Tuesday, 2 August 2016

கடகம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

கடகம்:

இந்தமாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரகநிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது.

தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு இந்த மாதம் கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

2,3,4,5,11,12,13,28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி பகல் 12 மணி முதல் 20-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment