Saturday, 1 July 2017

2017 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள்

அசுவினி :

உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்குபேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இப்போது இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் ராசியில் வருமானங்கள் வரும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.

பரணி :

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் தொழிலில் முழுமையான வெற்றியை இப்போது தரும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும்.

கிருத்திகை :

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் தந்தைவழியில் ஆதரவு கிடைக்கும். ஆன்மபலம் கூடும். எதிலும் மிகவும் நம்பிக்கையாக இருப்பீர்கள். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். வீடு எந்த நேரமும் கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். சிலருக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும்.

ரோஹிணி :

இந்தமாதம் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. அதேநேரத்தில் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப் பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு., அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

மிருகசீரிடம் :

மிருகசீரிட நட்சத்திர இளைஞர்களுக்கு திருப்புமுனை மாதம் இது. எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இந்த மாதம் அமையும். பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். இழுத்துக் கொண்டிருந்த பிரச்னைகளை வெற்றி கொள்வீர்கள், கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும் ஊர் மாறுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாறுதல் போன்ற பலன்கள் நடக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் உண்டு.

திருவாதிரை :

உங்களின் வேலை, தொழில், வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும், பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், சொகுசுவாகனம், அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். பங்குச்சந்தை போன்ற யூக வணிகங்கள் கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்லநேரம்.

புனர்பூசம் :

உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் இந்த மாதம் நல்ல மாதம்தான். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். தாயார் வழி நன்மைகள் உண்டு. ஒரு செயலால் நற்பெயர் அடைவீர்கள். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும்.

பூசம் :

இந்தமாதம் வேறு இன, மொழி, மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் இருக்கும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரிகள் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும்.பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.

ஆயில்யம் :

ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல வருமானம் இருக்கும். சினிமா, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

மகம் :

ஜூலை மாதம் மகத்துக்கு நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்த மாதம் இருக்காது. உங்களின் நட்சத்திரநாதன் கேது சுப வலிமையுடன் இருப்பதால் ஆன்மிகம், மருத்துவம், மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் நட்சத்திர நாதன் கேதுபகவான் நண்பர்கள் ஸ்தானம் எனப்படும் ஏழில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளதால் நண்பர்கள், பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விஷயங்கள் மிகவும் நன்மை தரும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் விலகும்.

பூரம் :

உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், யூகத்திறமைக்கும் ஏற்ற மாதம் இது. மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். இடமாற்றமும், வேலைமாற்றமும் உண்டு. நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

உத்திரம் :

இந்த மாதம் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனை அமைப்புகள் இருக்கும் இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும்.

அஸ்தம் :

இந்த மாதம் சிலருக்கு பூமி லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது நல்லபலன்கள் கிடைக்கும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் உண்டு. சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்லசெய்தி உண்டு.

சித்திரை :

உங்களில் சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த சிலருக்கு இந்த மாதம் புதிய வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

சுவாதி :

உங்களின் திறமைகளை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். இதுவரை இருந்து வந்த மிகச்சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

விசாகம் :

இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் பற்றாக்குறை வராது. கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் உள்ள மாதமாக இருக்கும்.

அனுஷம் :

அனுஷத்திற்கு அனைத்துப் பிரச்னைகளும் தீரும் மாதம் இது. இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கப் போவதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்வீர்கள். சிலர் மட்டும் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும். 2012 ம் ஆண்டு முதல் நீங்கள் பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளுக்கு நல்ல முடிவு வரப்போவதால் நீங்கள் வரவேற்கும் மாதம் இது.

கேட்டை :

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இன்னும் குழப்பங்கள் மிச்சமிருக்கும் மாதம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமே இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதேநேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப் போகலாம். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். இந்த மாதத்தோடு துன்பங்கள் தீரப் போவதால் எதற்கும் விரக்தி அடைய வேண்டாம்.

மூலம் :

மூல நட்சத்திர இளைய பருவத்தினருக்கு ஏழரைச்சனி நடப்பதால் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருப்பீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். தனியாக தொழில் தொடங்க வேண்டாம். அதே நேரம் ஐம்பது வயதில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு கெடுதல்கள் இருக்காது.

பூராடம் :

பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பக்கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லது அல்ல. இந்த வருடக் கடைசி முதல் இளையவர்களுக்கு ஏழரைச் சனியால் தொழில் பாதிப்புகள் இருக்கும் என்பதால் இப்போதிலிருந்தே ஜீவன அமைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். எரிச்சலூட்டும் சம்பவங்கள் இப்போது நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.

உத்திராடம் :

இந்தமாதம் தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் உண்டு. அதேநேரம் இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் இருக்கும். பணவரவு தாரளமாக உண்டு. சிலருக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் இந்தமாதம் அமையும்.

திருவோணம் :

இந்த மாதம் பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை.

அவிட்டம் :

நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் இந்த மாதம் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். சிலருக்கு மட்டும் எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சதயம் :

முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் இந்தமாதம் உங்கள் மனம்போல நிறைவேறும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு இந்த மாதம் நீண்டதூரப் பயணங்கள் அமையும்.

பூரட்டாதி :

இந்தமாதம் நீங்கள் செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் வருமானம் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே இப்போது வருமானம் வரும். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் பொருள் சேர்க்கையும் உள்ள மாதம் இது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனம் உற்சாகமாக இருக்கும். சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.

உத்திராட்டாதி :

இந்த மாதம் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். கோபத்தை தவிருங்கள். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ரேவதி :

உங்களின் நட்சத்திரநாதன் புதன் வலுவுடன் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம்.

No comments :

Post a Comment