Wednesday, March 1, 2017

விருச்சிகம்: 2017 மார்ச் மாத பலன்கள்

விருச்சிகம்:

ஏழரைச்சனியின் முக்கால்வாசி பகுதியை கடந்துவிட்ட உங்களுக்கு இனிமேல் கெடுபலன்களை தருகின்ற வலிமையை சனி இழக்கிறார். எனவே இனிமேல் விருச்சிக ராசிக்கு துயரங்கள் எதுவும் இல்லை. இரண்டாம் வீட்டிற்குடைய குருபகவான் பலமாக இருப்பதால் இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் நல்லசெய்திகளும் அவர்களால் பெருமைப்படத்தக்க நிகழ்வுகளும், சுப காரியங்களும் இருக்கும்.

மாத ஆரம்பத்தில் ராசிக்கு எட்டாம் வீட்டை சனி செவ்வாய் சேர்ந்து பார்த்து அந்த வீடு வலிமை இழப்பதால் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

சனி இரண்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் இந்த மாதம் சுமாராகத்தான் இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்களுக்கு இது நல்லமாதமாக அமையும். சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

1,2,3,12,13,14,21,22,23,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி காலை 8 மணி முதல் 8-ம் தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகமாகும் நபர்கள் பின்னாளில் உங்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

No comments :

Post a Comment