Tuesday, 2 August 2016

தனுசு: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

தனுசு:

ஆகஸ்ட் மாதம் தனுசுராசிக்கு ஆனந்தமாதமே. அதிலும் குருபகவான் ராகுவிடமிருந்து விலகி பத்தாமிடத்தில் இருப்பதால் வருமானமும், எதிர்பாராத பணவரவும், திருப்தியாக வரும் மாதமாகவும் இது இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு பணஉதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும்.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

இளைஞர்களின் மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இந்த மாதம் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. வேலை செய்யுமிடங்களில் வீண் வாக்குவாதம் வேண்டாம். புதிய முயற்சிகளை சிலவாரங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது. பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். மாதத்தின் முதல் நாளான 1-ம் தேதி இரவு 8 மணி முதல் 4-ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.

No comments :

Post a Comment