Tuesday, 2 August 2016

மேஷம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

மேஷம்:

இந்தமாதம் முதல் மேஷராசிக்கு யோகாதிபதியான குருவின் பார்வை விலகுவதால் உங்களின் புதிய முயற்சிகள் தடைபடும் தரும் மாதமாக ஆகஸ்டு மாதம் இருக்கும். குறிப்பாக அஷ்டமச்சனியின் ஆதிக்கம் இனிமேல் மேலோங்கும் என்பதால் இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினர் இனிமேல் கடுமையாக உழைக்க வேண்டிய மாதமாகவும் இருக்கும். 

மேஷத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை இந்த மாதம் சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு இந்த மாதம் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம்.

தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.

2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி காலை 11 மணி முதல் 13-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

No comments :

Post a Comment