Saturday, 1 October 2016

கடகம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

கடகம்:

அக்டோபர் மாதம் துவங்கும் முதல்நாளே ராசிநாதன் சந்திரன் அமாவாசை யோகத்தில் தனது துணைவரான சூரியனுடன் இணைந்திருப்பதும், பாக்கியாதிபதியான குருவும் அவருடன் சேர்ந்திருப்பதுமாக ஆரம்பிப்பதால் இந்த மாதம் கடக ராசிக்காரர்களின் குடும்பத்தில் கணவன் - மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும் மாதமாக இருக்கும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு இந்தமாதம் சந்தோஷச் செய்திகள் உண்டு.

வெளிநாட்டு விஷயங்கள் இப்போது லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வலுப்பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.

கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கடகராசிக்காரர்கள் இந்தமாதம் உற்சாகத்துடனும், செயல்திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் நல்ல மாதமே. காவல் துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும்.

4,5,6,8,9,11,18,19,26,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ந்தேதி காலை 8 மணி முதல் 14-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் வாழ்க்கையை மாற்றும் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இந்தநாட்களில் உங்களின் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும்.

No comments :

Post a Comment