Friday, June 3, 2016

மேஷம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதாலும் மாதத்தின் முற்பகுதியில் யோகாதிபதி செவ்வாய், சூரியன் ராசிநாதனை பார்ப்பதாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ராசியை ஒன்பதுக்குடைய குரு பார்ப்பதும், ராசிநாதனை ஐந்துக்குடைய சூரியன் பார்ப்பதும் யோகஅமைப்புகள் என்பதால் இப்போது அஷ்டமச்சனியின் ஆதிக்கம் உங்களுக்கு கெடுபலன்கள் எதுவும் தரப்போவது இல்லை. இருந்தாலும் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு மேஷ ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை உணர்வீர்கள் என்பதால் இப்போதிருந்தே எதிலும் அகலக்கால் வைக்காமலும் அடுத்தவர்களை நம்பாமலும் தேவையற்ற கடன் விவகாரங்களில் சிக்காமலும் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது.

எதிர்பாராத பணவரவு இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும்.

1,2,3,6,8,11,12,13,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி இரவு 7 மணி முதல் 20-ம்தேதி அதிகாலை 6 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள்.

No comments :

Post a Comment