கேள்வி
:
குரு
சனி
|
சூ
|
புத
|
|
சந்
|
ராசி
|
சுக்
ரா
|
|
கே
|
ல
|
||
செவ்
|
என் மகள் திவ்யா பிளஸ்ஒன் படித்து வருகிறாள் தற்சமயம் சனிதசை நடக்கிறது. சனிதசை நல்லதசையா? மற்றும் அவள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பிளஸ்டூ
முடிப்பதற்குள் பதில் தாருங்கள்.
பதில்:
(சிம்ம லக்னம் கும்பராசி மூன்றில் செவ், ஏழில் சந், ஒன்பதில் குரு, சனி, பத்தில் சூரி, பதினொன்றில் புத, பனிரெண்டில் சுக், ராகு)
மகள் திவ்\யாவிற்கு லக்னாதிபதி சூரியன் பத்தில் திக்பலம் பெற்று ஐந்திற்குடையவன் ஐந்தாமிடத்தைப் பார்த்து ஒன்பதுக்குடையவன் ஒன்பதாம் வீட்டை பார்த்து லக்னத்தைக்
குரு பார்த்த நல்ல யோகஜாதகம். லக்னத்திற்கு பத்தில் சூரியன் அமர்ந்து ராசிக்கு பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் அரசு உயர்பதவியில் இருப்பார். சனிபகவான் நீசம்
பெற்று குருவுடன் இணைந்து சூட்சும வலு பெற்று ராஜயோகாதிபதி செவ்வாயின் பார்வையையும் பெற்றிருப்பதால் சனிதசை யோகதசையாக வேலை செய்யும். அடுத்தடுத்து நல்லதசைகள்
நடக்க உள்ளதால் மகள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையில் இருப்பார்.
பச்சியம்மாள், தம்மம்பட்டி.
கேள்வி:
செவ்
|
சூ
பு
|
சுக்
கே
|
|
சனி
|
ராசி
|
||
ரா
|
குரு
|
ல
சந்
|
சந்
சூ,பு
|
ரா
|
||
சுக்
|
ராசி
|
||
கே
|
குரு
ல
|
செவ்
சனி
|
மகளைத் தம்பிக்குத் திருமணம் செய்து கொடுத்து ஆறேமாதத்தில் துரதிர்ஷ்டவசமாக தம்பி விபத்தில் இறந்து மகள் இருபது வயதில் விதவையாகி விட்டாள். தற்பொழுது ஒரு
வருடம் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது அமைப்பாக ஒரு வரன் வந்துள்ளது. வரனுக்கு இது முதல் திருமணம். ஜாதகப்பொருத்தம் பார்த்ததில் கொடுக்கலாம் என்றும்
வேண்டாம் என்றும் ஜோதிடர்கள் கூறுவதால் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன். அய்யா அவர்கள் உறுதியான பதிலைத் தந்து என் மனக்குழப்பத்தை நீக்கியும்,
மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வழிகாட்டவும் வேண்டுகிறேன்.
பதில்:
மகளுக்கு கன்னி லக்னம் கன்னிராசியாகி ஏழில் செவ்வாயும், எட்டில் உச்ச சூரியனும் அமர்ந்து களத்திரகாரகன் சுக்கிரன் ராகு, கேதுக்களுடன் சம்மந்தப்பட்டு ராகுதசை
கேதுபுக்தியில் திருமணம் நடந்ததால் இந்தத்துயரம் ஏற்பட்டது. எப்பொழுதுமே ராகுதசை கேதுபுக்தியில் திருமணம் செய்வதற்கு ஆயிரம்முறை யோசிக்க வேண்டும். அதைவிட
அடுத்து வரும் சுக்கிரபுக்தியில் திருமணம் செய்வதே நல்லது. மேலும் ஏழில் செவ்வாய் அமர்ந்து ஏழரைச்சனியும் நடந்த பெண்ணிற்கு சிறுவயதில் திருமணம் செய்தது குற்றம்.
நீங்கள் அனுப்பியுள்ள வரனுக்கு துலாம் லக்னம் மேஷராசியாகி அவருக்கும் தற்போது ராகுதசை நடப்பில் இருந்து சமராகுதோஷம் உள்ளதாலும் பெண்ணிற்கு கன்னிராசி ஆணிற்கு
மேஷராசி என சஷ்டாஷ்டக அமைப்பு உள்ளதாலும், வரனுக்கு அஷ்டமச்சனி நடப்பதாலும் பெண்ணைத் தரவேண்டாம். வாழ்க்கையில் யாருக்கும் நடக்கக் கூடாத மிகப்பெரிய துயரம்
உங்கள் பெண்ணிற்கு நடந்து விட்டதால் இனிமேல் அவள் நிச்சயமாக கஷ்டப்பட மாட்டாள். அவளுக்கு நல்ல இடத்தில் அடுத்த வருடம் திருமணம் நடக்கும். பொறுமையாக இருக்கவும்.
பி. விஜயகுமார், செங்கல்பட்டு.
கேள்வி:
செவ்
|
சந்
|
குரு
சுக்
|
|
ராசி
|
ல,சூ
கே,பு
|
||
ரா
|
|||
சனி
|
இரண்டுமுறை எழுதியும் குருஜி அவர்கள் பதிலளிக்கவில்லை. ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளுக்கு அப்பா அம்மா இல்லை. என்னை விட்டால் வேறு யாரும் அவளுக்குக்
கிடையாது. என்னை மட்டும் நம்பி வரும் பெண்ணை எந்தக் குறையுமில்லாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்தப் பெண்ணுடன் திருமணம் நடைபெறுமா? அவளுடன் வாழ்க்கை
சந்தோஷமாக இருக்குமா? பிரம்மனின் நாவில் இருந்து வரும் பதிலாக குருஜியின் பதிலை நினைக்கிறேன்.
பதில்:
இது போன்ற கேள்விகளுக்கு இருவரின் ஜாதகமும் இருந்தால்தான் துல்லியமாகப் பதில் தரமுடியும். கடகலக்னம், ரிஷபராசியாகி லக்னாதிபதி உச்சம் பெற்று சுபத்துவமும் அடைந்த
உன்னால் ஒரு பெண்ணை ஏமாற்றாமல் கடைசிவரை கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்ற முடியும். லக்னத்திற்கு ஏழில் ராகுவும், ராசிக்கு எட்டில் சனியும் அமர்ந்து
ஏழுக்குடையவனை குருவும், சுக்கிரனும் பார்ப்பதால் உன்னால் விரும்பிய பெண்ணை அடையமுடியும்.
ஏ. மகேந்திரன், தாரமங்கலம்.
கேள்வி:
சிமெண்ட் நிறுவனத்தில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறேன். இந்த வேலை இன்னும் எழுபது நாட்களில் முடிவடைகிறது. வேறு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.
கிடைக்கவில்லை. என்னுடைய வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
பதில்:
(கன்னிலக்னம், சிம்மராசி இரண்டில் குரு, ஆறில் சனி எட்டில் செவ், ஒன்பதில் புத, சூரி, கேது. பத்தில் சுக்)
ஒன்பது, பத்துக்குடையவர்கள் பரிவர்த்தனை பெற்று தர்மகர்மாதிபதி யோகம் அமைந்து சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதால் உனக்கு
நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை. 21 வயதாகும் உனக்கு தற்பொழுது சிம்மராசியாகி அர்த்தாஷ்டமச்சனி நடப்பதால் இன்னும் இரண்டுவருடங்களுக்கு
திருப்தியான வேலை அமைப்புகள் அமையாமல் வரும் சுக்கிரதசை புதன்புக்தியில் 2017 ல் நிரந்தரமான வேலை கிடைக்கும்.
வி. முரளிதரன், தாதகாபட்டி.
கேள்வி:
ல
|
செவ்
|
||
ராசி
|
குரு
கே
|
||
ரா
|
சந்
|
||
பு,சுக்
சனி
|
சூ
|
பி.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? மாமா பெண்ணைத் திருமணம் செய்யலாமா? வேண்டாமா? மாமா மிகவும் நல்லவர். தன் மகளைத்
திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். உங்களின் தீவிர வாசகனான நான் உங்களிடம் என் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.
பதில்:
(மேஷலக்னம் சிம்மராசி இரண்டில் செவ் நான்கில் குரு கேது எட்டில் சூரி ஒன்பதில் புத சுக் சனி)
சூரியன் எட்டில் மறைந்தாலும் உச்சகுருவின் பார்வையில் அமர்ந்து சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்து ராசிக்குப் பத்தாமிடத்தைப் பார்த்ததால் வரும் சூரியதசையில்
2017 இறுதியில் உனக்கு அரசுவேலை கிடைக்கும்.
முறைப்பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்று ஒரு சாஸ்திரக் கணக்கு இருக்கிறது. இருந்தாலும் உன்னுடைய மேஷ லக்னத்திற்கு மனைவியைக் குறிக்கும் துலாம்
லக்னத்தில் அந்தப் பெண் பிறந்து அவளுக்கும் சூரிய சந்திரர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் அமர்ந்து அவளது ஏழுக்கதிபதி உச்சம் பெற்று ஏழாமிடத்தையே
பார்ப்பதாலும் ஏழாமிடத்தைக் குரு பார்ப்பதாலும் அந்தப்பெண்ணைத் திருமணம் செய்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருவரும் ஆதர்ச தம்பதிகளாக இருப்பீர்கள்.
லெ. அணுக்கச்செல்வன், நெல்லை.
கேள்வி:
என் இரு மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். பெரியவள் ஐஏஎஸ் ஆகவும் சிறியவள் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆகவும் ஜோதிட விதி இருக்கிறதா எனக் கூற
விரும்புகிறேன்.
பதில்:
பிறந்தநேரம் இடம் எழுதாமல் வெறும் பிறந்த தேதியுடன் மகள்களின் ஜாதகக்கட்டத்தை நீங்கள் அனுப்பியுள்ளதால் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
என். வசந்தாமணி, கோவை.
கேள்வி:
சுக்
குரு
|
செவ்
|
||
ராசி
|
ல,சூ
பு,கே
|
||
சந்
சனி
|
63 வயதான எனது கணவரின் உடல் நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பமே நிலை குலைந்துள்ளது. இதுவரை ஜாதகமே பார்க்காத நான் கணவரின் பிறந்த நாள் நேரம் இடம்
மட்டும் அனுப்பியுள்ளேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா? ஆயுள்பலம் எப்படி?
பதில்:
(கடகலக்னம் கன்னிராசி லக்னத்தில் சூரி புத கேது மூன்றில் சனி பதினொன்றில் குரு சுக் பனிரெண்டில் செவ் )
லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்த எட்டுக்குடையவன் தசையும் இதுவரை ஏழரைச்சனியும் நடந்ததால் உடல்நிலை பாதிப்பு. அதேநேரத்தில் அஷ்டமாதிபதி தசையில் பாதகாதிபதி
சுக்கிரனின் புக்தி ஜூலை பதினான்காம் தேதியுடன் முடிந்து விட்டதால் தற்போது ஆயுள் குற்றம் இல்லை. சந்திரனுடன் சனி சேர்ந்து செவ்வாயும் பார்த்ததால் உடல்நிலையில்
முன்னேற்றம் சுமார்தான். உங்களின் ரிஷபராசிக்கு அடுத்து அஷ்டமச்சனி நடக்கும்போது கணவரின் சனிதசை சந்திரபுக்தியில் அவரைப் பற்றி கவலைப்படும்படி இருக்கும்.
அடுத்தபிறவியில் பெண்ணாகப் பிறந்து மனைவிக்கு
பணிவிடை செய்ய முடியுமா?
ஆ. பக்தவத்சலம், சென்னை.
கேள்வி:
ல
|
செவ்
ரா
|
||
ராசி
|
சனி
|
||
சுக்
|
|||
சந்
கே
|
பு
|
சூ
குரு
|
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரியசொத்தாக, பாக்கியமாக எனது மனைவியை கடந்த 46 வருடமாக நினைத்து வருகிறேன். மீண்டும் ஒரு பிறவி கிடைத்தால் இதேபெண் எனது
மனைவியாக வாய்க்க வேண்டும் இல்லையேல் நான் பெண்ணாகப் பிறந்து, எனது மனைவி ஆணாகப் பிறந்து அவருக்கு நான் பணிவிடை செய்ய ஆசைப்படுகிறேன். இது நடக்குமா? எனது
மனைவியின் வயது 66. எனது ஜாதகப்படி பித்ருதோஷம் உள்ளதாக சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள் உண்மையா? பரிகாரம் செய்ய வேண்டுமா? 2008 ல் நானும் மனைவியும்
ராமேஸ்வரம், காசி, கயா, அயோத்தி ஆகிய இடங்களுக்கு சென்று முறைப்படி முன்னோர் கடமைகளைச் செய்தோம் மற்றொருமுறை வடக்கே செல்ல முடியுமா?
பதில்:
(மீனலக்னம், தனுசுராசி, நான்கில் செவ், ராகு. ஐந்தில் சனி. ஆறில் சுக், ஏழில் சூரி, குரு, எட்டில் புதன்)
பனிரெண்டாமிடத்தை தனிச்சுக்கிரன் பார்த்து சுபத்துவப்படுத்தியதாலும் பனிரெண்டாமிடத்திற்கு பாபர்களின் தொடர்பு இல்லாததாலும் பனிரெண்டுக்கு அதிபதி சனியாகி
குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து வர்க்கோத்தமம் பெற்று அம்சத்தில் கேதுவுடன் இணைந்ததாலும் ராசிக்கு பனிரெண்டாமிடமும் பாபர்களின் சம்பந்தம் பெறாததாலும் இனிமேல்
உங்களுக்கு பிறவி கிடையாது.
மனைவியின் ஜாதகத்தை அனுப்பாததால் அவரது நிலையைக் கணிக்க முடியவில்லை. ஜாதகப்படி பித்ருதோஷ அமைப்பில்லை. அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு மேல் குருதசையில்
புதன்புக்தி ஆரம்பிக்க உள்ளதாலும் வடக்கைக் குறிக்கும் கிரகமான புதன் தூரப்பிரயாணத்தைக் குறிக்கும் எட்டாமிடத்தில் சர ராசியில் அமர்ந்திருப்பதாலும் 2017 ல்
மீண்டும் தீர்த்தயாத்திரை செல்வீர்கள்.
No comments :
Post a Comment