Tuesday, 25 August 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 52 (25.8.2015)

கு. சிவகங்கா குமார், சென்னை - 37.

கேள்வி :

சந்
குரு
செவ்
கே
ராசி
சுக்
சூ
பு
செவ்
குரு
ரா
ராசி
கே
சுக்
சந்
சனி
சூ
பு

தேவரகசியம் எழுதும் தேவரீர் அவர்களுக்கு... என் கணவர் தங்களைப்பற்றி கூறவும் மாலைமலர் வாங்கி வந்து படித்துக்காட்டவும் செய்வார். எங்கள் மகனின் பிரச்னையை உங்களிடம் கேட்கச் சொன்னேன். என் அப்பா அவனுக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்த ஒரே காரணத்தால் மறுத்துவிட்டார். மருமகளுக்கு மூன்றுமுறை கரு உருவாகிச் சிதைந்து விட்டது. எங்களுக்கு வம்ச விருத்தி உண்டா? பேரக்குழந்தை வேண்டும். மகன் மருமகள் ஜாதகத்தையும் கல்யாணப் பத்திரிக்கையையும் அனுப்பியிருக்கிறேன் கணவருக்குத் தெரியாமல்தான் எழுதுகிறேன் பேப்பரில் அவர் தெரிந்து கொள்ளட்டும்.

பதில்:

மகனுக்கு விருச்சிக லக்னம், மீனராசியாகி, லக்னாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்ததால் கடுமையான கோபக்காரன். ஐந்தில் வக்கிர குருவும், சந்திரனும் இணைந்து சூரியன் பதினொன்றில் அமர பவுர்ணமி யோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் இருப்பதால் புத்திரபாக்கியம் நிச்சயம் உண்டு.

மருமகள் சங்கீதாவின் ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து புத்திரகாரகன் குருபகவான் எட்டில் மறைந்தாலும் ஐந்திற்குடையவனுக்கு குருபார்வை ஐந்தாமிடத்திற்கு சுக்கிரன் பார்வை இருப்பதால் புத்திர பாக்கியம் நிச்சயம். இருவருக்கும் பிறந்தநேரம் இல்லாததால் எப்போது குழந்தை பிறக்கும் என்று சொல்ல முடியவில்லை.

க. பத்மநாபன், திருச்சி.

கேள்வி:

குரு
செவ்
சுக்,ரா
ராசி
சனி
சூ
பு
ல,கே
சந்

எனது சகோதரனுக்கு திருமணயோகம் உண்டா இல்லையா? பல ஜோதிடர்கள் கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. தயைகூர்ந்து தாங்கள் கணித்து சரியான பதில் தர வேண்டுகிறேன்.

பதில்:

(தனுசுலக்னம் தனுசுராசி மூன்றில் சனி ஆறில் குரு ஏழில் செவ் சுக் ராகு ஒன்பதில் சூரி புத)

லக்னமும் ராசியும் ஒன்றாகி லக்ன ராசிநாதனான குருபகவான் தனது எதிரியின் வீட்டில் மறைந்து நவாம்சத்தில் நீசமாகி ஜாதகருக்கு எந்த சுகத்தையும் தர முடியாமல் பலவீனமாகிப் போன ஜாதகம்.

ஆறு பனிரெண்டுக்குடைய சுக்கிரனும் செவ்வாயும் மனைவியைக் குறிக்கும் ஏழாமிடத்தில் ராகுவின் சாரத்தில் அமர்ந்து கூடவே ராகுவும் இவர்களுடன் இணைந்து இவர்களை பலவீனப்படுத்தி ஏழாமிடத்தை அஷ்டமாதிபதி பார்த்து ஏழுக்குடைய புதனை வலுப்பெற்ற சனி பார்த்த கடுமையான தாரதோஷ அமைப்பு. புத்திர ஸ்தானத்தையும் சனி பார்த்து புத்திர ஸ்தானாதிபதி ராகுவுடன் கெட்டு புத்திரகாரகன் குருவும் வலுவிழந்ததால் திருமண யோகமோ அதன் மூலமான புத்திரபாக்கியமோ உங்கள் சகோதரனுக்கு இல்லை.

ஆர். விஜயகுமார் கோவை -1.

கேள்வி:

பு
சூ
செவ்
சுக்
ரா
ராசி
கே
சந்
குரு
சனி

சொந்தமாக இரண்டு சலூன் கடைகளோடு நான்கு பேரை வேலைக்கு வைத்து தொழில் நடத்திய நான் கடன் தொல்லையால் மனைவி குழந்தையைப் பிரிந்து வேறு ஊரில் சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறேன். எப்போது விடிவு காலம்? எதிர்காலம் எப்படி இருக்கும்? வரவிருக்கும் கேதுதசை இன்னும் கஷ்டப்பட வைக்குமா? என்ன வகையான பரிகாரங்கள் செய்ய வேண்டும்? வழிகாட்டுங்கள் குருவே...

பதில்:

(கன்னிலக்னம் விருச்சிகராசி இரண்டில் சனி மூன்றில் குரு எட்டில் புத ஒன்பதில் சூரி செவ் பத்தில் சுக் ராகு)

முப்பது வயதுகளில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் யாரும் சரியாக இல்லை என்று ஒவ்வொரு வாரமும் யாருக்காவது பதில் தந்து கொண்டுதான் இருக்கிறேன். அனுஷமும் கேட்டையும் கடுமையான அவஸ்தையில் இருக்கிறது. 2017 இறுதியில் ஜன்மச்சனி விலகியதும் சனியின் கடுமை குறைந்து கெடுபலன் குறையும்.

புதன்தசையும் கேதுதசையும் உச்சசனியின் பார்வை பெற்றதால் சுமாரான தசைதான். கேது குருவின் வீட்டில் இருந்து சுக்கிரனின் பார்வை பெற்றாலும் சனி செவ்வாயின் பார்வையையும் பெற்றதால் கலப்பு பலன்களைத்தான் செய்வார். ஏழரைச்சனி வேறு நடக்கிறது.

ஆனால் அடுத்து நடக்க இருக்கும் சுக்கிர தசை நல்லயோக தசை என்பதால் மீண்டும் சனி முடிந்ததும் சொந்தமாக தொழில் செய்வீர்கள். சுக்கிரதசையில் கடன் தொல்லை இருக்காது. கேது தசைக்காக ஜென்மநட்சத்திரம் அன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவிலில் அபிஷேகம் செய்து இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்கவும்.

கே. நீலா, சென்னை - 54.

கேள்வி:

சனி
ரா
சுக்
ராசி
சூ
பு
சந்
செவ்
குரு
கே

அரசு வேலையில் இருந்தேன். நூறு சதவீதம் நேர்மையாக வேலை செய்தும் நிர்வாகம் பழிவாங்கும் எண்ணத்தில் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்ததால் வேலையை விட்டுவிட்டேன். கடவுள் நம்பிக்கை இருப்பதால் தைரியமாக இருக்கிறேன். திருமணம் ஆகாதவளாக இருப்பதால் வேலை செய்யும் இடங்களில் ஆண்கள் பலவிதமாகத் தொல்லை கொடுக்கிறார்கள். வீட்டில் சொன்னால் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று தம்பி சண்டை போடுகிறான். பெண்ணின் சாபத்தால் இதுவரை திருமணம் ஆகவில்லை என்று சொல்கிறார்கள். திருமணம் எப்போது? அரசுவேலை தொடருமா? என்ன பரிகாரம் செய்வது?

பதில்:

மேலே சொன்ன பதில் இன்னொரு விருச்சிக ராசிக்காரரான உங்களுக்கும் பொருந்தும். லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு ஏழை சனி பார்த்ததால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. அதிலும் மேஷலக்னத்தில் பிறந்து செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பதால் பயங்கர கோபக்காரியாக இருப்பீர்கள். எதிலும் தாட் பூட் தஞ்சாவூர்தான். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். யோகா தியானம் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பத்தாமிடத்தில் சூரியன் வர்க்கோத்தமமாக இருப்பதால் அரசு வேலை போக வாய்ப்பில்லை. ஜென்மச்சனி முடிந்தால்தான் நல்லது நடக்கும். அதுவரை அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். எந்தக்காரணம் கொண்டும் சனிக்கு விளக்கேற்றவோ தனித்த சனிபகவான் சந்நிதி முன் போய் நிற்கவோ வேண்டாம்.

வி. மங்கள கௌரி, கோவை – 9.

கேள்வி:

சனி
ரா
ராசி
சுக்
சந்
கே
சூ
செவ்
குரு
பு

எப்போதும் உண்மையாகவும் எல்லாவற்றிலும் நேர்மையாகவும் இருக்க நினைக்கும் நான் ஆன்மிக நாட்டம் அவ்வளவாக இல்லாது இருக்கிறேன். என்ன காரணம்? ஒரு ஜோதிடரிடம் என் கணவர் ஜாதகத்தையும் என் ஜாதகத்தையும் காட்டியபோது என் கணவருக்கு பூரண ஆயுள் என்று சொன்னவர் எனது ஆயுள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதுமுதல் எனக்கு ஆயுள் குறைவோ என்று கவலையாக இருக்கிறது. தற்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்பை விற்றுவிட்டு தனி இடத்தில் வீடு கட்டி குடியேற ஆசைப்படுகிறேன். எண்ணம் எப்போது நிறைவேறும்?

பதில்:

அப்பப்பா... மனிதப் பிறவிக்கு எப்படியெல்லாம் சந்தேகம் வருகிறது? ஜோதிடரிடம் உங்கள் ஆயுள் பற்றியும் கேட்டிருந்தால் உடனே விளக்கியிருப்பாரே? மேஷலக்னமாகி அஷ்டமாதிபதி செவ்வாய் எட்டிலேயே ஆட்சி பெற்றதாலும் ஆயுள்காரகன் சனி லக்னத்தில் நீசவக்ரம் பெற்று வலுப்பெற்றதாலும் எண்பத்தைந்து வயதிற்கு குறையாத ஆயுள் உங்களுக்கு. கவலை வேண்டாம்.

லக்னத்தில் நீசவக்ரச் சனி சூட்சும வலுவோ சுபத்துவமோ பெறாமல் ராசிக்கோ லக்னத்திற்கோ குருவின் தொடர்பு இல்லாததால் ஆன்மிக நாட்டம் இல்லாமல் இருக்கிறீர்கள். தனிவீடு எண்ணம் 2019 ல் நடக்க இருக்கும் செவ்வாய் தசை சுக்கிரபுக்தியில் நிறைவேறும்.

ஜி.ஆர். சுப்பிரமணியம், கோவை- 36.

கேள்வி:

சந்
சனி
செவ்
ரா
ராசி
கே
சூ
பு
சுக்
குரு

பலசிரமங்களுக்கு இடையே எனதுமகன் அரசுத்துறை கடன் பெற்று எஞ்சினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். முன்னேற்றம் இல்லை. கடும் கடன் சுமை. எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்?

பதில்:

மகனுக்கு மேஷராசியாகி அஷ்டமச் சனி நடப்பதால் 2017 க்குப் பிறகு நல்ல முன்னேற்றம் அடைவார். யோக ஜாதகம் என்பதால் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பார்.கோபமும் வெறுப்பும் மறைய என்ன பரிகாரம்?


ஆர். சோலை, அறந்தாங்கி.

கேள்வி:

கே
சந்
ராசி
குரு
சனி
ல,சுக்
செவ்
பு
சூ,ரா

ஜோதிட சிம்மத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... அக்காவிற்கு 2006 ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. எங்கள் வீட்டில் எல்லோரிடமும் வேண்டாவெறுப்புடன் பேசுவாள். புகுந்த வீட்டிலும் அப்படித்தான். அக்காளின் கோபதாபத்திற்கு அக்கா கணவர் இதுவரை பொறுமையைக் கடைப்பிடித்து வருவதை உலகின் எட்டாவது அதிசயமாகவே கருதுகிறோம். அக்காவின் கோபமும் வெறுப்புணர்ச்சியும் மறைந்து நற்சிந்தனைகளுடன் அமைதியாக எதிர்காலத்தில் வாழ்வாளா? நல்ல பரிகாரம் கூறி எங்களுக்கு வழிகாட்டுங்கள் அய்யா...

பதில்:

(துலாம் லக்னம் ரிஷபராசி லக்னத்தில் சுக் செவ் பத்தில் குரு பதினொன்றில் சனி புத பனிரெண்டில் சூரி ராகு)

லக்னாதிபதியும் ராசிநாதனும் சுக்கிரன் ஒருவனேயாகி லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் ராகுவின் சுவாதி நட்சத்திர சாரத்தில் அமர்ந்து லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து ராசியைப் பார்த்ததோடு லக்னாதிபதி சுக்கிரனையும் லக்னத்தையும் ராசியையும் சனியும் பார்த்து லக்னம் ராசி இரண்டுமே பாபக்கிரகங்களான சனி செவ்வாயால் பாழ்பட்டதால் உங்கள் அக்கா தாழ்வு மனப்பான்மையும் எதிர்மறை எண்ணங்களும் சந்தேகக்குணங்களும் கொண்டவராக இருப்பார்.

வருடம் ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு குடும்பத்துடன் ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்வது அடுத்து இன்னொரு ஜென்மநட்சத்திரம் அன்று கும்பகோணம் கஞ்சனூர் சென்று வழிபட்டு ஒருஜாமம் எனப்படும் இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருப்பதும் ஒரு வெள்ளிக்கிழமை சென்னை மாங்காடு வெள்ளீஸ்வரன் ஆலயத்தில் வழிபட்டு ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடங்கள் கோவிலின் உள்ளே இருப்பதும் சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்கள்.

மேலும் இருபது வாரங்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு சிறிது மொச்சைப்பயறை தலைக்கடியில் வைத்துப் படுத்து கடைசி வாரம் மொத்தமாகச் சேர்த்து நிற்கும் நீர்நிலையான கிணறு குளத்தில் போடுவதும் எப்போதும் சிறிதளவு மொச்சைப்பயறை உடலில் பட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக்கொண்டிருப்பதும் முறையான பரிகாரங்கள். இவைகளைச் செய்ய பரம்பொருள் அனுமதிக்கும் பட்சத்தில் அக்காவின் குணம் மாறி தெளிவான பாதைக்குத் திரும்ப வைக்கும். வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment