக்கியத் தகப்பன்களில் நானும் ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன்தான்.

மகளே... ஜோதிடர்கள் வரலாம் போகலாம். ஆனால் ஜோதிடம் நிலையானது. உனக்கு மிதுன லக்னமாகி லக்னாதிபதி புதன் ஆறில் மறைந்து நீச சந்திரனுடன் இணைந்து லக்னத்தை செவ்வாயும் பார்த்ததால் நீ புத்திசாலியாக இருந்தாலும் அவசரக்குடுக்கை. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யும் கோபக்காரி. மனதிற்கு காரணமான சந்திரன் கெட்டதால் உன் மனம் உன் கையில் இல்லாது அடுத்தவர் கை பொம்மையாய் ஆடுவாய். அதிலும் உன் ராசிக்கு இப்போது ஏழரைச்சனி நடப்பதால் இப்போது நீ சொந்த புத்தியில் இல்லை.

வியாழன்தோறும் வரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரில் சிறுவயதில் வரும் சுக்கிரதசை என்ன செய்யும் என்று நான் எழுதியதற்கு நீயும் ஒரு உதாரணம். உன் பதிமூன்று வயதில் ஆரம்பித்த சுக்கிரதசை உனக்கு என்ன செய்தது என்பதை எனக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

செவ்வாயுடன் இணைந்து சனி பார்வையில் நீசகுருவின் ஏழாம் வீட்டில் இருக்கும் சுக்கிரனின் தசையில், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த மூன்றுக்குடைய நீச சூரியனின் புக்தியில் சென்றவருடம் அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் மகத்தான பெருமையான திருமணத்திற்கு முன் இழக்கக்கூடாத விலைமதிக்க முடியாததை நீ இழந்து விட்டிருப்பாய்.

உன் பூர்வஜென்ம கர்மவினைகளின்படி அடுத்து குடும்பாதிபதியான நீச சந்திரனின் புக்தியில் உனக்கு பதினெட்டு வயது பூர்த்தியாவதால் நெருக்கடிகள் அதிகரித்து அடுத்தவருடம் மார்ச் அல்லது ஏப்ரல்மாதம் உன் பெற்றோரை எதிர்த்து படிப்பைத் துறந்து விரும்பியவனைத் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்குத் தாயாவாய்.

குழந்தை பிறந்த பின் உன் மீதான மோகம் தீர்ந்து அவனும், அவன் மீதான எதிர்பார்ப்புகள் பொய்த்து நீயும் சண்டையிட்டு மிதிபட்டு குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது சுவற்றில் அடித்த பந்து போல் பெற்றவர்களிடம் திரும்பி வந்து சுக்கிரதசை குருபுக்தியிலும் சனிபுக்தியிலும் போலீசிற்கும் கோர்ட்டுக்கும் அலைந்து விவாகரத்து வாங்கி உன் முப்பதாவது வயதில் இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்குடைய செவ்வாயின் வீட்டில் அமர்ந்து குடும்பாதிபதியுடன் இணைந்த புதன்புக்தியில் மறுமணம் செய்து கொள்வாய்.

ராசிக்கு இரண்டிலும் லக்னத்திற்கு ஏழிலும் இருக்கும் செவ்வாயும், ராசிக்கு ஏழைப் பார்க்கும் சனியும், நீசமாகி எட்டில் அமர்ந்த குருபகவானும் நடக்கும் ஏழரைச்சனியும் இதற்கு ஆதாரங்கள்.

முகவரியை முழுதாக எழுதாத அன்புமகளே.. பரம்பொருளிடம் பிரார்த்திப்பதன் மூலம் அனைத்தையும் மாற்ற முடியும். நாங்கள்தான் அயோக்கியர்கள். இந்த பதிலை அப்படியே உன் அம்மாவிடம் காட்டு. எக்காரணம் கொண்டும் படிப்பை விட்டு விடாதே. சனிக்கிழமைதோறும் உன் ஊரில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு அம்மாவைக் கூட்டிக்கொண்டு போய் நல்லெண்ணெய் தீபமேற்று. அப்படியே அம்மாவுடன் அங்கு அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசு. ஆண்களால் பெண்ணினம் படும் அவஸ்தையை தாயின் வாயால் கேட்டுத் தெரிந்து கொள். மதுரையம்பதியின் தாய் மீனாட்சியின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் வணங்கி வா.

இவையனைத்தையும் முறையாகச் செய்து படிப்பைக் கைவிடாமல் உங்கள் பலனைச் ஜெயித்து விட்டேன். நீங்கள் சொன்னது போல எனக்கு நடக்கவில்லை. நான் பெற்றோர் பார்த்த கணவனுடன் நன்றாக இருக்கிறேன் என்று நீ நேரில் வந்து என்னிடம் சொல்லும் நாளே நான் ஜோதிடன் ஆனதின் பயனைப் பெற்ற நாள். வாழ்த்துக்கள் மகளே....

5 comments :

  1. அருமை சார்... அந்த ஒரு மகளுக்கும் நன்மையே நடக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்.....

    ReplyDelete
  2. அன்பான குருஜி அவர்களுக்கு வணக்கங்கள்!
    என்னவொரு அழகான பதில்! இளம் கன்று பயமறியாது என்பதை தெளிவாகக் காட்டும் கேள்வி,”தங்க மீன்” படத்தில் சொன்ன ஒரு கருத்து:மகளுக்கு கொடுக்கும் முத்தத்தின் அன்பின் ஆழத்தை ஒரு தந்தை மட்டுமே உணரமுடியும்!!
    இந்த அழகான பதில்-இந்த மகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என பரம்பொருளை பணிவோம்!!! ஒரு வேளை வினைப்பயனால் நடக்காமல் போனாலும், தங்களின் கருத்துக்களை படிக்கும் என்னைப்போன்ற தகப்பன்களுக்காவது உண்மை நிலையைப் புரிய வைக்கும் என நம்புவோம்!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி

    ReplyDelete
  3. அருமையான பதில் குருஜி

    ReplyDelete
  4. பெற்றவர்களை மிதிக்கும் ஒரு பெண் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. எனவே தங்கள் பதில் சூப்பா்

    ReplyDelete