Tuesday, May 15, 2018

Simmam: 2018 Vaigaasi Matha Palankal – சிம்மம்: 2018 வைகாசி மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் வலுவான நிலையில் பத்தாம் வீட்டில் இருப்பது சிறந்த அமைப்பு என்பதால் வைகாசி மாதம் சிம்மத்திற்கு நல்ல மாதமே. ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் எவ்வித பங்கமும் இன்றி இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்புக்களைத் தரும். சிம்மத்திற்கு இனி தடைகள் எதுவும் இல்லை. செவ்வாய் உச்சமாகி எட்டாம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் இருக்கும். அதேநேரம் மனோதைரியம் கூடுதலாகும்.

பனிரெண்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம். எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள்.

வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இந்தமாதம் சில புதிய அறிமுகங்கள் உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

No comments :

Post a Comment