ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்று சொல்லப்படுவது பூர்வபுண்ணிய ஸ்தானம் எனவும், ஒன்பதாமிடம் எனப்படுவது பாக்கியஸ்தானம் அல்லது தர்மஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஒருவரின் சிந்தனை, செயல், நடத்தை, அதிர்ஷ்டம் மற்றும் சென்ற பிறவியில் அவர் செய்த பாவபுண்ணியம் போன்றவற்றை ஐந்தாம் பாவமும், அவரது ஆன்மீக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப்போகும் நற்காரியம், பெறப்போகும் பாக்கியங்கள், ஆலயப்பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் போன்றவற்றை ஒன்பதாம் பாவமும் குறிக்கின்றன. பெண்களுக்கு கற்பு, ஒழுக்கம் போன்றவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே சுட்டிக் காட்டும்.
இப்படிப்பட்ட நல்ல தன்மைகளைக் கொண்ட ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் இயற்கைச் சுபக்கிரகங்களின் வீடுகளாகி, அந்த பாவங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்து அல்லது சுபக்கிரகங்களின் பார்வை கிடைத்து பலம் பெறுமாயின் அந்த ஜாதகர் இந்த பூமியில் பரம்பொருளின் கருணையைப் பெற்றவராக இருப்பார் என்பது வேதஜோதிட விதி.
இயற்கைச் சுபக்கிரகமான குருபகவான் ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று லக்னத்தையோ, ராசியையோ, மேலே குறிப்பிட்ட ஐந்து, ஒன்பதாம் பாவங்களையோ பார்வையிட்டால் அந்த நபர் நேர்மையான குணங்கள் மற்றும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராகவும், பெரியோர்களால் பாராட்டப் படுபவராகவும், ஆலயத் திருப்பணிகள் செய்யக் கூடிய வாய்ப்பைப் பெற்றவராகவும் இருப்பார்.
மேலும் குருபகவான் ஞானிகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதையும், மதிப்பு வாய்ந்த பெரியோர்களின் அறிமுகம் கிடைப்பதையும் குறிக்கும் கிரகம் ஆவார்.
ஒருவருடைய ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று வலிமையோடு இருக்கும் நிலையில் அந்த ஜாதகருக்கு நேர்மையான வழிகளில் எல்லாவிதமான பாக்கியங்களையும் தருவார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
முதன்மைச் சுபக்கிரகமான குருவைப் போலவே பாபக்கிரகமான சனியும் ஆன்மீக உணர்வுகளுக்கு காரணமான கிரகம்தான். வேதாந்த அறிவு, பிரம்மத்தை அறிதல் போன்றவைகளுக்கு குரு காரணமாவதைப் போல அமானுஷ்ய சக்திகள், சித்து வேலைகள், யட்சிணி உபாசனை, மாந்த்ரீகம், கிராம தேவதைகளை வணங்குதல், அருள்வாக்கு மற்றும் குறி சொல்லுதல் போன்றவைகளுக்கு சனி காரணம் ஆவார்.
சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் சுபபலமோ அல்லது சூட்சுமவலுவோ பெற்று ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்க்காமல் வேறுவகையில் தொடர்பு கொள்ளும் நிலையில் மேலே நான் சொன்ன பலன்களைச் செய்வார்.
மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி போன்றவை களிலும், சில வகையான முடிவற்ற ஆன்மீகத் தேடல்களிலும் ஆர்வத்தைத் தருபவரும் சனிதான். குறிப்பாக, இறப்பிற்குப் பின் மனிதனின் நிலை என்ன? என்பது போன்ற சிந்தனைகளுக்கு சுபபலம் அல்லது சூட்சுமவலு பெற்ற சனிபகவான் காரணமாக அமைவார்.
சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது கேதுவுடன் இணைந்தோ அல்லது குருபகவானின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது போன்ற அமைப்பைக் குறிக்கும்.
அடுத்து ஆன்மீக அறிவையும், பரம்பொருளிடம் தன்னை முழுக்க அர்ப்பணிக்கும் உணர்வையும், பிரம்மஞானத்தையும் தரும் கிரகம் கேதுபகவான். பெரும்பாலான ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், மதகுருக்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் இவரது அஸ்வினி, மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களே.
கேதுபகவான் சுபபலம் பெற்று கன்னி அல்லது கும்பம் போன்ற ராசிகளில் இருந்தாலோ அல்லது சுபரான குரு மற்றும் சனியுடன் குறிப்பிட்ட சில டிகிரி இடைவெளியில் இணைந்திருந்தாலோ அபரிதமான ஆன்மீக ஈடுபாட்டைத் தருவார்.
கேது ஒருவர் மட்டும் ஜாதகத்தில் பரிபூரண சுப நிலையில் இருந்தாலே அந்த ஜாதகரை “மனித உருவில் நடமாடும் தெய்வம்” என்று பிறர் போற்றக்கூடிய புனிதராக, பகவானாக மாற்றுவார். முழுமையான ஆத்மஞானத்தை தருவார். பிரம்மத்திற்கு அருகில் செல்ல வைப்பார். எல்லாம் தெரிந்து தெளிய வைப்பார். முற்றும் துறக்கும் பற்றற்ற நிலையை உருவாக்குவார். அனைத்தும் அறிந்தும் அடக்கமாக இருக்க வைப்பார்.
இன்னொரு அமைப்பையும் தெரிந்து கொள்ளுங்கள்...
அதாவது “நாம் ஒரு நிலையில் உயர்வடைய வேண்டும் எனில் அதன் எதிர்நிலை தாழ்வடைய வேண்டும்” என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு சூட்சுமம்.
அதன்படி ஆன்மீக வாழ்வில் ஒருவர் சிறப்படைய வேண்டும் என்றால், இல்லற வாழ்க்கைச் சுகங்களில் ஆர்வத்தைத் தரக் கூடியவனும், காமம் பெண்சுகம் உல்லாசம் சொகுசுவாழ்க்கை போன்றவைகளுக்கு அதிபதியுமான சுக்கிரன் அந்த ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்த ஜாதகர் வேறுவகையான சிந்தனைகள் இன்றி பரம்பொருளிடம் பரிபூரண சரணாகதி அடைந்து தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெறுவார்.
(1-10-2013 சக்திவிகடன் இதழ் இணைப்பு சக்திஜோதிடத்தில் வெளிவந்தது )
Excellent Post sir.
ReplyDeletegood..
ReplyDeleteமிகவும் சிறப்பன பதிவு
ReplyDeleteநன்றி
Miga arumayaana pathivu.... pokkisamaana vaarthaigal....
ReplyDeleteGuruji our family wellwisher , goodshiperd , Guider etc,,,,,,,,,,,,,,
ReplyDeleteLots of Namaskaras samarpanam
By
Prabhakaran
earn money by using TSU, its like facebook but it pays u money... to join click www.tsu.co/giridharan_c
DeleteVerygood
ReplyDeleteArpudham!
ReplyDeleteNalla pathivuji
ReplyDeleteearn money by using TSU, its like facebook but it pays u money... to join click www.tsu.co/giridharan_c
Deleteearn money by using TSU, its like facebook but it pays u money... to join click www.tsu.co/giridharan_c
Deleteமிகவும் சிறப்பன பதிவு
ReplyDeleteearn money by using TSU, its like facebook but it pays u money... to join click www.tsu.co/giridharan_c
Deleteஉதாரண ஜோதிடம் பதிவிடுங்கள ?
ReplyDeleteஉதாரண ஜோதிடம் பதிவிடுங்கள ?
ReplyDeleteஅருமை..
ReplyDeleteKETHU AND SANI IN 5TH PLACE in visaka (guru)natchathiram-Kadaga lagnam..enna palan sir?
ReplyDeletedate of birth : 14-01-1985 ..7.35PM