Tuesday, April 14, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 33 (14.4.2015)

. அன்பழகன்சேலம் - 1.

கேள்வி :

ராகு
செ, பு
சூ
ராசி
சு
குரு
சனி
கேது

எனக்கு உண்டான வீட்டு பாகத்தை என் அண்ணன் கொடுக்காமல் எட்டு ஆண்டுகளாக சண்டையிட்டும் ஏமாற்றிக் கொண்டும் வருகிறார்கலெக்டர்போலீஸ் என மனு கொடுத்தும் பலன் இல்லைசொந்த வீடு இல்லைவாடகை கொடுக்க கஷ்டப்படுகிறேன்கேன்சர் வந்து சாப்பிட முடியாமல் வலி தாங்க முடியாமல் அவதிப்படுகிறேன்மனம் செத்து விட ஏங்குகிறது.  ஏதாவது வழி கிடைக்குமா?

பதில் :

ரிஷப லக்னம், கடக ராசி. லக்னத்தில் புத, செவ். இரண்டில் சூரி. மூன்றில் சுக். நான்கில் சனி. ஐந்தில் கேது. ஒன்பதில் குரு.

லக்னாதிபதியே ஆறுக்குடையவனாகி லக்னத்திற்கு கேந்திர கோணங்களில் நிற்காமல் ஆறாமிடத்திற்கு கேந்திரத்தில் நின்று தன் தசையின் பிற்பகுதியில் தீராத நோயையும், வம்பு, வழக்குகளையும் தந்த ஜாதகம். நடக்கும் சூரிய தசையில் புதன் புக்தி 2017 பிற்பகுதியில் சொத்து விஷயமாய் உங்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும்.

கு. துரைசுவாமிஒண்டிக்குப்பம்.

கேள்வி :

குரு கேது
சூ, பு, சு
சந்
ராசி
செவ், சனி
ராகு

கல்கத்தா பத்திரிக்கையில் வந்த விளம்பரம் பார்த்து வரதட்ணையின்றி மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன்முதலிரவிலேயே பிரச்னைபெண் மனநிலை பாதித்தவள்மூளை வளர்ச்சி இல்லைமறைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்நமது மருமகள் என்று பல லட்சம் செலவழித்து அப்போலோவில் வைத்தியம் பார்த்தேன்பெண்ணின் பெற்றோர் ஒதுங்கி விட்டனர்இது பிறவிக் கோளாறு திருமணத்திற்கு தகுதி இல்லாதவள் என்று டாக்டர்கள் சொன்ன பின் சாரி என்ற ஒரே வார்த்தை சொல்லி பெண்ணை தகப்பனார் அழைத்துச் சென்று விட்டார். மகனுக்கு டைவர்ஸ் ஆன பெண் மீது விருப்பம் இல்லை. எப்போது மறுமணம்?

பதில் :

மிதுனலக்னம், கும்பராசி. இரண்டில்செவ், சனி. ஒன்பதில்சந். பதினொன்றில்குரு, கேது. பனிரெண்டில்சூரி, புத, சுக்.

லக்னாதிபதி மறைந்து வக்ரமாகி லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர்பார்வை இல்லாத ஜாதகம். இரண்டில் நீச செவ்வாயும், சனியும், நான்கு டிகிரிக்குள் இணைந்து குடும்ப பாவமும் கெட்டது. குடும்பாதிபதி அந்த பாவத்திற்கு எட்டில் மறைந்ததும் குற்றம். சுக்கிரனை அஸ்தமனம் செய்ததால் சுக்கிரன் தரவேண்டிய திருமணத்தை ராசிக்கு ஏழாம் அதிபதியான சூரியன் தருவார். புதன் தசை சூரிய புக்தியில் 2016 தைமாதம் மறுமணம் நடக்கும். ராசிமற்றும் லக்னத்தின் ஏழாமிடத்தை குரு பார்ப்பதால் மகனின் விருப்பப்படி கன்னிப்பெண் அமைவாள்.

ஆர். மோகன சுந்தராம்பாள்சேலம்.

கேள்வி :

செவ்
சுக்
சூரி, குரு                 
ராசி
புதன்
கேது
ல, சந், ராகு,
சனி

குருவுக்கு சிஷ்யையின் நமஸ்காரம்பேத்திக்கு எப்போது திருமணம்? அருகில் வந்து தவறி விடுகிறதுஎன்ன காரணம்நாக தோஷத்திற்கு பரிகாரம் செய்தாயிற்றுராசி லக்னத்திற்கு குரு பார்வை இருந்தும் ஏன் தாமதம் ஆகிறது? வெளிநாட்டில் வேலை பார்ப்பாள் என்கிறார்கள்உண்மையாஅவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தங்களின் ஆசீர்வாத பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

மகர லக்னம், மகரராசி. லக்னத்தில் ராகு. நான்கில் செவ். ஐந்தில் சுக். ஆறில் சூரி, குரு. ஏழில் புத. பனிரெண்டில் சனி.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் ராசி லக்னத்திற்கு குருபார்வை இல்லையம்மா. லக்னாதிபதிக்கு மட்டும் குருபார்வை இருக்கிறது. எனவே யோக ஜாதகம் தான். ஆனாலும் ஏழுக்குடையவன் ராகுவுடன் இணைந்து ஏழாமிடத்தை வலுப்பெற்ற செவ்வாய் பார்த்து ஆறுக்குடையவன் ஏழில் அமர்ந்து குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தை வக்ரசனி பார்த்த ஜாதகத்திற்கு தாமத திருமணமே நல்லது.

ஜாதகப்படி குருதசை சனிபுக்தியில் 2017-ல்தான் திருமணம் நடக்கும். தாமத திருமணம் இந்த ஜாதகத்திற்கு யோக அமைப்புதான். வெளிநாட்டில் இருப்பாள் என்று ஜோதிடர்கள் சொன்னது சரியே.

தற்போது பனிரெண்டிற்குடைய சுயசாரம் வாங்கிய குருதசை நடப்பதாலும் அடுத்து பனிரெண்டில் உள்ள லக்னாதிபதி தசையும் அதனையடுத்து கடகத்தில் உள்ள கேதுவுடன் இணைந்த புதன்தசையும் நடக்க உள்ளதாலும் உங்கள் பேத்தி திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் நிரந்தரமாக செட்டிலாவார்.

இவர் மூலமாக பிறக்கும் உங்களின் கொள்ளுப் பேரன், பேத்திகள் வெளிநாட்டில் பிறப்பார்கள். திருமணம் மட்டும்தான் தாமதம். திருமணத்திற்குப் பிறகு யோக வாழ்க்கைதான்.

வி. சுவாமியடியான், அகத்தீஸ்வரம்.

கேள்வி :

செவ், கேது
ராசி
சனி
ராகு
சந், சுக்
ல, சூ, பு, குரு

எனது உலகமே என் மகன் முன்னேற்றம் மட்டும் தான். டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் வேலை செய்கிறான். பகுதி நேரமாக பி.டெக்காலேஜில் படிக்கிறான். இன்னும் ஆறு மாத படிப்பு இருக்கிறது. அவன் எதிர்காலம் எப்படி? அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்தால் எந்தத் துறையில் கிடைக்கும்?

பதில் :

கன்னி லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் சூரி, புத, குரு. இரண்டில் சந், சுக். ஐந்தில் சனி. பத்தில் செவ், கேது.

லக்னாதிபதியும், ஜீவனாதிபதியுமான புதன் உச்சமும், திக்பலமும் பெற்று குருவும் லக்னத்தில் திக்பலம் பெற்று ராஜயோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இரண்டு, ஒன்பது, பதினொன்றுக்குடையவர்கள் இரண்டில் அமர்ந்ததால் மகா தனயோகம் உண்டாகிபத்தில் செவ்வாய் கேதுவுடன் இணைந்து தசம அங்காரா அமைப்பில் திக்பலம் பெற்று மூன்று கிரகங்கள் திக்பலம் பெற்ற ராஜயோக ஜாதகம்.

லக்னத்திற்கு பத்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு பத்தாமிடத்தை சனிபார்ப்பதால் நகரும் இரும்பான ரெயில்வே துறையில் வேலை கிடைக்கும். தற்போது சனிதசையில் புதன்புக்தி நடப்பதால் படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நிச்சயம் கிடைக்கும்.

நட்புக்கிரகங்கள் வலுத்துள்ளதாலும் அடுத்தடுத்து யோகதசைகள் வருவதாலும் அதிஷ்டக்காரப் பிள்ளையைப் பெற்ற உங்களுக்கு எதற்கையா கவலை?.

எஸ். ஷாஜஹான், திருச்சி - 8.

கேள்வி :

குரு, ராகு
சூரி, சுக்
பு, செவ்
ராசி
சந்
சனி
கேது

மூன்று பெண்கள் பேசி முடித்து விட்ட பின்பும் என் மகனுக்கு திருமணம் அமையவில்லை. வீட்டில் ஒரே கவலையாக இருக்கிறோம். மகனுக்கு எப்போது திருமணம் கூடும்? தயவு செய்து பதில் தாருங்கள்.

பதில்:

கடக லக்னம், தனுசு ராசி. மூலநட்சத்திரம். ஐந்தில் சனி. ஒன்பதில் குரு, ராகு. பதினொன்றில் சூரி, சுக். பனிரெண்டில் புத, செவ்.

லக்னத்திற்கு ஏழாம் வீட்டையும், ராசிக்கு இரண்டாம் வீட்டையும் செவ்வாய் சனிபார்க்கும் ஜாதகம். ராசிக்கு ஏழிலும் செவ்வாய் இருக்கிறார். அதைவிட புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பனிரெண்டில் மறைந்து புத்திர ஸ்தானத்தில் சனி அமர்ந்து புத்திரகாரகன் குருவுடன் ராகு இணைந்து புத்திர தோஷம் உண்டானதால் திருமணம் தாமதமாகிறது. நடக்கும் சூரிய தசை சனி புக்தியில் 2016 ஆவணியில் இருந்து 2017 தைக்குள் திருமணம் நடக்கும்.

எஸ். வெங்கடேஷ்பாபு, ஈரோடு.

கேள்வி :

செவ்,
குரு
ராகு
ராசி
சந், சுக், கேது
சனி
சூரி, புதன்

திருமணம் எப்போது? இப்போது பார்க்கும் மெடிக்கல் ஷாப் தொழில் சரியானது தானா? தொழில் நிரந்தரமாக இருக்க எதேனும் பரிகாரம் இருக்கிறதா?

பதில்:

மகர லக்னம், சிம்ம ராசி. இரண்டில் ராகு. மூன்றில் செவ். ஐந்தில் குரு. எட்டில் சுக். ஒன்பதில் சூரி, புத. பனிரெண்டில் சனி.

ராசிக்கு ஏழில் ராகு. எட்டில் செவ்வாய். ராசிக்கு ஏழாமிடத்திற்கு சனிபார்வை. அதுவே லக்னத்திற்கு இரண்டாம் வீடாகி அங்கு சனி பார்வையுடன் ராகு இருப்பு களத்திரகாரகன் சுக்கிரனுடன் ஏழாம் வீட்டு அதிபதி எட்டில் மறைவு. எனவே தாமத திருமணம் தான்.

லக்னத்திற்கு பத்தாம் வீட்டு அதிபதி கேதுவுடன் இணைந்து ராசிக்கு பத்தில் குரு இருப்பதால் மெடிக்கல் தொழில் சரியானது தான். 2018 பிற்பகுதியில் தந்தையாகும் யோகம் இருப்பதால் 2017ல் திருமணம் நடக்கும். வரும் நவம்பர் மாதம் ராகுதசை ஆரம்பிக்க உள்ளதால் வருடம் ஒருமுறை ராகுதசை முடியும் வரை ஶ்ரீகாளகஸ்தி சென்று காளத்திநாதனை தரிசிக்கவும்.

கோபித்துக் கொண்டு போன மனைவி எப்போது வருவாள்?.

ஜெ. தங்கமாரியப்பன், தூத்துக்குடி.

கேள்வி :

சூ, செ, பு, சு
சந்
ராசி
ராகு
கேது
குரு
சனி

மனைவி ஒரு வாரத்திற்கு முன் கோபித்துக் கொண்டு போனாள். எப்போது வருவாள்? ஒரு வருடமாக என்னுடன் சண்டை போட்டு குழந்தையையும் கூட்டிக் கொண்டு போகிறாள். கூப்பிட்டால் வரமாட்டேன் என்கிறாள். வரவும், போகவுமாக இருக்கிறாள். சண்டையில்லாமல் எப்போது நிம்மதியாக இருப்போம்? இப்போது வேலையும் இல்லை. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? மிகவும் கவலையாக இருக்கிறது. வாழ்க்கையை முடித்துக் கொள்வோமா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. என் ஆயுள் எப்படி? குருஜி அவர்கள் கணித்து சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

கடக லக்னம், ரிஷப ராசி. லக்னத்தில் ராகு. மூன்றில் குரு, சனி. ஒன்பதில் சூரி, புத, சுக், செவ்.

ஒரு வருடமாக வேலையில்லை. வேலையில்லை என்பதால் கையில் காசு இல்லை. காசு இல்லை என்றால் சோறு பொங்குவதற்கு மனைவி என்ன செய்வாள்? சண்டை போடத்தான் செய்வாள். சும்மா கோபித்துக் கொண்டு போக மனைவிக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?. நீங்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

கடக லக்னத்திற்கு குருபகவான் தன் தசையில் முதலில் ஆறுக்குடைய பலன்களைத்தான் செய்வார். கடன் வாங்க வைப்பார். ஒரு வருடமாக குருதசை ஆரம்பித்திருக்கிறது. குருபகவான் அஷ்டமாதிபதியான சனியுடன் ஒரே டிகிரியில் இணைந்திருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த புதன்நீசம். குருவும் புதனும் பரிவர்த்தனை.

இந்த வேலையில்லை என்றால் இன்னொரு வேலை கிடைக்கப் போகிறது. உலகத்தில் வேலையா இல்லை? வரும் ஜூன் மாதம் நல்ல வேலை கிடைக்கும். இன்னும் ஒரு வருடத்திற்கு கொஞ்சம் சிரமமான காலம் தான். ஆனாலும் உங்கள் கையை மீறி எதுவும் போகாது. லக்னாதிபதி உச்சம் பெற்றதால் எந்தவித கஷ்ட நிலைமையையும் உங்களால் சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.

என்னுடைய கணிப்பின்படி உங்கள் மனைவிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும். பக்குவமாக எடுத்துச் சொல்லி மனைவியைக் கூட்டிவாருங்கள். சொல்லும் விதத்தில் சொன்னால் கணவனின் அனைத்து நியாயமான கஷ்டங்களிலும் மனைவி துணை நிற்பாள். அடுத்த வருடம் எல்லாம் சரியாகும். நிம்மதியாக இருப்பீர்கள். லக்னாதிபதி உச்சம் பெற்றதால் 80 வயது தாண்டி தீர்க்காயுள்.

No comments :

Post a Comment