Tuesday, November 18, 2014

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 13 (18.11.14)


வி. சண்முகம், கூடுவாஞ்சேரி.

கேள்வி :

குரு
சனி
செவ்
சுக்
கே
ராசி
சூ
சந்
பு
ரா


என் மகள் பிளஸ்டூ படிக்கிறாள். பத்தாம் வகுப்பில் 500க்கு 480 மார்க் எடுத்து நன்றாக படித்தவள். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அவளது படிப்பு பழைய மாதிரி இல்லை. மந்தமாக இருக்கிறாள். அவளுக்கு டாக்டராக ஆசை. எனக்கு வசதி இல்லை. ஆனால் மெரிட்டில் சீட்டு வாங்கிவிடுவேன் என்கிறாள். மருத்துவர் ஆவாளா? அந்த யோகம் இருக்கிறதா? அல்லது எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் சமூகத்தில் புகழ்மிக்கவளாக வருவாள்?

பதில்:

ரிஷப லக்னம் கடகராசி இரண்டில் சுக்கிரன், செவ்வாய். மூன்றில் சூரியன். நான்கில் புதன், ராகு. பதினொன்றில் புதன். பனிரெண்டில் சனி.

பத்தாம் இடத்தில் கேது இருந்து சூரியனும் குருவும் செவ்வாயும் வலுப்பெற்று இருப்பதால் உங்கள் பெண் நிச்சயம் மருத்துவத்துறையில் இருக்க முடியும். அதே நேரத்தில் நான் ஏற்கனவே சுக்கிரனின் சூட்சமங்களைப் பற்றி எழுதும் போது குறிப்பிட்டபடி பள்ளிப்பருவத்தில் சுக்கிரதசை வரவே கூடாது. குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்.

உங்கள் மகளுக்கு கடந்த ஜனவரிமாதம் முதல் சுக்கிரதசை ஆரம்பித்துள்ளது. ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதியே ஆனாலும் முதலில் சுக்கிரன் ஆறாம் இடத்து பலனையே செய்வார். மேலும் ஏழாம் வீட்டிற்குடைய செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் இந்த வயதிற்கே உரிய சில தடுமாற்றங்களைத் தருவார். சுக்கிரனை போக ஸ்தானத்தில் இருக்கும் நீச சனி பார்ப்பதும் சரியான நிலை அல்ல.

நீங்கள் இருவரும் பெண் மேல் அக்கறை எடுத்து அவள் படிப்பிற்கு உறுதுணையாக இருப்பது நல்லது. மகள் இப்போது படிப்பைத் தவிர வேறு சில விஷயங்களில் நாட்டம் கொள்வாள் என்பதால் பெற்றவர்கள் நீங்கள் தான் பொறுப்பாக இருந்து அவளை சரியானபடி படிக்க வைக்க வேண்டும். ஜாதகப்படி எம்.பி.பி.எஸ் பல்டாக்டர் போன்ற அமைப்புகள் உள்ளன.

ஆர். பி. கும்பகோணம்.

கேள்வி :

குரு
கே
செவ்
சூ
ராசி
சனி
சந்,பு
சுக்
ரா

பெரிய அளவில் மருத்துவம், பரிகாரம் செய்தும் பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. தத்து எடுக்கலாமா? வீடு கட்டும் வாய்ப்பு எப்போது?

பதில்:

கணவனுக்கு ரிஷபலக்னம், ரிஷபராசி. ஏழில் குரு, எட்டில் செவ்வாய், ஒன்பதில் ராகு, பத்தில் சுக்கிரன், பதினொன்றில் சூரியன், பனிரெண்டில் சனி, புதன். மனைவிக்கு ரிஷபலக்னம் மகரராசியாகி லக்னத்தில் செவ்வாய், மூன்றில் சனி, ஒன்பதில் புதன், சுக்கிரன், பத்தில் சூரியன், பனிரெண்டில் குரு கேது.

கணவன் ஜாதகத்தில் ஐந்திற்கு அதிபதி புதன் பனிரெண்டாம் வீட்டில் நீச சனியுடன் மறைந்ததும், மனைவி ஜாதகத்தில் புத்திரக்காரகன் குரு பனிரெண்டில் கேதுவுடன் மறைந்து, ஐந்தாம் இடத்தையும் குருவையும் சனி பார்த்தது கடுமையான புத்திர தோஷம்.

ஆனால் இருவர் ஜாதகத்திலும் குருதசை நடப்பதால் 2015ல் முறையான பரிகாரங்களுக்கு பிறகு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. தத்தெடுக்க தேவையில்லை. வீடு கட்டும் வாய்ப்பு 2018-ல் தான் உண்டு.

எம். என். ராஜ், நரிமேடு, மதுரை.

கேள்வி :

கே
ராசி
ல,சூ
சனி
செவ்
சுக்,பு
சந்
ரா
சந்
செவ்
கே
ராசி
சூ,கு,ரா
சு,சனி
பு


சூ,செவ்
பு
சந்,
சுக்
ரா
ராசி
லக்
கே
குரு
சனி


என் மகன்கள், மகள் மூன்று பேருக்கும் இத்தனை வயதாகியும் திருமணம் ஆகவில்லை. என்ன காரணத்தினால் ஆகவில்லை என்று குருவாக இருந்து நல்ல வழி காட்ட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

மகன் வெங்கடாஜலபதிக்கு கடகலக்னம் தனுசுராசியாகி ராசிக்கு எட்டில் சனி, லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். மகள் முருகேஷ்வரிக்கு ராசிக்கு இரண்டில் செவ்வாய். களத்திரகாரகன் சுக்கிரன் ராகுவுடனும், சனியுடனும் மிக நெருங்கி இணைவு. இன்னொரு மகன் செந்தில்குமாருக்கு ராசிக்கு ஏழில் சனி உச்சம். சனிக்கு செவ்வாய் பார்வை என மூவருக்குமே செவ்வாய் சனி தோஷங்கள் கடுமையாக இருப்பதால் வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை.

இது போன்ற ஜாதகங்களுக்கு முறையான பரிகாரங்களைச் செய்தால் பரம்பொருளின் அருளினால் உடனே திருமணம் நடக்கும். வேலூர் வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் நடக்கும் கந்தர்வ ராஜ ஹோமத்தில் மகன்களும், பார்வதி பரமேஷ்வர சுயம்வர கலா ஹோமத்தில் மகளையும் கலந்து கொள்ளச் செய்து கலச அபிஷேகம் செய்து கொண்டு ஈர உடைகளை தானம் செய்யுங்கள். திருமணம் உடனே நடக்கும்.

மு. ஆறுமுக நயினார், திருநெல்வேலி.

கேள்வி :

ல,குரு
கே
செவ்
ராசி
சனி
சுக்
சந்
ரா
சூ,
பு


நாற்பது வயதாகியும் இதுநாள் வரை திருமணம் நடக்கவில்லை. வேலையும் சரியில்லை. குடும்ப நிலையும் சரியில்லை. திருமணம் எப்பொழுது? எதிர்காலம்தான் என்ன? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் அருள் கூர்ந்து வழிகாட்டுங்கள்.

பதில்:

மேலே உள்ள கேள்விக்கு சொன்ன பதில் உங்களுக்கும் பொருந்தும். சந்திர கேந்திரத்தில் புதன் வலுவாக இருப்பதால் நீங்களே ஒரு ஜோதிட அறிவு உள்ளவராகவோ ஜோதிடராகவோதான் இருப்பீர்கள். எனவே முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.

மீன லக்னம் தனுசு ராசியாகி ராசிக்கு ஏழில் செவ்வாய் எட்டில் சனி லக்னத்திற்கு எட்டில் ராகு களத்திரகாரகன் சுக்கிரன் ஆறில் மறைவு. ஏழாம் இடத்திற்கு செவ்வாய் சனி பார்வை ஏழாம் இடத்தில் ஆறுக்குடைய சூரியன் என கடுமையான தாரதோஷ அமைப்புள்ள ஜாதகம்.

தற்போது ராகுதசையில் குருபுக்தி நடப்பதாலும் லக்னத்தில் உள்ள குரு புதனை பார்ப்பதாலும் வரும் ஜூலைக்கு பிறகு நிச்சயம் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நாகராஜன், தூங்கணாம்பட்டி.

கேள்வி :

செவ்
ரா
ராசி
பு,சூ
சந்
சுக்
சனி,கே
குரு

எனது எட்டுவயது மகள் ஹரிதாவிற்கு நியூமலாரஜிப்படி பெயர் வைத்திருக்கிறேன். இந்த பெயர் சரியானதா? வேறு பெயர் மாற்றலாமா?

பதில்:

வருடாவருடம் குழந்தைக்கு பெயர் மாற்றுங்களேன் நன்றாக இருக்கும். ஒவ்வொரு செமினாரிலும் இதைப்பற்றி சொல்லிச் சொல்லியே அலுத்துவிட்டது. ஞாயிறு நடந்த சேலம் முகநூல் ஜோதிடர் கருத்தரங்கிலும் இதைப்பற்றிச் சொல்லி இருக்கிறேன். பெயர் மாற்றுவதால் பெயரை மாற்றி வைக்கும் ஜோசியருக்குத்தான் லாபம். உங்களுக்கு அல்ல. இப்போதெல்லாம் ஜாதகம் பார்ப்பதை விட நியூமலாரஜிப்படி பெயர் வைப்பதற்குதான் பீஸ் அதிகம்.

பெயரில் ஒரு அதிர்ஷ்டமும் இல்லை. சிலர் பெயர்மாற்றத்திற்கு பிறகு முன்பு இருந்ததை விட சரிவான நிலைக்குச் சென்றிருக்கிறார்கள். நியூமலாரஜி என்பது “ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது போல முழுமையான ஜோதிடசாஸ்திரம் இல்லாத மேற்கு நாடுகளுக்கு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இந்தக்கலை சாப்பாட்டின் ஓரத்தில் வைக்கப்படும் ஊறுகாயைப் போன்றதுதான். சாப்பாட்டைச் சாப்பிடுவீர்களா? ஊறுகாயையா?

தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் வேதஜோதிடம் எனும் முழுமையான கலையை இங்கு நமக்குத் தந்திருப்பதால் இங்கு நியூமலாரஜி தேவையில்லை.

கே. முருகேஸ்வரி, மதுரை.

கேள்வி :

கே
ராசி
சனி
சந்
சுக்,கு
ரா
பு
சூ
செவ்


அப்பா லோடுமேன் வேலை பார்க்கிறார். கஷ்டமான குடும்பம். தெய்வமாக ஒருவர் வந்து அப்பா, அம்மா, தாய்மாமன், அண்ணனாக இருந்து என்னையும் தங்கையையும், படிக்க வைக்கிறார். நான் எம்.காம், சி.ஏ. படித்துள்ளேன். தங்கை பி.இ. படிக்கிறாள். எனக்கு வங்கியில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது? குடும்பக் கஷ்டம் எப்போது தீரும்?

பதில்:

மேஷலக்னம் சிம்மராசியாகி ஐந்தில் அமர்ந்த குருவும், ஏழில் அமர்ந்த செவ்வாயும் லக்னத்தை பார்க்கும் யோக ஜாதகம். பத்தில் சனி ஆட்சியாக இருப்பதால் விரும்பிய வேலை கிடைப்பதற்குத் தடை இருக்கிறது. ஆயினும் தற்போது ஒன்பதாமிடத்தில் உள்ள ராகுவின் தசை ஆரம்பித்து இருப்பதாலும் ராகுவைக் குரு பார்ப்பதாலும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இனிமேல் நல்லகாலம் பிறக்கும். 2016ல் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஜோதிடர் கே .ராமசாமி, பொம்மன்பட்டி.

கேள்வி :

பெண்ணின் ஜாதகத்தில் எட்டில் அசுப கிரகங்கள் இருந்தால் எப்படிப்பட்ட ஆண் ஜாதகத்தை இணைக்க வேண்டும்? ராகு - கேது லக்னம் அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தால் எப்படி பொருத்த வேண்டும்? தகுந்த விளக்கம் தர வேண்டுகிறேன்.

பதில்:

பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் இருக்கும் அசுபக் கிரகங்கள் ஏழாம் பார்வையாக குடும்பவீடான இரண்டாம் வீட்டைப் பார்த்து பலவீனப் படுத்தும் என்பதாலேயே இது தோஷம் எனப்படுகிறது. ஒரு தோஷ ஜாதகத்திற்கு இன்னொரு தோஷ ஜாதகத்தை இணைப்பதே சரி எனும் ஜோதிடவிதிப்படி இரண்டாமிடமும், எட்டாமிடமும் பாதிக்கப்பட்ட ஆணின் ஜாதகத்தை இணைப்பதே சரியாக இருக்கும்.

ராகுகேதுக்களுக்கும் இதே நிலைதான். லக்னம் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்கும் ராகுகேதுகளுக்கு அதே போன்ற ஆணின் ஜாதகத்தையோ அல்லது ராசி மற்றும் ராசிக்கு இரண்டில் இருக்கும் ராகுகேது ஜாதகத்தையோ இணைப்பது சரியாக இருக்கும். இதுபற்றி என்னுடைய இணையதளத்தில் www.adityaguruji.in விரிவாக எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள்.

எம். தாஜ்தீன், திண்டுக்கல்.

கேள்வி :

சனி
சந்
குரு
கே
ராசி
செவ்
ரா
பு
சுக்
சூ


பிளஸ்ஒன் படிக்கும் எனது மகனுக்கு உயர்கல்வி உண்டா? அவனுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி? எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம்?

பதில்:

மகன் முகமதுதாரீக்கிற்கு மிதுன லக்னம் மிதுன ராசியாகி லக்னாதிபதி புதன் ஆறில் மறைந்து லக்னத்தை குருவும் நீச வக்ர சனியும் பார்த்த ஜாதகம். தற்போது சனி தசையில் சுயபுக்தி நடக்கிறது. ஜீவனாதிபதி குரு அந்த பாவத்திற்கு பனிரெண்டில் மறைந்து மூன்றில் அமர்ந்த செவ்வாயின் பார்வையைப் பெற்று கேதுவுடன் இணைந்ததாலும் தற்போது சனிதசை நடப்பில் உள்ளதாலும் உங்கள் மகனுக்கு என்ஜினீயரிங் துறை ஏற்றது. படித்த முடித்தப்பின் வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பார். எதிர்கால வாழ்க்கை அடுத்தடுத்து யோக தசைகள் வருவதால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

2 comments :

  1. அய்யா ஒரு கிரகம் அது இருக்கும் நச்சத்திர அதிபதின் மூலமாக தான் வேலை செய்யுமா...? உதாரணமாக : சிம்ம லக்கணம் சூரியன் சிம்மத்தில் ஆட்சி ஆனால் சூரியன் தன்னுடய சொந்த நட்சத்திர காலில் உட்காராமல் சுக்ரியனுடய நட்சதிரம் பூர நட்சத்திர காலில் இருந்தால் சூரிய திசை வேலை செய்யுமா ....? சூரிய திசை முழுபலன் தருமா அல்லது சுக்ரியனுடய பலன் வேலை செய்யுமா ...?

    ReplyDelete
  2. சூரியன் தன் பலனை மூன்று பத்தாம் பாவங்களின் வழியாக செய்யும்

    ReplyDelete