Wednesday, March 1, 2017

மீனம்: 2017 மார்ச் மாத பலன்கள்

மீனம்:

மீனத்தின் யோகாதிபதிகளான செவ்வாய், குரு, சூரியன் நல்லநிலையில் இருப்பதால் இந்த மாதம் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிய அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள்.

ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். தனாதிபதி வலுத்திருப்பதால் எதிர்பாராத நல்ல பணவரவு இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. எதிரி என்று நினைத்தவர்கள் கூட நண்பர்களாக மாறுகின்ற மாதம் இது.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும். மீனத்திற்கு இனிமேல் யோகம்தான் நட்புக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.

2,4,6,8,10,11,12,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி காலை 9 மணி முதல் 17-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் செய்வதோ இந்த நாட்களில் புதிதாக ஒருவரை அறிமுகம் செய்து கொள்வதோ வேண்டாம்.

No comments :

Post a Comment