Friday, June 30, 2017

மீனம் : 2017 ஜூலை மாத பலன்கள்

மீனம் :

அடுத்தடுத்து நடக்க இருக்கும் ராகுகேது, குரு, சனிப்பெயர்ச்சி முதல் மீன ராசிக்காரர்கள் சிலருக்கு இப்போது இருந்து வரும் நிச்சயமற்ற விஷயங்கள், பின்னடைவுகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். பிறந்த ஜாதக அமைப்பின்படி யோகதசாபுக்திகள் நடக்கும் சிலரைத் தவிர மற்ற மீனராசிக்காரர்கள் சிக்கல்களில் இருக்கிறீர்கள். அடுத்த மாதம் முதல் கோட்சாரக் குறைகள் அனைத்தும் நீங்குவதால் இனிமேல் சந்தோஷங்களை அனுபவிக்கும் ராசிகளில் மீனமும் ஒன்றாக இருக்கும்.

ஆகஸ்டுக்கு மாதத்திற்கு மேல் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாரிசு உருவாகி வீட்டில் தவழ்ந்து விளையாடப் போகிறது. நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். என்ன பிரச்னைகள் இருந்தாலும் குருபகவான் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்குகிறது.

இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். மீனராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.
.
1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம்தேதி காலை 10.52 முதல் 4-ம்தேதி இரவு 10.43 மணி வரையும், மாதக்கடைசியில் 29ம் தேதி மாலை 6.26 முதல், ஆகஸ்டு 1ம் தேதி அதிகாலை 5.39 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

No comments :

Post a Comment