Tuesday, 2 August 2016

சிம்மம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் மாத முற்பகுதியில் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது நன்மைகளை செய்யும் யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் கெடுதல்கள் இல்லாத நல்ல மாதமாகவே உங்களுக்கு இருக்கும் என்பது உறுதி. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும்.

குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இந்த மாதத்தில் இருந்து சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் உங்களுக்கு ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். 

பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் இந்த மாதம் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் மிகச்சிறப்பாக நடைபெறும். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி மதியம் 3 மணி முதல் 22-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆயினும் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

No comments :

Post a Comment