Wednesday, March 1, 2017

சிம்மம்: 2017 மார்ச் மாத பலன்கள்

சிம்மம்:

மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் ராசியை பார்க்கும் நிலையில் அமர்ந்திருப்பதும் பிற்பகுதியில் ராசிநாதன் குருவின் பார்வையில் அமர்வதும் சிம்மத்திற்கு யோகம் செய்யும் அமைப்புகள் என்பதால் இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்கள் எதையும் நேர்முகமாக சந்தித்து வெற்றி கொள்ளும் மாதமாக இது இருக்கும். ஐந்தில் சனி இருப்பதால் சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது.

மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் இருக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

மாத ஆரம்பத்தில் இரண்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பது உங்களை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டும் சம்பவங்களை நடக்க வைக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். இந்தமாதம் எதிர்பாராத பணவரவு இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் உண்டு. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.

3,5,6,7,8,18,19,20,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி முதல் 2-ம் தேதி அதிகாலை 3 மணி வரையும் மாதக்கடைசியில் 27-ம்தேதி காலை 10 மணி முதல் 29-ம் தேதி மதியம் 12 மணி வரையும் சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment