Friday, June 3, 2016

கடகம்: 2016 ஜூன் மாத பலன்கள்,

கடகம்:

கடகராசிக்கு பெரிய கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாதஆரம்பத்தில் லாபஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவுஸ்தானத்திலும் ராசியின் யோகாதிபதி செவ்வாய் பார்வையில் இருப்பதால் ஜூன்மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும் என்பதால் கடத்திற்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு இந்தமாதம் இரண்டாமிடத்தில் இருக்கும் குருவின் அமைப்பின்படி உடனடியாக திருமணம் நிச்சயித்து திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் உண்டு. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டு.

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி இரவு 9 மணி முதல் 27-ம்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

No comments :

Post a Comment