Saturday, 17 December 2016

மிதுனம்: 2016 - மார்கழி மாத பலன்கள்

மிதுனம்

மார்கழி மாதம் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்த்து வலுப்படுத்துவதால் உங்களுக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் நன்மைகளும் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு சச்சரவுகளும் நீங்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த கிரக நிலையால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் விலகும் என்பது உறுதி.

அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் மாதம் இது. பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இந்த மாதம் எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.

மாத பிற்பகுதியில் செவ்வாய் வலுவாவதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஒரு சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

No comments :

Post a Comment