Tuesday, May 15, 2018

Kumbam: 2018 Vaigaasi Matha Palankal – கும்பம்: 2018 வைகாசி மாத பலன்கள்

கும்பம்:

ராசிநாதன் சனிபகவான் ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன், புதன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதும் யோகம் என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும். கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் உங்களில் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு இரட்டிப்பான அதிர்ஷ்ட நிகழ்வுகள் இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் உண்டு.

வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் வரும். மனக் கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும்.

ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். தாயார்வழி உறவினர்கள் உதவுவார்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

No comments :

Post a Comment