கைப்பேசி : 9768 99 8888
வேத ஜோதிடத்தின் சில மூல விஷயங்கள் ஞானிகளைத் தவிர வேறு எவரும் அறியாதவை.
உதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்வெளி 360 டிகிரியாகப் பாவிக்கப்பட்டு
சமமான பனிரெண்டு ராசியாக ஏன் பிரிக்கப்பட்டது? இதை பதினெட்டு ராசியாக ஏன்
பிரித்திருக்கக் கூடாது? யாருக்கும்
தெரியாது. இது கேள்விக்கு அப்பாற்பட்ட மூல விஷயம்.
அதுபோலவே காலங்காலமாகவே நமக்கு குரு நன்மைகளைத் தரும் இயற்கைச் சுப கிரகம்
என்றும் சனி தீமைகளைத் தரும் பாபக் கிரகம் என்றும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏன், எப்படி என்று ஞானிகளைத் தவிர வேறு
எவரும் அறிந்ததில்லை.
மேலும் சுப பாபக் கிரகங்களின் வரிசையான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச்
சந்திரன், சனி, செவ்வாய் என்பது எப்படி ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்த வரிசை ஏன்
புதன், குரு, சந்திரன், சுக்கிரன் என்று இல்லை என்பதும் ஞானிகளுக்கு மட்டுமே
தெரியும்.
என்னுடைய 33 வது வயதில் எனக்கு சந்திர தசை, புதன் புக்தி நடக்கும் போது ஒரு விதமான
தீவிர ஆய்வுச் சிந்தனை மனநிலையில் நான் இருந்த போது இது பற்றிய சூட்சும விளக்கங்கள்
எனக்கு இறையருளால் கிடைத்தன.
ஜோதிடம் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும் கிரகங்கள் சுபர்கள்,
அசுபர்கள் என ஏன், எப்படி, எதனால் அளவிடப்பட்டு பிரிக்கப் பட்டார்கள் என்ற இந்த
சூட்சுமங்களை மனிதர்கள் எவரும் அறியாத நிலையில், இவற்றை நான் கண்டு பிடித்தேன்
என்பதை விட பரம்பொருள் இவற்றை அறிவதற்கு என்னை அனுமதித்தது என்பதே உண்மை.
இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டால் பலன் அறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்
என்பதால் இந்த அத்தியாயத்தில் இதை விளக்குகிறேன்.
நாம் அனைவரும் ஒரு நல்லதைக் கொண்டுதான் கெட்டதை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.
இன்பம் என்னவென்று தெரிந்தால்தான் துன்பம் இப்படித்தான் இருக்கும் என்று புரிந்து
கொள்ள முடியும். இருள் இருந்தால் தானே அங்கு வெளிச்சத்திற்கு வேலை..?
அந்தவகையில் சனி ஏன் பாபக் கிரகமானார் என்பதை ஜோதிட ரீதியாக விளக்கும் போது
குரு ஏன் சுப கிரகமானார் என்றும் விளக்குவது தவிர்க்க முடியாதது. ஆகவே எந்தக்
காரணத்தினால், குரு முதல் நிலை சுபரானார்? சனி ஏன் முதல் நிலை பாபரானார் என்ற
ஜோதிட சூட்சுமத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.
நாம் அனைவருமே ஒளியால் பிறந்தவர்கள். ஒளியால் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
நமது ஜோதிடமே ஜோதி (ஒளி) இஷம் தான். அதாவது அறிவாகிய ஒளியைப் பற்றிச் சொல்வதுதான்.
நமக்குக் கிடைக்கும் இந்த ஒளியின் மூல நாயகனான சூரியன் எனும் நடுத்தர வயதுள்ள,
ஏறத்தாழ நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இந்த
நட்சத்திரத்தினால்தான் நாம் எனும் உயிர்கள், ஜீவன்கள் இந்த உலகில் பிறந்தோம்...
வளர்ந்தோம்... வாழ்கிறோம்...
சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களுக்கும் ஒளி இல்லை.
அவை சுயமாக ஒளி தர முடியாதவை. நம் சூரிய மண்டலத்தின் தலைவனான சூரியனிடமிருந்து
ஒளியைப் பெற்று அதைப் பிரதிபலிக்கின்றன.
இந்த ஒளி, அதாவது கதிர்வீச்சின் மூலமே மற்ற அருகருகே இருக்கும் ஏனைய கிரகங்களின் மீது அவை தங்களின் ஆதிக்கத்தைச்
செலுத்துகின்றன. ஒன்றுக்கொன்று ஒளியைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த ஒளிக் கலப்பினால்தான்
உயிர் பிறக்கத் தோதான இடமாக நமது பூமி மாற்றப்பட்டு நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒளியால் பிறந்த நம்மை, அந்த ஒளியைத் தந்த தனித் தனிக் கிரகங்களும் தங்களுக்கே
உரித்தான காரகத்துவங்கள் மூலம் அதாவது செயல்பாடுகள் மூலம் நம்மைக் கட்டுப்படுத்தி
இயக்குவதைத்தான் ஜோதிடம் சூட்சும வழிகளில் முன் கூட்டியே சொல்லுகிறது.
உயிர்கள் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தேவையான இந்த ஒளியின் அளவை, அதாவது கிரகங்களின்
கதிர்வீச்சை மகாபுருஷர் காளிதாசர் தனது “உத்திர காலாம்ருதம்” எனும் ஒப்புயர்வற்ற
நூலில் ‘கிரக களா பரிமாணம்’ என்ற பெயரில் மிகத் தெளிவான அளவாகப் பிரித்துச்
சொல்கிறார்.
‘கிரக களா பரிமாணம்’ என்ற சொல்லிற்கு கிரகங்களின் கதிர் அளவு என்று அர்த்தம்.
(இதைப் பற்றி ஏற்கனவே எழுதிய ஒரு கட்டுரையில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்)
மகரிஷி காளிதாசர் மற்ற கிரகங்களிடமிருந்து பூமிக்கு கிடைக்கும் ஒளியின் அளவை
கீழ்க்காணும் அளவுகளில் கணக்கிட்டு நமக்கு அளித்துள்ளார்.
சூரியனின் கதிர் அளவு – 30
சந்திரன் – 16
புதன் - 8
சுக்கிரன் – 12
செவ்வாய் – 6
குரு – 10
சனி – 1
இந்த ஒளி அளவுக் கணக்கில் ஒரு ஆதிபத்தியக் கிரகங்களான சூரியனுக்கும்,
சந்திரனுக்கும் தரப்பட்ட 30 மற்றும் 16 ஐ மட்டும் விட்டு விட்டு மற்ற இரு
ஆதிபத்தியக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய பஞ்ச பூதக்
கிரகங்களின் எண்களை இரட்டிப்பாக்கினால் இந்த ஒளி அளவு எண்ணிக்கை மொத்தம் 120 ஆக
வரும்.
அதாவது அப்போது ஒளி அளவுச் சக்கரம் கீழே உள்ளது போல இருக்கும்.
இந்த எண் 120 என்பது ஜோதிடத்தில் ஒரு
தலையாய எண் என்பது நமக்குத் தெரியும்.
உலகின் எந்த நாட்டு ஜோதிட முறையிலும் இல்லாத, நம் இந்திய ஜோதிடத்திற்கு
மட்டுமே உள்ள தனிச் சிறப்பான, மனித வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை துல்லியமாகப்
பிரித்துப் பலன் சொல்லும் முறையை விம்சோத்ரி தசா புக்தி வருடங்கள் எனும் பெயரில்
நமக்கு அளித்த மகரிஷி பராசரர் ஒட்டு மொத்த தசை வருடங்களுக்கும் இந்த எண்ணைத்தான்
பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் ராசிச் சக்கரத்தில் அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான நவ கிரகங்களின்
ஆளுகை கொண்ட ஒரு பகுதியின் டிகிரி அளவும் இந்த 120 எனும் எண்தான். இது போன்ற
மூன்று பகுதிகளை ஒட்டு மொத்தமாகச் சேர்த்ததே நமது ராசிச் சக்கரத்தின் மொத்த அளவான
360 டிகிரி என்பது ஆகும்.
இந்த நூற்றியிருபது என்பது பூமி சூரியனைச் சுற்றி வரும் சூரியப் பாதையின்
ஒட்டு மொத்த அளவான 360 டிகிரியையும், ஒன்பது கிரகங்களையும் பெருக்கினால் வரும்
எண்ணான 3240 ஐ 27 நட்சத்திரங்களால் வகுத்தால் கிடைக்கும் எண்.
அதாவது
360*9/27 = 120
(இதை வேறு சில முறைகளிலும் விளக்கலாம். இந்த இடத்தில் அதைப் புரிந்து கொள்வது
சிரமமாக இருக்கும் என்பதால் இதுவே போதும் என்று நினைக்கிறேன்.)
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பூமிக்கும், சூரியனுக்கும் உள் புறத்தில் இருப்பதால் உட் சுற்றுக் கிரகங்கள் எனவும் செவ்வாய், குரு,
சனி ஆகியவை பூமிக்கு வெளிப் புறத்தில் இருப்பதால் வெளிச் சுற்றுக் கிரகங்கள்
எனவும் அழைக்கப்படுகின்றன.
சூரியனே நம் அனைவருக்கும் தலைமகன் என்பதாலும், சூரியனிடமிருந்தே அனைத்துக்
கிரகங்களும் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கின்றன என்பதாலும் சூரியனின் கதிர் அளவு
எண் நிலையாக முப்பது எனத் தரப்பட்டது.
இந்தக் கிரகங்களில் சந்திரன் நமக்கு சுமார் நான்கு லட்சம் கிலோ மீட்டர்
தூரத்திலும், உட்சுற்றுக் கிரகங்களான புதன், சுக்கிரன் இருவரும் நம்மிலிருந்து
தோராயமாக பத்து கோடி கி.மீ. குள்ளும், வெளிச் சுற்றுக் கிரகமான செவ்வாய் சுமார்
எட்டுக் கோடி கி.மீ. தூரத்திலும் இருக்கின்றன. குரு, சனி ஆகியவை இன்னும் அதிகமான தூரத்தில்
உள்ளன.
இவற்றில் 16 அளவு ஒளியை நமக்கு பிரதிபலிக்கும் சந்திரன் நம்மிலிருந்து 4 லட்சம்
கிலோ மீட்டர் அருகேயும், சூரியனிடமிருந்து ஏறத்தாழ 15 கோடி கி.மீ. தூரத்திலும்
உள்ளது. சூரியனின் நிலையான ஒளி அளவு எண்ணான 30 என்பதோடு சந்திரனின் எண் பதினாறை
ஒப்பிடும் போது பூமிக்கு கிடைக்கும் சந்திரனின் ஒளி அளவு சுமாராக 53.3 சதவீதம்
ஆகும்.
அடுத்ததாக புதன் சூரியனிடமிருந்து ஐந்து கோடியே எண்பது லட்சம் கி.மீ.
துரத்தில் உள்ளது. இது பூமிக்கு ஒளியை பிரதிபலிக்கும் அளவு எண் 8 . இதன் சதவிகிதம்
26.7 ஆகும்.
சுக்கிரன் சூரியனிடமிருந்து பத்துக் கோடியே எண்பது லட்சம் கி.மீ. தூரத்தில்
உள்ளது. இது பூமிக்கு தரும் ஒளி அளவு எண் 12. இதன் சதவிகிதம் 40 ஆகும். இதனால்தான்
வானத்தில் சுக்கிரன் எப்போதுமே பிரகாசமாகத் தெரிகிறது.
இந்த நான்கு கிரகங்களும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே இருக்கும்
உட்சுற்றுக் கிரகங்கள் ஆகும். இவற்றிற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவு சுமார்
பதினைந்து கோடி கி.மீ.க்குள் தான்.
இனி வெளிச் சுற்றுக் கிரகங்களான செவ்வாய், குரு, சனி இவைகளைப் பற்றிப்
பார்ப்போமானால், செவ்வாயின் ஒளி நம்மை வந்தடைவது, அதாவது செவ்வாயின் சூரிய ஒளியை
பிரதிபலிக்கும் திறன் வெறும் 6 என்ற எண் அளவில் மட்டும்தான். இதன் சதவீதம் 20
ஆகும்.
செவ்வாய் சூரியனிடமிருந்து ஏறத்தாழ 22 கோடியே 80 லட்சம் கி.மீ. துரத்தில்
இருக்கிறது. ஆனால் நம் பூமிக்கு மிக அருகே ஒரு நிலையில் 8 கோடி கி.மீ. தூரத்தில்தான்
இருக்கிறது.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்.
(பிப்ரவரி 01-07, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Good Posting sir.. Keep going...
ReplyDeletethank you sir
ReplyDelete100% correct prediction. I am practically seeing lot of horocope like this. My mom is a best example to me.
ReplyDeleteஅருமை குருஜி,
ReplyDeleteஎனக்கு மிகவும் நெருங்கிய உறவினரின் ஜாதகத்தில்(மகரம்) லக்கினாதிபதி சனி(வ) உச்சம், எந்த் வேலையிலும் அவராகச் சென்று இருந்ததும் இல்லை,பிரியமுடன் வேலை செய்ததும் இல்லை.இப்போது வயதும் 60 நெருங்கிவிட்டது குடும்பச் சுமைகாரணமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.போதாக்குறைக்கு அஷ்டமாதிபன்,விரயாதிபதியும் சேர்ந்து உச்சம்.இதுவரை ஒன்றுமே விளங்கவில்லை.சனி தந்தது அனைத்துமே கெட்டபலன்கள் தான்.
தேளில் நல்ல தேள் கெட்ட தேள் என எதுவும் இல்லை ராஜாராம்... அது எந்த நிலையிலும் கொட்டும். என்னுடைய சூட்சும வலு தியரிப்படி வலு இழக்கும் சனியே கெடுதல் செய்யும் வலு இழந்து எதிர்பலன்களைச் செய்வார். அப்போது கூட "நன்மைகளைச்" செய்ய மாட்டார். அது அவருக்கு விதிக்கப் படவில்லை. என்னுடைய கருத்துக்கள் சனி வலுப் பெற்றவர்களுக்கு கசப்பைத் தரும். ஆனால் பின்னாளில் உண்மை புரியும். இந்த எளிய ஜோதிடனை ஒரு நாள் நினைப்பார்கள்.
DeleteIyya Vanakkam,
ReplyDeleteAyya ungaludaiya jothida pathiuvkal mutrilum veru patta konatthil ullathu.
Sani lakna subara irunthu ucham petralalum nallathu seiya mattana?
Utharanamaka rishba laknama irunthu 6il ucham peruvathu nallathu thane?
Thula laknathirkku laknathileye ucham peruvathum lakna yokathipathi laknathil ucham petratharkana palanai taramal poi viduvana enna?
அன்புள்ள செங்கோட்டையன்...
Deleteஎன்னுடைய பதிவுகள் வேறுபட்ட கோணத்தில் இல்லை. இதுவே முழுமையான கோணம். இத்தனை காலம் ஜோதிடர் என்று சொல்லிக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களை படித்துக் கொண்டிருந்ததால் வரும் குழப்பம் இது.
இங்கே ஜோதிடம் எழுதுவது மிகச் சுலபம். நான்கு ஜோதிடப் புத்தகங்களை பிரித்து வைத்துக் கொண்டு பாராக்களை மாற்றி அமைத்தால் நீங்களும் ஜோதிட எழுத்தாளர் ஆகி விடலாம். உண்மையான ஆய்வுகளை செய்து எழுதுபவர்கள் இங்கு மிகச் சிலர்தான்.
ஏறத்தாழ முப்பதாண்டு காலம் ஜோதிடமே கதி என்று கிடந்து ஆய்ந்து தெளிந்து பின்னரே எழுதுகிறேன். மூன்று மாத டிப்ளமாவோ ஒரு வருட DA வோ படித்து விட்டு எழுதவில்லை.
சனி உச்சம் பெற்றால் என்னுடைய தியரிப்படி சூட்சும வலு அடைய வேண்டும். ரிஷப லக்னத்திற்கு உச்ச சனி யோகம் செய்வார். அதனால்தான் அவர் ஆறில் மறைந்து உச்சம் பெறுகிறார். துலாமிற்கு யோகம் செய்ய மாட்டார். அப்படியானால் துலாமிற்கு யோகாதிபதி உச்சம் பெறுவது வீண்தானா? என்ற கேள்வி எழுமானால் பரம்பொருள் உண்மையான யோகவானை துலாமில் பிறக்க வைத்தால் சனி உச்ச நிலையில் பிறக்க வைக்க மாட்டார். அவர் யோகசாலியாக இருப்பின் சனி சூட்சும வலு அடைந்திருப்பார்.
குழப்பமாகத்தான் இருக்கும். தொடர்ந்து வரும் கட்டுரைகளைப் படியுங்கள். இன்னும் விளக்கம் இருக்கிறது.
தங்களின் மேற்குறிய சனி பற்றிய குறிப்புகள் தற்போது சில ஜோதிடர்களிடம் பேசியபோது (என் நண்பர்கள் - எனக்கு ஜோதிடம் தெரியாது ) மாறுபாடு உள்ளதாக சில உதாரனங்களை கூறினர். அது உண்மைதான்... பின் எப்படி ???
ReplyDeleteஜோதிடம் தெரியாது என்று நண்பர்களின் பின்னால் ஒளிபவர்களுக்கு இந்த பிளாக்கில் வேலை இல்லையே....
ReplyDeleteஜோதிடம் தெரியாத ஆனால் ஆர்வம் உள்ளவன். இது முழு உண்மை , முக நூல் வாயிலாக தங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்தது . இதுவே உண்மை. என் சந்தேகத்தை தெளிவு படுத்துவது தான். ஆரோகியமான் விவாதம் . இப்படி எதிமறை சிந்தனை பதில் தேவை இல்லையே. .....
Deleteஅன்புள்ள CKU...
Deleteமுகநூலில் ஒவ்வொருவருக்கும் இதைப்பற்றி சொல்லிய ஆயாசத்தால் வந்த பதில் இது.
முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்...
ஆரோக்கியமான விவாதம் என்பது சமமான இருவருக்குள் நடப்பது. ஜோதிடத்தில் LKG படிக்கும் நீங்கள் கல்லூரியில் படிக்கும் என்னிடம் விவாதிக்க நினைப்பது தவறு.
தவிர ஜோதிடம் என்பது அறிவு சார்ந்தது அல்ல. அது ஒருவகை ஞானம்.உங்கள் சந்தேகத்தை நான் தெளிவு படுத்த வேண்டுமெனில் நான் சொல்லும் பதிலை புரிந்து கொள்ள உங்களுக்கு ஓரளவு ஜோதிட ஞானம் வேண்டும்.
ஆர்வம் மட்டுமே உள்ள நிலையில் என்னுடைய கட்டுரைகளை தயவு செய்து படிக்காதீர்கள். உங்களுக்கு புரியாது. புரிய வைக்க எனக்கு அவசியமும் இல்லை.
ஆனால் ஒன்று...
ஆர்வத்தையும் மீறி ஜோதிட வெறி இருந்தால் என் கட்டுரைகளை திரும்பத் திரும்பப் படிப்பீர்கள்...அப்போது ஏதோ ஒன்று தட்டுப்படும். என் எழுத்துக்களை அனுபவிப்பீர்கள்.
உண்மையான ஜோதிடம் பிடிபட வாழ்த்துகிறேன்...
ஐயா!! வணக்கம்!!
ReplyDeleteநீங்கள் கூறும் தியரி சரி என்றே தோன்றுகிறது!! ஆனால் ஒரு சந்தேகம்!! பாவ கிரகமான செவ்வாய் தரும் ருசக யோகத்தையும் , சனி தரும் சசயோகத்தையும் ஏன் "யோகங்கள்" என்று முன்னோர்கள் சொல்ல வேண்டும்??!! இவைகளுக்கு அவயோகங்கள் என்று பெயர் வைத்திருக்கலாமே??!!
எத்தனையோ மாபெரும் அரசியல் தலைவர்கள் ஜாதகங்களில் மிகக்கொடிய பாவ கிரகங்கள் என்று வர்ணிக்கப்பட்ட செவ்வாய் மற்றும் சனைச்சர ப்ஹகவங்கல் நல்ல பலம் பெற்று உள்ளனர்களே!! இவர்களில் ஒருவர் 6,8,12ல் மறையாமல் , உச்ச வக்கிரம் பெறாமல் எத்தனையோ அரசியல் புள்ளிகள் ஜாதகங்களில் நேர் வலு அடைந்துள்ளனரே??!! அது போன்ற சில மாறுபட்ட அமைப்புகளும் இருக்க காரணம் என்ன??!!
அன்புள்ள சந்தோஷ் குமார்,
Deleteஉங்கள் கேள்விகளுக்கான பதில் என் கட்டுரைகளுக்குள் இருக்கிறது.என் பிளாக்கில் உள்ள முந்தைய கட்டுரைகளையும் இனி வர இருக்கின்ற கட்டுரைகளையும் படியுங்கள்.குழப்பம் தீரும்.
I acept your article sir
ReplyDeleteஎனக்கு தெரிந்த ஒருவருக்கு மகர லக்கணமாகி சனி தனித்து 10 இல் உச்சம்... எவ்வித கிரக சேர்க்கையோ, பார்வையோ சனிக்கு இல்லை..
ReplyDelete2008 சனி தசா நடக்கும் போது அவர் அழுக்கான உடை அணிந்து (கிளாஸ் கழுவ வேலை ஆட்கள் இல்லை ) டீ கடை வைத்து நடத்தி கொண்டிருந்தார்... மீண்டும் அவர் பிறந்த நேரத்தை உறுதி செய்து கொண்டேன்...
எனக்கு அப்போது ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது.. ஒரு சில பழைய நூல்களில் சனி உச்சமானால் ஆஹா என்று எழுதி இருந்தது....
திரு. குருஜி அவர்களின் இந்த கட்டுரையின் படித்த பின்பு தான் உண்மை அறிந்தேன்..
ஜோதிடத்தின் மிக முக்கியமான பரிமாணம் இது..
வாழ்த்துக்கள் குருஜி..