Friday, June 2, 2017

சிம்மம் : 2017 ஜூன் மாத பலன்கள்

சிம்மம் :

ராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும், அவரை ஐந்துக்குடைய குருபகவான் பார்ப்பதும் இதுவரை சிம்மத்தினரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் இருந்து வந்த பின்னடைவுகளைத் விலக்கும் ஒரு அமைப்பாக இருக்கும். தொழில் விஷயங்களில் இனிமேல் உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் மாதம் இது.

இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் மறுபடியும் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் அக்டோபர் மாதம் வரை பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் அப்போது வேலை கிடைக்கும் ஆகஸ்டு மாதத்திலிருந்து உங்கள் ராசியிலிருக்கும் ராகு விலகப் போவதால் உங்கள் மேல் படர்ந்திருந்த இருட்டு விலகப் போகிறது. இனிமேல் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வரப் போவது இல்லை.

1,2,3,7,8,9,11,12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி மதியம் 12.45 மணி முதல் 19-ம்தேதி மால 5.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.

No comments :

Post a Comment