Saturday, 1 October 2016

தனுசு: 2016 அக்டோபர் மாத பலன்கள்

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ஒன்பது, பத்துக்குடைய சூரியன், புதனுடன் இணைந்திருக்கும் யோகமாதம் இது. ராஜகிரகங்கள் அனைத்தும் தனுசுக்கு நல்ல அமைப்பில் இருக்கின்றன. குறிப்பாக மூன்றில் அமர்ந்திருக்கும் கேதுவும், பதினொன்றில் அமர்ந்திருக்கும் சுக்கிரனும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் அதிக சிரமமின்றி வெற்றி பெறச் செய்வார் என்பதால் தனுசுக்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை.

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து உங்களுக்கு நண்பராக இப்பொழுது மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இந்த மாதம் இல்லை.

வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத்துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

2,4,5,6,8,13,16,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ந்தேதி மதியம் 3 மணி முதல் 24-ந்தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகள், தொழில் விரிவாக்கங்கள், புதியவரை சந்தித்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம். இந்த நாட்களில் நீங்கள் செய்வது எதிர்கால நன்மைக்கு நல்லவைகளாக இருக்காது.

No comments :

Post a Comment