Tuesday, 2 August 2016

கன்னி: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

கன்னி:

குருபகவான் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது.

செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.

குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் கன்னியின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.

3,8,9,10,16,17,18,19,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி மாலை 5 மணி முதல் 24-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment