Saturday, 1 October 2016

மேஷம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

மேஷம்:

இதுவரை மேஷராசிக்கு பின்னடைவுகளையும், மனக்கஷ்டங்களையும் கொடுக்கும் நிலையில் எட்டில் மறைந்திருந்த ராசிநாதன் செவ்வாய் தற்போது ஒன்பதாமிடத்தில் தனக்கு மிகவும் பிடித்த நண்பரான குருவின் வீட்டில் அமர்ந்திருப்பதால் அக்டோபர் மாதம் மேஷராசிக்காரர்களுக்கு உற்சாகமும், சந்தோஷமும் தரக்கூடிய மாதமாக இருக்கும். அதேநேரத்தில் உங்களின் அனைத்து வெற்றிகளும் கடும் முயற்சிகளுக்கு பின்பே வந்ததாக இருக்கும்.

செவ்வாய் சுபவலுவாக உள்ளதால் தன் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்தமாதம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கு இந்த மாதம் நல்ல மாதம். குறிப்பாக காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவருக்கு நன்மைகள் இருக்கும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் கருத்து வேற்றுமை வரும். இன்னும் ஒருவருடத்திற்கு கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அஷ்டமச் சனி நடப்பதால் பங்கு பிரிப்பது, தனியே போவது போன்றவைகள் இப்போது கூடாது.

கடன்தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியனும், புதனும் நல்லஇடங்களில் இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு.

1,2,3,9,10,15,16,18,21,23,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் செய்வதோ, தூரப் பிரயாணங்கள் செல்வதோ வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

No comments :

Post a Comment