ஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்

“ஜோதிட மகாகுரு” “ஜோதிடக்கலை அரசு” ஆதித்ய குருஜி அவர்கள் தமிழ் ஜோதிட, ஆன்மீக இதழ்களில் ராசிபலன்களும், கட்டுரைகளும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்களும் தற்போது எழுதி வருகிறார்.

பள்ளிப்படிப்பு முதல் ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாத குருஜி அவர்கள் இந்திய வேத ஜோதிடத்தில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிகள் செய்த அனுபவம் உடையவர்.

ஜோதிட உலகிற்கு அவர் ஆராய்ந்து  அறிவித்த “பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ஜோதிடம் அறிந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் குருபகவானை ஏன் சுபக்கிரகம் என்று அழைத்தார்கள்?சனியை ஏன் பாபக் கிரகமாக் கினார்கள்? என்ற சூட்சுமத்தை முதன்முதலாக கண்டு பிடித்து வெளிப்படுத்தியவர் உலகிலேயே இவர் ஒருவர்தான்.!

அதோடு சுப அசுப கிரக வரிசைகளான குரு சுக்கிரன் புதன் வளர்பிறைச் சந்திரன் செவ்வாய் சனி என்ற வரிசைக்கிரமத்தை ஞானிகள் எப்படி அமைத்தார்கள் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக கண்டு பிடித்துச் சொன்ன ஒரே ஜோதிடரும் உலகிலேயே இவர் மட்டும்தான்.

இயற்கைச் சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கைப் பாபக்கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற தத்துவம் மறைந்துள்ளது. அதுவே பாதகாதிபதி கிரக சூட்சுமம் என்பதை விளக்கி ஆதித்ய குருஜி எழுதிய பாதாகாதிபதி பற்றிய ரகசியங்கள் என்ற ஆய்வுக் கட்டுரை பல சூட்சுமங்களை ஜோதிடர்களுக்கு சொல்லியது.

பலன் சொல்லுவதில் ஜோதிடர்களைத் தலை சுற்றவைக்கும் ராகு கேதுக்களின் சூட்சுமங்களை விளக்கி குருஜி அவர்கள் எழுதியுள்ள “சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள்” என்ற தொடர் கட்டுரைகள் மற்றும் “சனிபகவான் எப்படி ஆயுளுக்குக் காரகன் ஆனார்?” என்ற சூட்சுமத்தை அவர் விளக்கிய விதம் போன்றவைகள் குருஜியின் மேதமையை விளக்கும்.

குருஜி அவர்கள் தற்போது இந்திய வேதஞான ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருக்கிறார்.

No comments :

Post a Comment