Saturday, 17 December 2016

சிம்மம்: 2016 - மார்கழி மாத பலன்கள்

சிம்மம்

சிம்மநாதன் சூரியன் இதுநாள் வரை சனியுடன் இணைந்து பலவீனமாகி தன் தனித்தன்மையை இழந்திருந்த நிலைமாறி இந்த மாதம் குருவின் வீட்டில் பலம் பெறுவதும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் புதனுடன் பரிவர்த்தனையில் இருப்பதும் சிம்மத்திற்கு வலுத்தரும் அமைப்புகள் என்பதால். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு இருந்து வந்த எதிர்மறை பலன்கள் இப்போது விலகும்.

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் தாராளமாகவே இருக்கும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

No comments :

Post a Comment