Monday, April 30, 2018

கும்பம்: 2018 மே மாத பலன்கள்


கும்பம் :

கோட்சாரக் கிரக நிலையில் சூரிய, சந்திரர்கள் வலுப் பெறும்போது கும்பத்தினருக்கு நற்பலன்கள் குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் சூரியன் உச்சமாக இருக்கிறார். பனிரெண்டில் செவ்வாயும் வலுவாக இருக்கிறார். எனவே உங்களுக்கு சுமாரான மாதம்தான் இது. ஆயினும் சுக்கிரன் நல்ல அமைப்பில் இருப்பதுடன் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். ராசி சுபத்துவமாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை.

நிரந்தர வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்தவருக்கு இந்த மாதம் நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புகள் தேடி வரும். நான்கு பேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். 

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாக்குவாதங்களை தவிருங்கள். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத்தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. 

நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழி உறவினருடன் உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

2,5,11,13,15,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 24 ம் தேதி அதிகாலை 1 .50 மணி முதல் 26 ம் தேதி காலை 8.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment