Monday, 5 December 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (5.12.16 முதல் 11.12.16 வரை)

மேஷம்:

உங்களில் சிலருக்கு கடன் தொல்லைகளையும், ஆரோக்கியக் குறைவையும், எந்த ஒரு விஷயத்திலும் பின்னடைவுகளையும், ஆறாமிடத்துக் குருபகவான் கடந்த சில மாதங்களாகவே கொடுத்து கொண்டிருந்தாலும், ராசிநாதன் செவ்வாய் பத்தில் உச்சம் பெற்று தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் தொழில் மூலமான வருமானங்களின் மூலம் நீங்கள் கடன் தொல்லைகளை சமாளித்து கொள்ளும் வாரமாக இது இருக்கும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. மற்றபடி தொழில், வியாபாரம் போன்றவைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும்.

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சொந்த பிரச்சனைகளை தீர்க்கும் சந்திப்புகளை தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இது நல்ல வாரமாக இருக்கும். அலுவலகத்தில் மரியாதை இருக்கும். பணிச்சுமை குறையும்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் தைரியக் காரகனான செவ்வாயுடன் இணைந்து குருவின் பார்வையோடு இருப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து விஷயங்களிலும் நீங்கள் தைரியமாகவும், தெளிவான மனதுடனும் முடிவெடுக்கின்ற வாரம் இது. அதே நேரத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் குறிப்பிட்ட சிலருக்கு கட்டுக் கடங்காதப்படி கோபம் வரும் என்பதால் எதிலும் நிதானமாகவும் பேசும்போது கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். உங்களின் அந்தஸ்து, கௌரவம், பணவரவு ஆகியவற்றில் குறைகள் இருக்காது. தொழில், வியாபாரம் போன்றவை விறுவிறுப்புடன் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும்.

ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்க்கும் அமைப்புடனும், நான்காமிடத்தில் இருக்கும் குருவுடன் பரிவர்த்தனை யோகத்துடனும் இருப்பதால் மிதுன ராசிக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கின்ற வாரமாக இது இருக்கும். நான்கு, ஏழுக்குடையவர்களின் பரிவர்த்தனையால் குறிப்பிட்ட சிலருக்கு உங்களின் பணத்தையும் மனைவியின் வருமானத்தையும் இணைத்து வீடு, வாகனம் வாங்குதல் போன்ற பலன்களும் இருக்கும்.

ராசியின் எதிரியான செவ்வாய் சுக்கிரனுடன் இணைவதால் இந்த வாரம் சில புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். குருவும் புதனும் இடம் மாறி அமர்ந்து பரிவர்த்தனையோகம் உண்டாவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். வியாபாரிக்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கடகம்:

வார ஆரம்பமே ராஜயோகாதிபதி செவ்வாய் சந்திரனுடன் இணைந்து ராசியை பார்க்கின்ற அமைப்பில் இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு சகோதர விஷயத்திலும், சிகப்பு நிறம் சம்பந்தபட்டவைகளிலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களிலோ, பண பரிவர்த்தனை எனும் செக் ரிட்டர்ன் வழக்குகளிலோ சிக்கி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கின்ற வாரமாக இது இருக்கும்.

வார ஆரம்பத்தில் தாய்வழி உறவில் முட்டல்களும் மோதல்களும் இருக்கும். தாயுடன் பிறந்தவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு உங்களை மனக்கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வார பிற்பகுதியில் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். 5-ம் தேதி இரவு 11 மணி முதல் 8-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்கவும். உங்களின் மனம் இப்போது ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் மேற்கண்ட நாட்களில் எடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்மம்:

வார ஆரம்பத்தில் சந்திரனுடன் கூடி வலிமை பெற்று யோகாதிபதி செவ்வாய் எட்டாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். ஆனால் அவர் ஆறாமிடத்தில் மறைந்துதான் பார்க்கிறார் என்பதால் இந்த வாரம் சிம்மராசிக்கு கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாத நிகழ்ச்சிகள் நடக்கின்ற வாரமாக இருக்கும். ஒரு சிலர் உங்களின் மெத்தனப் போக்கால் நல்லதொரு சந்தர்ப்பத்தை நழுவவிடுவீர்கள் என்பதால் சோம்பலை தவிர்த்து துடிப்புடன் செயலாற்ற வேண்டிய வாரம் இது.

அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் பிரச்னையை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்

கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. 8-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 10-ம் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உடல்நலத்தில் அக்கறை வைக்கவும். மனதை பாதிக்கும் செயல்கள் நடக்கும் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதையும் பொறுமையுடன் கையாள்வது நல்லது.

கன்னி:

வாரம் முழுவதும் ராசிநாதனும் தொழில் ஸ்தானாதிபதியுமான புதனும், நான்கு ஏழுக்குடைய குருவும் பரிவர்த்தனை யோகத்தில் ஒன்று, நான்காமிடங்களில் வலிமையான அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களின் உடலும், மனமும் உற்சாகமடையும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் வேலை, தொழில் விஷயங்களில் இதுவரை உங்களால் சாதிக்க முடியாது என்று நினைத்திருந்த விஷயத்தை இப்போது சாதித்து காட்டுவீர்கள்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். 10-ம் தேதி காலை 8 மணி முதல் 12-ம் தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் புதியவர் எவர் அறிமுகமானாலும் அவரால் பின்னாளில் பிரச்சினைகள் வரலாம்.

துலாம்:

கடந்த சில வருடங்களாக வாழ்க்கையில் நிலை கொள்ளாமல் இருக்கும் துலாம் ராசி இளைய பருவத்தினருக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையான விஷயங்கள் நடக்கும் வாரம் இது. குறிப்பாக இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை ஏற்படுத்தப் போகும் ஒருவரை சந்திப்பீர்கள். அதன் மூலம் நல்லவைகள் நடக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் சாதகமான மாற்றம் நடந்து எதிர்காலத்திற்காக விதைகள் ஊன்றப்படும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். குரு புதன் பரிவர்த்தனையால் தாராளமான பணவரவு இருக்கும். எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் உங்கள் மனம் போல் நடக்கும்.

பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வார ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிலும் ரகசியம் காப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது. வாரம் முழுவதும் யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் நல்ல விஷயங்கள் உண்டு.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் தைரிய ஸ்தானமான மூன்றாமிடத்தில், குருவின் பார்வையில் இன்னொரு சுபரான சுக்கிரனின் இணைவோடு இருக்கின்ற நல்ல வாரம் இது. கடந்த நான்கு வருடங்களாக உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தைரியமும், வீரியமும் தக்க சமயத்தில், தகுந்த இடத்தில் வெளிப்பட்டு உங்களின் திறமைகள் உங்களுக்கே அடையாளம் காட்டப்படுகின்ற வாரம் இது. ராம பக்தனான ஸ்ரீ அனுமனைப் போல இந்தவாரம் நீங்களே உங்களை உணருவீர்கள்.

வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த நல்ல மாற்றங்கள் இந்த வாரம் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த வாரம் டென்ஷன் இருக்காது. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது எதிர்காலத்தில் நல்லவைகளுக்கு வழிவகுக்கும்.

தனுசு:

ராசிநாதன் குருவும், ராசியில் அமர்ந்திருக்கின்ற புதனும் ஒன்று பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வாரம் இது. ராசியும் பத்தாமிடமும் வலுவடைவதால் இதுவரையில் வேலை பார்க்கும் இடங்களில் டார்கெட்டை முடிக்க முடியாமல் இருந்தவர்கள், மற்றும் மாதமானால் இந்த அளவு பணியை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் மன அழுத்தத்துடன் வேலை செய்பவர்கள் சாதாரணமாக மாறும் வாரம் இது.

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து நண்பராக மாறுவார்கள். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை.

இந்த வாரம் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதால் தேவையற்ற இடங்களில் தேய்க்காதீர்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

மகரம்:

ராசியில் உச்ச செவ்வாயுடன் யோகாதிபதி சுக்கிரனும் ஏழுக்குடைய சந்திரனும் இணைந்து ஆரம்பிக்கும் வாரம் இது. சுக்கிர, சந்திர, செவ்வாய் இணைவு மகர ராசிக்கு சில வித்தியாசமான அனுபவங்களை தரும் என்பதால் இந்த வாரம் இளைய பருவத்தினரின் இன்ப வாரமாக இருக்கும். இதுவரை தோழமையுடன் பழகியவர் வாழ்க்கைத்துணை என்ற அமைப்பிற்கு மாறுவது இப்போது நடக்கும். நட்புடன் பழகியவர்கள் தங்களின் உள்ளம் திறந்து காதலை சொல்லும் வாரம் இது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும்.

கும்பம்:

கடந்த சில மாதங்களாக சாதகமற்ற கிரக நிலைகளால் கஷ்டங்களை சந்தித்து வரும் கும்ப ராசிக்காரர்களுக்கு, மறைமுகமான வழியில், எப்படி இந்தப் பணம் கிடைத்தது என்று வெளியில் சொல்லமுடியாத வகையில் ஓரளவு வருமானம் இப்போது கிடைக்கும். உங்களுடைய பொருளாதார கஷ்டம் தீரும் வாரம் இது. அதே நேரத்தில் வரவை விட செலவு அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு கடனுக்கு தவணை செலுத்த முடியாத அனுபவங்களும் ஏற்படும்.

சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

பெண்களால் நன்மைகளும் குறிப்பிட்ட சிலரின் வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கும். புதன் பரிவர்த்தனை யோகத்தில் அமர்வதால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

மீனம்:

ராசிநாதனும் பத்துக்குடையவனுமான குருபகவான் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்களை குறிக்கும் ஏழாம் வீட்டு அதிபதியான புதனுடன் பரிவர்த்தனையாகும் யோகவாரம் இது. பதினொன்றாமிடத்தில் சுக்கிரன், செவ்வாய், சந்திரன் இணைவதும் உங்களுக்கு சாதகமான அமைப்பு என்பதால் மீனத்தை இதுவரை கஷ்டத்தில் ஆழ்த்தி வந்த விஷயங்கள் அனைத்தும் தீர்வு நிலைக்கு வந்து உங்கள் மனக் கலக்கங்கள் மாறும் வாரம் இது.

தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும்.

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். ஜனவரிக்கு பிறகு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும்.

No comments :

Post a Comment