Tuesday, 2 August 2016

கும்பம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

கும்பம்:

தேவையற்ற கோபத்தையும் அடுத்தவர் மேல் காட்டவேண்டிய எரிச்சலையும் வீட்டில் காட்டுவீர்கள் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய மாதமாக இது இருக்கும். கும்பராசிக்காரர்கள் ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்களின் ராசிநாதன் வலுவாக இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் லாபத்துடன் இயங்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

3,5,6,11,13,14,21,22,23,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி காலை 11 மணி முதல் 8-ம் தேதி இரவு 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment