Tuesday, 2 August 2016

மிதுனம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் இந்த மாதம் நிதானமாக இருங்கள்.

நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் இந்த மாதம் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இளையபருவத்தினருக்கு இப்போது திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. குருவின் பார்வை பத்தாமிடத்திற்கு கிடைப்பதால் இனிமேல் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம்.

5,6,8,9,11,12,22,24,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி காலை 7 மணி முதல் 18-ம் தேதி பகல் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரனுக்கு குருவின் பார்வை இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment