Friday, June 2, 2017

கடகம்: 2017 ஜூன் மாத பலன்கள்

கடகம்:

கடகராசிக்கு கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாத ஆரம்பத்தில் லாப ஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவு ஸ்தானத்திலும் இருக்கிறார். ஒரு நிலையில் குருபார்வையிலும் இன்னொரு நிலையில் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்தும் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும் என்பதால் கடத்திற்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை.

குருபுக்தி அல்லது சனிபுக்தி நடப்பவர்களுக்கு இந்த மாதம் திருமண நிச்சயம் நடப்பதற்கான ஏற்பாடுகள் உண்டு. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். பூசம் நட்சத்திரத்தினர் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி அதிகாலை 4.28 மணி முதல் 17-ம் தேதி மதியம் 12.45 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

No comments :

Post a Comment