Tuesday, May 15, 2018

Dhanus: 2018 Vaigaasi Matha Palankal – தனுசு: 2018 வைகாசி மாத பலன்கள்

தனுசு:

வைகாசி மாதம் தனுசுராசிக்கு தடைகள் ஏற்பட்டு சுலபமாக நடக்கக் கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் எட்டாமிடம் சுபவலுப் பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவும் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வரும். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தேவையற்ற மனக் கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் இருக்கும்.

சனி ராசியில் இருப்பது கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்ற மனக்கலக்கத்தை தரும். கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

நடுத்தர வயதினர் அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. செலவுகளும், அலைச்சல்களும் வீண்தொந்தரவுகளும் இருக்கும். யோகாதிபதிகள் வலுப் பெறுவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியமும் உண்டாகும்.

No comments :

Post a Comment