Tuesday, 2 August 2016

மீனம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

மீனம்:

தொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடனும் வரவுடன் இருக்கும் என்பதால் மீனராசிக்காரர்கள் இந்த மாதம் அனைத்திலும் வெற்றி பெறும் மாதமாக இருக்கும். இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.

வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

1,8,9,10,15,16,19,21,22,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி இரவு 11 மணி முதல் 11-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment