தைமாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் பதினொன்றில் இருப்பதும் யோகாதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்ச குருவின் பார்வையில் இருப்பதும்
உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பண வரவுகளும்,
லாபங்களும், தாராளமாக இருக்கும்.
இந்த மாதம் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்
நலத்தில் கவனம் வைக்க வேண்டும். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும்.
பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. சிலருக்கு
அம்மாவின் வழியில் மன வருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட
சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ரிஷபம்
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் அவருடைய நண்பரின் வீடுகளில் நட்பு நிலையில் இருப்பதால் தை மாதம் ரிஷப ராசிக்கு எந்த விதமான பின்னடைவுகளையும் தராது என்பதோடு
பத்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல் துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார மேன்மைகளைத் தரும்
மாதமாகவும் இருக்கும்.
கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல்
நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள்
வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.
அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு
முயற்சிகளுக்கு பின்பு தான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும்.
பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம்.
மிதுனம்
மிதுனநாதன் புதன் தை மாதம் முழுவதும் எட்டாமிடத்தில் குருவின் பார்வையில் இருப்பதால் தடைகள் உள்ளமாதமாக இது இருக்கும் என்றாலும் மறைந்த புதன் நிறைந்த தனம்
தருவார் என்ற ஜோதிட வாக்குப்படி புத பகவானால் உங்களுக்கு நிறைந்த தனலாபங்களும், பண வரவுகளும் இருக்கும் என்பதால் தை மாதம் நல்ல மாதமே.
ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த
மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை
விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு
இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில்
சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும்.
கடகம்
மாதம் முழுவதும் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், லாபாதிபதி சுக்கிரனும் இணைந்து ஒன்பதுக்குடைய குருபகவானின் நேர் பார்வையில் அமர்ந்து தனபாக்கியலாபாதிபதிகளின்
சம்பந்தம் உண்டாகி மகாதனயோகம் உண்டாவதால் இந்த மாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும்
மாதமாக இருக்கும்.
யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும்
வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல
பலன்களும் நடக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும். பூர்வீக சொத்தில்
இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்மநாதன் சூரியன் ஆறில் மறைந்து அவருக்கு வீடு கொடுத்த சனிபகவான் சூரியனையும் உங்களின் ராசியையும் பார்ப்பது சிறப்பான நிலை அல்ல என்றாலும் ராசிநாதன்
சூரியனுக்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் எவ்விதமாறுதல்கள், எதிர்மறைபலன்கள் உங்களுக்கு நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல உடனே மறைந்து
கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி.
எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில்
இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும்
நேரங்களில்தான் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.
ராசிநாதனை சனி பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பண
விஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பண வரவுகள் இந்த மாதம் சுமாராக தான் இருக்கும் என்பதால்
சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கன்னி
மாதம் முழுவதும் எட்டிற்குடைய செவ்வாய் ஆறில் மறைந்து கெடுவதும், ராசிநாதன் புதபகவான் சுக்கிரனுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் சுபர் பார்வையில் இருப்பதும்
நன்மையை தரும் அமைப்புகள் என்பதால் தைமாதம் உங்களை பெறுத்த வரையில் விசேஷமான மாதம் தான். ஆனால் ராசியில் இருக்கும் ராகு அனைத்தையும் உங்களை அனுபவிக்க விடாமல்
ஒரு இனம் தெரியாத கலக்கத்தையும் தருவார் என்பதால் எதிலும் அவசரப்படாமல் இருப்பதும் நல்லது.
இந்த மாதம் நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். நீண்ட
நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச்
சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.
இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளைய பருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம்
நடக்கும்.
துலாம்
இரண்டு ஐந்திற்குடைய செவ்வாய், சனியின் பரிவர்த்தனையும். ராசிநாதன் சுக்கிரனின் நான்காமிட நட்பு நிலையும் இந்த மாதம் துலாம் ராசிக்கு ஏழரை சனியையும் சனிபகவான்
தரும் பொருளாதார நெருக்கடிகளையும் சமாளிக்கக் கூடிய அமைப்பு என்பதால் தை மாதம் துலாம் ராசிக்கு எந்த விதமான ஏமாற்றங்களையோ, நெருக்கடிகளையோ தராத மாதமாகவே
இருக்கும் என்பது உறுதி.
இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. ஜூலை மாதம் நடைபெறப்போகும் குருப்பெயர்ச்சி மிகவும் அற்புதமான பலன்களை உங்களுக்கு தரும் என்பதல் நாளை
நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட
வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும்
கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும்,
தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்தாலும் ஒன்று, நான்குக்குடைய செவ்வாய், சனி பரிவர்த்தனையும் ராசிக்கு உச்ச குருவின் பார்வையும், பதினொன்றாம் இடத்தில்
ராகுவும் உங்களுக்கு வரும் சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாக்கும் விஷயங்கள் என்பதால் இதுவரை கஷ்டப்பட்ட உங்களுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று
முதுமொழிப்படி இந்த மாதம் நல்வழி திறக்கும்.
வாழ்க்கைத் துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம்
இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும்
பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.
வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல் நலப் பிரச்னைகள் வரலாம்.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள்
வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.
தனுசு
தனுசுநாதன் குருபகவானின் உச்ச பார்வையில் இந்த மாதம் ராசியின் தர்மகர்மாதிபதிகளான சூரியனும், புதனும் இருப்பது உங்களின் பண வரவுகளையும், தனலாபம் மற்றும்
பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் தை மாதம் முழுவதும் எந்த விதமான பணச் சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும்.
ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில்
அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.
பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
உங்களின் ராசிநாதன் குருபகவான் உச்சத்தில் இருப்பதால் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. பெண்கள் விஷயத்தில் மனக் கசப்புக்கள் வரும்
என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும்.
மகரம்
தை மாதம் முழுவதும் இரண்டு பதினொன்றுக்குடைய தனலாபாதிபதிகளின் பரிவர்த்தனையும் பாக்கியாதிபதி புதனுக்கும், ராசிக்கும் இருக்கும் உச்ச குருவின் பார்வையும்
மிகவும் மேன்மைகளை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷப்படக் கூடிய நிகழ்ச்சிகளும், தொழிலில் பணவரவு மற்றும் பொருளாதார மேன்மைகளும் உள்ள
மாதமாக இருக்கும் என்பது உறுதி.
குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக
வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச்
சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு
தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும்.
மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.
கும்பம்
மாதம் முழுவதும் ராசியில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு பெண்களால் எரிச்சலையும், அவர்கள் மூலமான எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த
மாதம் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செலவு செய்வது நல்லது.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால்
தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால்
உதவிகள் இருக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்
படுவது நல்லது.
இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின்
எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன்
கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.
மீனம்
மீனநாதன் குருபகவானின் உச்ச நிலையை விட உங்கள் ராசியின் எதிர் தன்மையுடைய கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் மாதம் முழுவதும் பதினொன்றாம் இடத்தில் சுப தன்மை
பெற்று குருவின் பார்வையிலும் இருப்பதால் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும்
ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும்.
குருபகவான் உச்சம் பெற்று பார்ப்பதால் பாக்கிய ஸ்தானம் வலுப் பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில்
செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும்.
வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது.
செவ்வாய் பரிவர்த்தனை வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும்.
நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலை மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள்
நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
No comments :
Post a Comment