Friday, May 25, 2018

சிம்மம்: 2018 ஜூன் மாத பலன்கள்


சிம்மம் :

மாத ஆரம்பத்தில் ராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும், மாத பிற்பகுதியில் அவர் லாப்ஸ்தானத்திற்கு மாறி அவரை ஐந்துக்குடைய குருபகவான் பார்ப்பதும் சிம்மத்தினரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்க வைக்கும் ஒரு அமைப்பாக இருக்கும். இந்த மாத கிரக நிலைகளால் தொழில் விஷயங்களில் உங்களுக்கு நல்லவைகள் நடக்கும்.


 செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களில் சிலருக்கு இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த மாதம் நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் மாதம் இது. குருபுக்தி அல்லது சுக்கிர புக்தி நடப்பவர்களுக்கு இந்த மாதம் திருமண நிச்சயம் நடப்பதற்கான ஏற்பாடுகள் உண்டு. 

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். பூரம் நட்சத்திரத்தினர் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். 

சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. 

விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

1,2,3,7,8,9,11,12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மதியம் 3.43 மணி முதல் 9-ம்தேதி இரவு 11.10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.

No comments :

Post a Comment