Tuesday, January 3, 2017

மகம்: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

மகம்:

உங்கள் நட்சத்திரநாதன் கேது வருட ஆரம்பத்தில் வலுவாக இருப்பதால் பிரச்னைகள் எதுவும் வராது. அதேநேரத்தில் அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுப வலுவடையும் கேது உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

No comments :

Post a Comment