Monday, February 24, 2014

நீச்சபங்க ராஜயோகம்., : சில உண்மைகள்.

உங்கள் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக்கிரகங்கள் வலிமை அடைந்தும், தீமை செய்யக்கூடிய பகைக்கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதி.

ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்து இருக்கிறதா என்பதை அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் நிலையை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேதஜோதிடம்.

1) உச்சம்
2) மூலத்திரிகோணம்
3) ஆட்சி
4) நட்பு
5) சமம்
6) பகை
7) நீசம்

மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு நாம் மதிப்பெண் தருவதாக இருந்தால் நீசநிலைக்கு பூஜ்யமும், பகைக்குப் பத்து மதிப்பெண்களும், சமநிலைக்கு இருபதும், நட்புக்கு நாற்பதும், ஆட்சிக்கு அறுபதும், மூலத்திரிகோணம் எண்பது, உச்சம் நூறு எனத் தோராயமாகக் கொள்ளலாம்.
இதன்படி ஒரு கிரகம் தனது வலிமை அனைத்தையும் இழக்கின்ற நிலை நீசம் எனப்படுகிறது. 

நீசநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் தனது காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தர இயலாது என்றும் ஜோதிடசாஸ்திரம் சொல்லுகிறது.

அதாவது ஒரு கிரகம் நீசம் பெற்றால் அக்கிரகம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முழுமையாக உங்களுக்கு கிடைக்காது. அந்தக் கிரகத்தால் உங்களுக்கு எவ்வித பயனும் இருக்காது என்பது இதன் உட்பொருள்.

விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பது இருந்தே தீரும் என்பதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவைப் பெறுகிறது என்பதும் வேதஜோதிட விதிதான்.

அதன்படி இந்த நீசபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தைப் பெறும் பொழுது அது உச்சத்தை விட மேலான ஒரு வலிமையை அடையும் என்பதே.

இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும்.

அதே நேரத்தில் இன்னொரு விளைவாக நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்தக் கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தித்தான் பிறகு உங்களை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீசம் அடைந்து முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முதலில் கஷ்டப்பட்டு ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிறகு பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவீர்கள்.

அதுபோலவே நீசக்கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்துதான் பிறகு வளர்ச்சி பெறும்.

முறையான நீசபங்கம் என்பது உச்சத்தை விட மேலான நிலை என்பதற்கு என்னால் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

எடுத்துகாட்டாக, சூரியன் நீசம் பெற்றால் அரசுவேலை இல்லை. அரசலாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது! 

சரி....

‘அரசன்’ என்றால் நம்மில் பெரும்பாலோருக்கு யார் சட்டென்று நினைவுக்கு வருவார்?

மன்னனாகும் வாய்ப்பு துளிக்கூட இன்றி இளையவனாகப் பிறந்து, மூத்த அண்ணன் கொலையுண்டதாலும், முறை அரசனான சித்தப்பன் இறந்ததாலும், வாழ்வின் பிற்பகுதியில் தற்செயலாக அரசனானவன், இந்தியாவில் இருந்த அரசர்களிலேயே வெளிநாடுகளை வென்ற ஒரே நம் தமிழ்ப் பேரரசன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் நினைவில் உள்ளவன், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற “ராஜராஜன்” எனும் பெயர்பெற்ற நம் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சூரியன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவன்..!

சுக்கிரன் நீசம் பெற்றால் கலைத்துறையைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன் தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்க முடியாது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சுக்கிரன் நீசமான அமைப்பில் பிறந்தவர்.

புதன் நீசம் பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத்துவம் இருக்காது. சிந்தனைத்திறன் சிறிதளவே இருக்கும். கணிதத்திறன் வராது. எதையும் புதிதாக கண்டுபிடிக்க முடியாது.

உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி, பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்த மேதை ஐன்ஸ்டீன் புதன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.

குருபகவான் நீசம் பெற்றால் ஆன்மீகத்தில் உயர்வில்லை. தெய்வ அருள் கிடைக்காது. ஆனால் தன் பக்தர்களால் தெய்வத்தின் நிலையில் வைத்து வணங்கப்படும் புனிதர், பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா குருபகவான் மகரத்தில் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.

இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.
அதேநேரத்தில் இது போன்றவர்கள் முதலில் வாழ்வில் நீச நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து பிறகு தம் துறையில் உச்சத்திற்கு சென்றவர்களே.

பெரும்பாலான ஜோதிடர்களுக்கு இந்த நீசபங்கத்தை அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். உனக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறது என்று ஜாதகரிடம் சொல்லுவார். கேட்பவரும் ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில் அந்த தசை அவரிடம் உள்ளதையும் பறித்துக் கொண்டிருக்கும்.

அப்படியானால் முறையான நீசபங்கம் என்பது என்ன? அதை எப்படிக் கணக்கிடுவது?

அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. முக்கியமானவைகளைச் சொல்கிறேன்.

1) நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுவது.
2) நீசக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது.
3) நீசன் வர்க்கோத்தமம் பெறுவது.
4) நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது.
5) நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது.
6) நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது.
7) நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆவது.
8) நீசனை இன்னொரு நீசக்கிரகம் பார்ப்பது
9) நீசன் வக்கிரம் அடைவது
10) நீசன் அம்சத்தில் உச்சம் பெறுவது

இது போன்ற விதிகளில் பெரும்பாலானவற்றின்படி ஒரு நீசக்கிரகம் நீசபங்கத்தைப் பெற்று, அதாவது ஒரு நீசக்கிரகம், சந்திரகேந்திரத்தில் இருந்து, அவனுடன் உச்சக்கிரகமும் இணைந்து, நீசன் வர்க்கோத்தமும் பெற்று, நீசனாதன் சந்திர கேந்திரத்தில் இருந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையும் பெற்று இதுபோல அதிகமான முறைகளில் நீசபங்கம் பெற்றால், அதுவே முறையான நீசபங்கம் ஆகும்.

இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்தக் கிரகம் நீசபங்க ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீசன் உங்களை தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வான்.


( பிப்ரவரி 28,2-2014 பால ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

125 comments :

  1. முதல் விதி சரி. அம்சத்தில் நீசபங்கம் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. நன்றி குரு
      கும்பம் லக்கினம் துலாம் ராசி
      7ம் அதிபதி 9ல் நீசம் 10ல் சுக்கிரன்
      எனக்கு பலன் இருக்கா
      அல்லது திருமண தடையா

      Delete
    2. Yuvaraja.g. .
      16/5/1984
      Time..6.40pm
      Virichigam. .kettai
      Inda guru peyarchi epdi irukku

      Delete
    3. 9.8.1985 time 1.25pm. Theni dist allinagaram friday aadi 25 viruchika lakinam mesha rasi kirithigai star. Lakinathuku 3 am idam makarathil guru nisam + vakiram. 6 il chadhiran + ragu 8 il sukiran 9 il (kadakatthil) suriyan + sevai nisam + puthan vakiram 12 il sanibhagavan utcham + vakiram iyya neengal sollum vithi porundhuma ippo ragu disai guru disai yappadi irrukum

      Delete
    4. வணக்கம் ஐயா, எனது லக்னம் மிதுனம், லக்னதில் புதன், சூரியன் ,செவ்வாய் . 2ல் சந்திரன், 5ல் சனி(உச்ச வக்கிரம்) கேது,8ல் குரு நீச்ச வக்கிரம், 11ல் சுக்கிரன் ராகு. அம்சதில் குரு உச்சம்.ஐயா எனது ஜாதகதில்
      நீச பங்க ராஜயோகம் உண்டா ?

      Delete
    5. Needs varkotham entral Enna athu pol rasiaythipathi parivarthanai entral Enna

      Delete
    6. Guruji, கும்ப lagnam கடக ராசி பூச நசதிரம்.
      1 இல் கிரகங்கள் இல்லை
      2 இல் கிரகங்கள் இல்லை
      3 இல் புதன்
      4 இல் சூரியன்
      5 இல் சுகிறன்+கேது
      6 இல் குரு + சந்திரன் + செவ்வாய்
      7 இல் கிரகங்கள் இல்லை
      8 இல் கிரகங்கள் இல்லை
      9 இல் கிரகங்கள் இல்லை
      10 இல் கிரகங்கள் இல்லை
      11 இல் ராகு
      12 இல் சனி
      இந்த ஜாதகத்தில் உள்ள யோகாகள் என்ன பலன் தரும்

      Delete
  2. 3ம் இடத்தில் துலாம்மில் லக்னாதிபதி சூரியன் நீசம்.அத்துடன் புதன் மற்றும் சுக்கிரன் இருக்கிறது.புதன் திசையில் சுக்கிரன் புத்தியில் நீசபங்க ராஜயோகம் ஏற்படுமா என்று சொல்லுங்கள்.நன்றி.
    http://bullsstreetdotcom.blogspot.in

    ReplyDelete
  3. 8 ம் இடத்தில் நீச பங்கம் அடைவது பலன் தருமா ?
    நான் தனுசு லக்னம் எனக்கு 8 ம் இடத்தில் செவ்வாய் நீசம் பெற்று உச்ச குருவுடன் கடகத்தில் உள்ளார். சந்திரன் மீனத்தில் உள்ளார் இது முறையான நீச பங்க ராஜயோகம் தானா ? பதிலுக்கு காத்துகொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  4. முறையான நீசபங்கம் தான். ஆனால் எட்டில் மறைந்தது யோகபங்கம்.

    ReplyDelete
    Replies
    1. யோக பங்கம் என்றால் என்ன ஆகும் ? யோக பங்கம் ஏற்பட்டால் முழுமையான பலன் தருமா அய்யா ?

      Delete
    2. முழுமையான யோகம் கிடைப்பது கடினம்

      Delete
    3. சந்திரனுக்கு 4ஆம் இடம் நீசபங்க பலன் கிடைக்குமா?

      Delete
    4. துலா லக்னத்திற்கு 4இல் குரு சந்திரனுடன் இணைந்து குரு சனி பரிவர்த்தனையும் பெற்றுள்ளது.இது எதிரிகளைத்தரும் அமைப்பா ஐயா..

      Delete
  5. மிக்க நன்றி அய்யா. விஞ்ஞானி ஆவதற்கு ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுரை தாங்கள் என்று பணிவுடன் கேக்கிறேன்.

    ReplyDelete
  6. ayya enaku guru makarathil neesam.. ennudaya laknam makaralaknam enaku neesa pangam ullatha .ippoluthu ragu dasai nadakirathu,aduthu vara ulla guru thasai nallathu seyyuma

    ReplyDelete
    Replies
    1. Me too. Guru necham in my 7 th house மகரம் .he is with சுகிரன் ,சூரியன் அண்ட் சந்திரன்.
      சிவம் has allowed me to build a சந்நிதி for him .Om நமசிவாய

      Delete
  7. ayya enaku mithuna lagnam kanni raasi.budhan meenathil neesam petru,sukan sooryan udan sernthu irukirathu.guru 12th place irukirar.rishabathil guru irukirar avarudan sevai serthu irukirar.ennudaiya jathagathil budhan neesabangam adaithatha solungal

    ReplyDelete
  8. புதன் நீசபங்கம் பெற்று இருப்பதால்தான் இந்த பிளாக்கை படிக்கும் ஆர்வம உங்களுக்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir enaku meena lagnam enaku 7 th place illa sukran ragu ( kanni) irku navamsathil sukran athe nilayil ular ennaku necha banga raja unda

      Delete
  9. குருஜி,

    சிம்மலக்கினத்திற்கு பத்தில் இருக்கும் சுபத்தன்மை பெற்ற புதனிடம் இருந்து என்ன வகையான பலன்கள் கிடைக்கும்.இதில் ஒரு சிறப்பு சாரம் கொடுத்த சூரியனும்,வீடு கொடுத்த சுக்கிரனும் உச்சம்.பலனுக்கு புதன் தசை வரும் வரை காத்திருக்க வேண்டுமா?.தற்போது குரு தசையில் சனி புத்தி நடைபெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சிம்ம லக்னத்தின் அதிபதியான சூரியனுக்கு நண்பரான புதன் பத்தாமிடத்தில் அமர்வது நல்லது. இதனால் பேச்சு சிறக்கும். இரண்டு பதினொன்றுக்குடையவர் பத்தில் இருப்பது தனயோகம்.வருமானத்திற்கு குறைவில்லை. ஆனால் ஒரு கிரகத்தின் முழு பலன் அதன் தசையில் மட்டுமே கிடைக்கும்.

      Delete
    2. நன்றி குருஜி .சூரிய,சந்திரர்கள் மற்றும் கேதுவைப் பற்றிய சூட்சும நிலைகளைப் பற்றிய விளக்கக் கட்டுரைக்காகக் காத்திருக்கிறோம்.

      Delete
  10. Sir,
    Plz explain ... (Kanniya lagnam)
    Guru Neecham in Birth Chart
    Guru Utcham in Navamsam (Kadagathil)

    ReplyDelete
  11. Sir,
    Kindly clarify my doubt
    For Kanniya Lagnam
    Guru Neecham in Birth chart (5th house)
    But...
    Guru Utcham in Navamsam chart (Kadagathil) (12th house)
    Sir, Can we consider it as "Neecha Banga Raja Yogam" according to the 10th point.
    Please explain...

    ReplyDelete
  12. நான் கடக லக்கினம் ரிசப ராசி, துலாமின் வீட்டில் குரு,புதன்,சுக்கிரன் ஆட்சி,சனி உச்சம்,
    சூரியம் நீசம்.சூரியன் சனி சேர்க்கை முறையான நீச பங்க ராஜ யோகமாக கருத முடியுமா.விளக்கம் தரவும்.

    ReplyDelete
  13. ayya naan 26.10.1988 (7.8am) piranthirukiren........thulam lakinathil suriyan neesam.......12il lakinathibathi sukiran puthanudan neesapanga yogam........yen vaazhvu eppadi irukkum...........
    please reply.................

    ReplyDelete
  14. 29/08/1989 andru 9.46 am il perantha enaku thula lakanam, kadaga rasi, 12il sukkiran buthanodu sernthu ullar.. intha neecha panga rajayoga palan parti koora mudiuma???

    ReplyDelete
  15. பாதகாதிபதி நீசபங்கம் ஆனால் என்ன பலன் என்று சொல்லவும் (கன்னி லக்கினம் 5ல் குரு நீசம் அம்சத்திலும் குரு நீசம் நல்ல பலன்கள் நடக்குமா அல்லது தியபலன் நடக்குமா. குரு 4,7க்கு உடையவர்கள் அதன் காரகதுவங்கள் எப்படி)

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்,
    நான் கன்னியா லக்கினம். லக்கினத்தில் சூாியன், செவ்வாய்-யோடு சோ்ந்து உச்சம் மற்றும் வா்க்கோத்தமம் பெற்ற புதனுடன், நீசம் பெற்ற சுக்கிரன் இணைந்துள்ளாா். எனக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுமா? தயவுசெய்து கூறுங்கள் ஐயா! நன்றி!

    ReplyDelete
  17. அய்யா வணக்கம்,

    நான் மேஷ லக்கனம்,துலாம் ராசி,சுவாதி 3ம் பாதம்

    எனக்கு லக்கனாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம்.
    செவ்வாய்,சுக்கிரன் இணைவு.

    ReplyDelete
  18. அய்யா நான் தனுசு லக்னம், 10ஆம் இடமான கன்னியில் சுக்ரன் நீச்சம், சிம்மத்தில் புதன், எனக்கு சுக்கரன் நீச பங்கம் அடைந்துள்ளதா? சொல்லுங்கள் ஐயா நன்றி...

    ReplyDelete
  19. அய்யா நான் கன்னி லக்னம் 7 ஆம் இடத்தில் குரு, ராகு உள்ளது. குரு ரேவதி நட்சத்திரதில் உள்ளார். எனக்கு நீச்சபங்கம் அடைதுள்ளதா ?

    ReplyDelete
  20. IYYA EN PEYAR PRABHAKARAN ...JADHAGA KATTHIL KADAGA LAGNAM MAGARATHIL GURU NEECHAM.........AANAAL NAVAAMSATHIL MAGARA LAGNAM KADAGATHIL GURU UCHAM .ENAKKU NEECHA PANGA RAJA YOGAM ULLATHA?

    ReplyDelete
  21. மீன லக்னம் மீன இராசி, சனி பகவான், 8 ல் உச்சம், கேதுவும் 8 ல். அஷ்டாமதிபதி லக்னத்தில் உச்சம். குரு 11 ல் நீச்சம், இப்படி நிலையில் நீச பங்க இராஜ யோகம் உண்டா??

    ReplyDelete
  22. ஜயா 12ல் சுக்கரன் உச்சம் எதாவுது பலன் இருக்க

    ReplyDelete
  23. Iya enaku meena rasi meena lakinam, lakinathil irunthu 7 m kattathil kanni rasil sukiran neecham adainthular. laknathil chanthiran ullar enaku neecha banga rajayogam unda?

    ReplyDelete
  24. ஐயா எனக்கு நீச கிரகம் ஏதும் இல்லை. இதற்கு என்ன பலன் ? நீச பங்கமே கிடையாதா ?

    ReplyDelete
    Replies
    1. சிறந்த கேள்விக்கான விருது தங்களுக்கு காத்திருக்கிறது

      Delete
    2. வணக்கம் குருவே,

      நான் செந்தமிழ் செல்வன் பிறப்பு (10.12.1997) அன்று மதியம் 1.33 மணி திருவாரூர்.
      எனக்கு
      லக்கின(மீன லக்கினம்) அதிபதி குரு 11ல் நீசம்
      ராசி(மேஷ ராசி )அதிபதி செவ்வாய் அங்கே உச்சம்

      லக்கினத்தில் தனித்த சனி
      குரு சனி பரிவர்த்தனையாக உள்ளது

      குரு வுக்கு கேந்திரத்தில் வளர்பிறை சந்திரன் (துவாதசி)

      இது எப்படிபட்ட நீசப்பங்க யோகம் குருவே??

      Delete
  25. நன்றி குரு
    கும்பம் லக்கினம் துலாம் ராசி
    7ம் அதிபதி 9ல் நீசம் 10ல் சுக்கிரன்
    எனக்கு பலன் இருக்கா
    அல்லது திருமண தடையா

    ReplyDelete
  26. aiyya enaku ettam athipathi sukiran 12il neesamaki santhiranku 7ilum amsathil utchamum pedrular ithu palan enna aiyya?

    ReplyDelete
  27. neesa varkothamam endral enna

    ReplyDelete
  28. DOB : 18/06/1985
    Time of Birth : 08:27 AM
    Place : Erode.

    Thirumanam yeppoluthu agum? sariyaga sollavum.........
    Arasiyal yeppadi irukkum

    ReplyDelete
  29. Dear respected sir, my name is ASWIN PRAKASH
    MY DOB 18 04 1992
    PLACE OF BIRTH COIMBATORE
    TIME OF BIRTH: 5 15 PM
    I HAVE NEECH BANGA RAJAYOGAM TELL ME WHEN WILL I ENJOY. I AM SUFFERING LOT LOST MY EDUCATION COMPLETELY.

    ReplyDelete
  30. My husband born on 16.04.1978 Midnight 12:12 AM at Tiruchengode.He is suffering a lot in recent times what could be the reason Any remedy is their.When we will lead peaceful life?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Dear Sir,

    DOB :14-03-1983, 9.09AM

    எனக்கு மேச லக்னம், பண்ணிரெண்டில் செவ்வாய் மறைந்து விட்டார்.

    மீனத்தில் புதன் நீசமாகி, உச்ச சுக்கிரனுடனும், மறைந்த செவ்வாயுடனும் சேர்ந்து உள்ளார்

    இதனால் நீசபங்க ராஜயோகம் உள் ளதா, செவ்வாய் தோசம் உள்ளதா என்று கூறவும்.

    எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது. அதேபோல் நன்றாகவும் perform பண்ணவும் செய்வேன்.எந்த courseஐ எடுத்தாலும் certificate வாங்கும் போது நிறைய தடைகள் ஏற்பட்டு படித்த அனைத்தும் lose ஆகி விடுகிறது...

    Thanks in advanced...

    ReplyDelete
  33. வணக்கம் குருவே,
    எனக்கு ராசியில் கடக்க லக்னம் 4ல் செவ்வாயும் கேதும், 5ல் சனி, சுக்கிரன் மற்றும் புதன், 6ல் சூரியன், 7ல் (மகரத்தில்) குரு, 10ல் சந்திரனும் ராகுவும்.
    அம்சத்தில், கன்னி லக்னம் 2ல் சனி(துலாம்), 5ல் செவ்வாயும் கேதும்(மகரம்), 7ல் மீனத்தில் சுக்கிரன், 9ல் சந்திரன்+சூரியன் (ரிஷபம்) மற்றும் 11ல் கடகத்தில் குரு+ ராகு.
    குருவே எனக்கு நிச்ச பங்க ராஜயோகம் இருக்கிறதா? தற்பொழுது எனக்கு வயது 30 ஆகிறது. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் குருவே ?.

    ReplyDelete
    Replies
    1. 3ல் விருச்சகத்தில் புதன்

      Delete
  34. Vanakkam Ayya Avargale,
    En peyar Manikandan. Date of Birth 27-07-1977 time 5.30 am. Viruchigam Rasi, Kataga lagnam. Lagnathil suriyan + Sani. 2 nd house buthan. 3 rd hosue Rahu. 4 - No graham, 5 th house chandran 6 th house 7th house 8 th house empty 9 th house Kethu 10 th house empty. 11 th house sevvai + sukkiran 12 th house guru.

    Enaku Neecha panga raja yogam ullatha. Thayavu seithu enaku kooravum. Tharpothu suriya disai nadakirathu. 7 1/2 sani nadakirathu. epadi irukum Endru thayavu seithu koorungal. (sila problem vanthalum tharpothu solve aagi kondu than irukirathu)

    ReplyDelete
  35. வணக்கம்,
    நான் மீனம் லக்கணம், மேஷ ராசி. எனக்கு துலாமில் சூரியனுடன் சுக்கிரன் வக்கரம் பெற்றுள்ளது. இது நீசபங்க ராஜயோகமா ? இப்போது சந்திரன் திசை சுக்கிர புத்தி நடக்கிறது. நன்றி

    ReplyDelete
  36. வணக்கம் சார்...

    கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ்....
    ராசி கட்டத்தில் 5ல் கும்பத்தில் சனி.(துலா லக்னம்)
    நவாம்சத்தில் 11 மேஷத்தில் சூரியன் & சனி (மிதுன லக்னம்)
    சனிக்கு நீச்சபங்கம் உண்டா சார்?

    நன்றிகள் & மரியாதைகளுடன்
    பாலாஜி

    ReplyDelete
  37. Iyya,
    Please, bathil sollavum. Kanni lagnam
    Guru rasi il 5 il neecham (amsathil ucham kadagathil - 12 aam veetil)
    Chandran 7il poratathi Nakshatra thil
    Sani viruchagathil ( sani parvai guru vin mel ulathu)
    Marriage life pathikuma
    Neechabhagam

    ReplyDelete
  38. sir,my rasi mithunam,lagnam kanni.puthan neecham .puthan dasa start aga ullathu nallathu nadakuma?suriyan ucham.govt exam pasd.but thadangal ulladhu velai kidaikuma? lagnathuku 6 il guru.10 il moon. 8 il suriyan,ragu,sukkiran.2 il kethu.apr 16 1986.thank u

    ReplyDelete
  39. sir, kadaka lagnam virichiga rasi moon neesam sevvai 12il sukkranudan neesa pangam irukka? melum 7am athipathi sani 10il neesam mattrum vakramum varkottamum petru irukkirathu.9il(meenathil)guru vakkra nilaiyil.neecha pangam unda?

    ReplyDelete
  40. ஐயா, என்னுடையது மேஸ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் பிறந்த மாதம் ஆண்டு -31-10-1990, 6:40 மாலை.. எனக்கு சூரியன் நீசபங்கம் ஏற்பட்டு உடன் புதனும் இணைந்துள்ளது. இது லக்கனத்தின் ஏழாம் வீடான துலாமில் இம்மூன்று கிரகங்களும் உள்ளன.. தற்போது நடைபெறுவது கேது திசையில் சுக்கிர புத்தி.. எனக்கு அரசு வேலையில் அலுவலர் நிலை பணி கிடைக்குமா அய்யா?

    ReplyDelete
  41. sir,

    Lagnam thulam,12 il sukran,suriyan,sanieswaran,bhudan irrukirathu ithu neesapanga rajayogama, pls tell me

    ReplyDelete
  42. Sir book available irukka.iruntha book name sollunka

    ReplyDelete
  43. Hi sir .. Enaku mesam laknam,4th place la sevvai + guru iruku..idhu enaku positive ah illa negative ah

    ReplyDelete
  44. குருஜி எனது மேஷ லக்கினத்தில் சுக்ரின், சனி புதன் 2இல் செவ்வாய் 3ல் சந்திரன் 5லி கேது 7யல் குரு 11யல் ராகு 12லி சூரியன் உள்ளனர் சனி நீச்ச பங்க ராஜா யோகம் உள்ளதாக சொல்கிறார்கள். அனால் எந்த முன்னேற்றமி இல்லை ப்ளீஸ் நீங்கள் செல்லங்கள் dob 12.04.1970 7.30am mayavaram

    ReplyDelete
  45. Suriyan 3la neetcham but amsathala utcham?

    ReplyDelete
  46. My rasi menan lakinam menan kuru, santhiran,raku lakinathil

    ReplyDelete
  47. Good and easy useful note. Thank you, sir.

    ReplyDelete
  48. ஐயா.,, வணக்கம்
    நான் தனுசு ராசி விருச்சிக லக்னம் கடகத்தில் செவ்வாய் நீசம்.

    ReplyDelete
  49. Hi Guruji,

    I have kumbha lakna
    1)ruchaga yogam(mars in 10th house Atchi)
    2)Parivarthana yogam( 7th house sun in 8th house and 8th house mercury in 7th house)- Venus also in 8th house
    3)Sakada yogam ( Guru in 11th house and moon in 4th house)
    4)Neesapanga raja yogam ( Moon and Ragu in 4th house which is Rishabha rasi)

    Kedu with Mars in 10th house. Sani in 9th house. I hope I have given all planet positions.

    CAn you tell me how the neesabanga raja yogam effects me . DOB 16.9.84,16:55 , Coimbatore.

    ReplyDelete
  50. அய்யா எனது மகன் விளையாட்டுத்துறையில் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறான். கடக லக்னம்; மூல நட்சத்திரம். ஐந்தாம் வீட்டாதிபதி செவ்வாய் லக்கினத்தில் நீசம் பெற்றுள்ளார். சுக்கிரன், குரு, புதன் மற்றும் ராகு ஆகிய நன்கு கிரகங்களும் துலாம் ராசியிலும் சூரியன் கன்னி ராசியிலும் அமைந்துள்ளனர்.
    தாங்கள் கூறிய லக்கினத்துக்கு கேந்திரம் என்று லக்கினத்தில் செவ்வாய் இருப்பதை எடுத்துக்கொள்ள முடியுமா. மேலும் நீசக்கிரகத்துக்கு வீடு கொடுத்த சந்திரன் ஆறாம் வீட்டில் உள்ளார். இதை சந்திரனுக்கு ஒன்றாம் கேந்திரம் என்று எடுத்துக்கொள்ளலாமா.

    தயவுசெய்து பதில் கூறவும் அவனது கடின முயற்சி வீணாகப்போயிவிடுமா.

    ReplyDelete
    Replies
    1. 5) நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது

      நீசபங்கம் விதிகள்

      Delete
    2. 5) நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது

      நீசபங்கம் விதிகள்

      Delete
  51. ஐயா, துலாம் ராசி, மகர லக்னம். லக்னாதிபதி சனி லக்னத்தில் உள்ளார். இதை ஒருவர் நீசபங்கம் என்று சொன்னார். இதன் பலன்கள் என்ன?

    ReplyDelete
  52. Salutations Guruji , Your Article is very much helpful in understanding Astrology. I'm having a doubt. What if, a Graha which is Neecha gets Dig Bala by its placement. Though it does not come under the Conditions , will the said Neecha Graha get any Strength.

    ReplyDelete
  53. Sir,
    Mercury, Venus,Moon in Meenam & Guru in Kanni & Viruchga Lagnam.Is it Necha banga Raja yogam.
    Sir, My DOB 19-04-93,Time - 9.30pm, Vellore. Sir, Please tell me how many Necha Panga? & Is it Necha Panga Raja yogam? & Necha Parivarthana yogam gives good or bad effect? & When Mars Varkothamam works? & Sukran state is Ucha Vakram. Is it give good effect? & Mercury is Necha Panga or Nechabanga Raja yogam

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. Ayya,
    En peyar Ramesh, enakku 7 il thanitha Guru. Itharku miga chirantha pariharam enna?

    Nandri ayya.

    ReplyDelete
  56. Ayya,
    En peyar Ramesh, enakku 7 il thanitha Guru. Itharku miga chirantha pariharam enna?

    Nandri ayya.

    ReplyDelete
  57. Vanakkam iyya
    Meena lagnam danusu rasi and lagnathipathi neesam also sevvai neesam
    Is there any benefit in this combination

    ReplyDelete
  58. Ayya meena lagnam, rishabha rasi,
    Mercury, sun and Venus in mesha,moon and rahu in rishabha, Saturn in thula, Mars in viruchaga,Jupiter in dhanusu,ketu in Maharashtra pls tell me about the present time sir..

    ReplyDelete
  59. 03.05.1984-date of birth
    4.30am-time of birth pls tell me the yoga's sir...

    ReplyDelete
  60. அய்யா வணக்கம். என் ஜாதகத்தில் உள்ள அமைப்பு இது.
    கும்பம் லக்கனம். மகரம் ராசி. 2, 11க்கு உடைய குரு 10ல். 3, 10 க்குடைய செவ்வாய் மகரத்தில் உச்சம். 1, 2 க்குடைய சனி 3 ல் நீசம். இந்த நீசபங்க ராஜயோகம் (பரிவர்த்தனை, சந்திர கேந்திரத்தில் (1) செவ்வாய், சந்திர கேந்திரத்தில் சனி, செவ்வாயின் 4ம் பார்வையில் சனி) நல்ல பலன் தருமா? எனக்கென எந்த சொத்துமே சேர்க்கவில்லை. இறைவன் அருள் எனக்கு உண்டா?

    உங்க தெய்வீக அருள்வாக்கு எனக்கு கிடைக்கட்டும். மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  61. வணக்கம் ஐயா எனக்கு தனுசு லக்னம் குரு மகரத்தில உள்ளது ஆனால் மீனத்தில் சுக்ரன் உள்ளது நவாம்சம் கட்டத்தில் குரு கடகத்தில் உள்ளது

    ReplyDelete
  62. வணக்கம் ஐயா நான் கன்னி லக்னம் ரிஷப ராசி 8 ல் சனி சூரியன் 5 ல் செவ்வாய் ராகு சனியால் நீச சபங்க ராஐயோகம் உண்டா தற்போது சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது மீனத்தில் சுக்கிரன் புதன்

    ReplyDelete
  63. Jegan.A
    வணக்கம் ஐயா நான் கன்னி லக்னம் ரிஷப ராசி 8 ல் சனி சூரியன் 5 ல் செவ்வாய் ராகு சனியால் நீச சபங்க ராஐயோகம் உண்டா தற்போது சனி தசை சுக்கிர புத்தி நடக்கிறது மீனத்தில் சுக்கிரன் புதன்

    Reply

    ReplyDelete
  64. sukran aatchi vakram,suriyan nicham, ethu nicha panga raja yokama! ingea sukran nilai ena? 0' 50,

    ReplyDelete
  65. Vanakkam Ayya...Enakku Midhuna Raasi,Viruchiga Lagnam. Enakku Ippodhu Sani Dhisai Nadakkiradhu.Enakku Neesabanga Rajayogam Irukkiradhaa? or Varumkaalangalil Vaaippu irukiradha?

    ReplyDelete
  66. Iyya enakku 5il sevvai neesam pariharam solunga

    ReplyDelete
  67. நீசன் லக்ன கேதிர வீடுகளில் இருக்கலாம் என்றால். லக்ன வீட்டின் இரு புறம் நீசன் இருப்பதா.?விளக்கவும். 11-09-2011 திண்டுக்கல் SANJOY 06.20 காலை. Please Replay.

    ReplyDelete
  68. Iyya,

    Vrichaka lagnam. laknathipathi chevvai along with sukran and rahu. Whether will it affect my ayu.

    Please confirm.

    Muraleedharan
    d.o.b: 16.08.1964
    time: 12.30 (afternoon)
    Place: Chennai

    ReplyDelete
  69. Sir enaku 1st house kanni,guru sukran
    4th house raahu
    5th house sani
    7th house chandran
    10th house sevvai kithu
    12th house suriyan buthan
    Sukran neecha bangam ullatha

    ReplyDelete
    Replies
    1. Same as my horoscope..I got married when my sukra dasha and sukra Bhukthi started , I became wealthy but I can’t be with my family and in my big house in the first ten years of sukra dasa.. Always I have longings about my second and ninth house..Now trying for govt job and waiting for change

      Delete
  70. Sir sukran neecham in kanni 1st house
    Chandran in 7th house
    Sukra dhasai start in 36years
    Eppadi irukum

    ReplyDelete
  71. ஐயா..எனது பிறந்த தேதி 16.04.1986 .இரவு 10.30..ஓமலூர்..சேலம்.....எனது ஜாதகத்தில் புதன் மீனத்தில் நீசம்..சந்திர கேந்திரத்தில் உள்ளதால் நீசபங்கம் பெற்றுள்ளதா?தற்போது நடக்கும் பதன்தசை நற்பலனை தர வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. Haha my date of birth 26.11.1970
    1.02 Am
    enakku Sanibagavan 9 Ammidathil Neesam Petruvitar 48 vasthu varai poor man at when I will get Bright feature


    ReplyDelete
  74. Vanakkam Iyya,

    Vrichaga lagnam, vrihaga rashi, chandran lagnathil irukkiradhu. Guru rishabathil (7) parvaiyagi lagnathai parkirathu. Neechapangam ullatha ?

    Ungal bathilukka kathurukiren.

    DoB: 16.08.1964 - 12.30 mathiyam, Chennai. Name: Baskar, Delhi

    ReplyDelete
  75. Ayya enathu jathagathil 7th house kani il sevai and ragu ullathu kastam ullatha ayya

    ReplyDelete
  76. ஐயா கடகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் சந்திரன் இதில் இரண்டு நீசபங்கம் உள்ளதா? ஐயா இது எப்படி பலன் செய்யும்?

    ReplyDelete
  77. ஐயா என் பெயர் Prabhakaran எனக்கு கடகத்தில் செவ்வாய் நீசம் அடைந்துள்ளது ஆனால் அம்சத்தில் விருச்சிகத்தில் உள்ளது.மேலும் ராசி கட்டத்தில் வக்ரம் அடைந்துள்ளது.நீச கிரகத்திற்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் இருநது ஐந்தாம் வீட்டில் உள்ளது.நான் சிம்ம லக்னம்.செவ்வாய் நீச் பங்கம் அடைந்து உள்ளதா ஐயா.

    ReplyDelete
  78. Sir My Son's DOB 10-11-1999 and Time 03: 45 pm. Is Neecha Banga rajayoga in his horoscope. How is carrer and education.

    ReplyDelete
  79. Simmalagnam - 1st house, guru - 6 house
    Sani+kethu-3house, santhiran+sukkiran-12house
    Soorian+puthan+chevai-1house, ragu-9house
    Y enakku yoga irukka

    ReplyDelete
  80. எனது பிறந்தநாள் 26.06.1985 ஆனி 12ம் நாள். காலை 5.30மணி.மிதுன லக்னம். மகரத்தில் 8ல் குரு நீச்சம், அம்சத்தில் உச்சம்

    ReplyDelete
  81. ஐயா என் பிறந்த நாள் 3.10.1990 காலை 6.10 மணி கன்னி லக்னம் லக்னத்தில் புதன் சுக்ரன் சூரியன்.சுக்ரனுடன் சூரியன் சேர்ந்து இருப்பதால் நீசபங்க ராஜயோகம் உள்ளதா?

    ReplyDelete
  82. ஐயா என் பிறந்த நாள் 3.10.1990 காலை 6.10 மணி கன்னி லக்னம் லக்னத்தில் புதன் சுக்ரன் சூரியன்.சுக்ரனுடன் சூரியன் சேர்ந்து இருப்பதால் நீசபங்க ராஜயோகம் உள்ளதா?

    ReplyDelete
  83. ennudaiya sandhegathu kku Nalla Vilakkam Neengal Koduthathu. Ennudiya Jadhagathil Sukran + Pudhanudan sernthu Neecha bangam adaindullar enavum. adhanal padhipuu enavum jodhidar koorinar. Anal Tharpozhuthu Ungaladhu pathilinal Nan Mikundha Magilchi Adaikiren. En endral Mudhalil Ondrum Illavathanaga Irunthalum kadaisiyil Ellam Kidaikkum Endru Solli Ullirgal. Mikka Nandri. Ennudaiya Pirantha date 04.10.1990, Uthiratahi 4 m Padham Kumbha Laknam Meena Rasi

    ReplyDelete
  84. Vanakkam ayya...nan 35 vayathu pen aaven, ... En Rasi chart el laknathil manthi, 4 aam edathil chandran, 5 aam edathil sani, 6 aam edathil suriyan, buthan, kethu, 7 aam edathil guru, sukiran, 8 aam edathil sevvai, 12 aam edathil ragu..... sevai maharayhil ullathu, thanusil guruvum, sukiranum ullarhal, viruchagathil suriyn, buthan, kethu ullathu,, kanniyil chandiran ullathu, rishabathil ragu ullathu... Birth date 19.11.1984* 9.36 pm.. Hastha nakshathiram, kanni rasi, mithuna laknam... AAYA THIRUMANAM KAIKOODAVILLAI, ( for second marriage) health seri illai, piditha vellai illai... Raagu neesam endrum sevai ucham endrum, buthan week aaga ullathagavum, kalathira thosam ullathagavum, parihara sevai endru kooruhirarhal..... Ungal karuthai thayavu seithu sollavum...

    ReplyDelete
  85. ஐயா, எனக்கு கடக லக்கினத்தில் செவ்வாய் நீசம், விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் (அமாவாசை சந்திரன்). இருவரும் பரிவர்த்தனையாகி உள்ளனர். 2019ல் இருந்து எனக்கு சந்திர தசை நடை பெறுகிறது. சந்திர தசை மற்றும் அடுத்து வரும் செவ்வாய் தசையில் எந்த மாதிரியான பலன்களை எதிர்பாக்கலாம்.

    ReplyDelete
  86. Ayya vanakkam, en peyar Kavitha. Enaku kumba rasi , rishaba lagnam.enaku
    2-kethu
    5-budhan
    6-sooriyan,sani,sukran,guru.
    8-chevvai,rahu.
    10-chandran.
    Vaalkaila rombo kashta patuturukan. Na sambadhichi en kudo porandhavangaluku nalladhu senjan,na inniki saapada, vaadagai katta kudo vazhi illama irukan, en kashtam theeruma ayya?

    ReplyDelete
  87. ஐயா வணக்கம்
    19.10.1980 09:35 AM Chennai.
    எனக்கு சூரியன் மூன்று விதிகளில் நீச பங்கம் அடைகிறார்.
    பரிவர்த்தனை, வர்கோத்த மம், சந்திர கேந்திரம். அராய்ந்து பதில் போடுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

    ReplyDelete
  88. அய்யா..எனக்கு தனுசு லக்னம் மீன ராசி.
    2 இல் கேது
    4 இல் சந்திரன்
    6இல் குரு சனி
    7இல் புதன்
    8இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் ராகு

    எனக்கு நல்ல வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா அய்யா முதல் போடாமல்..லாபஸ்தானதிபதி நீசம் பெற்றுவிட்டார்😔

    ReplyDelete
  89. ஐயா, என் மகன் ஜாதகத்தில் கடக லக்னம், கும்ப ராசி, 10ல் சனி நீசமாகி குருவுடன் உள்ளார். செவ்வாய் 9ல் உள்ளார். சனி நீங்க ராஜயோகம் பெறுமா?

    ReplyDelete
  90. Ayya naan danusu lagna thulam raasi
    Lagna thirku
    2 il - ketu
    3 il - suryan
    4 il - guru + sukran + bhuthan
    5 il - sani
    8 il - ragu
    11 il - chandran+sevvai
    1)Ennaku inngu puthan mattrum sani neesabangam aagiullargalla illayaa ????
    2) 8 il raagu , guru vin 5 aam parvaiyil ...ragu subathuvam aanara??
    3) sani mattrum buthan dasai evvaru irukkum

    ReplyDelete
  91. sir my data of birth 20th july 1982, birth time 5.30 am, birth place chennai.kindly confirm carrier and marriage life.

    ReplyDelete
  92. Simma lagnam -
    6 il(Sani veedu) - Sani , Guru
    Idhu neesa pangam ah ? 6 maraivu dhaana?!
    7 il(Sani veedu) - suryan,santhiran,pudhan,sukran
    Idhan palan ena?

    ReplyDelete
  93. ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் மகர சனி மீன குரு கண்ணியில் சுக்கிரன்
    சுக்கிரன் நிச்ச பங்கம் பெறுமா சிம்மத்தில் சூரியன் +ராகு 19/08/1997 3:20: 22pm தொழில் பாத்து சொல்லுக

    ReplyDelete
  94. Iyya, yennaku kanni lagnam, sukran neecham, 2l suryan neecham, lagnathi bathi lagnathi uchham pettral,suryan iyppasi 15l travel seikirar appathu neechapamkathai thanthu arasu uthiyogam kidaikka vaippu erukkiratha... 31-10-1988 birth time 5.00 am birth place Madurai

    ReplyDelete
  95. ஐயா.விருச்சிக லக்கினம் லக்கினத்தில் சந்திரன். அங்கு சந்திரன் நீசம் அடைகிறார்.. என்ன palan

    ReplyDelete