Monday, May 2, 2016

கும்பம்: 2016 மே மாத பலன்கள்

கும்பம்:

ராசியில் கேது அமர்ந்து ஏழாமிடத்தில் இருக்கும் குருபகவான் ராகுவுடன் சேர்ந்து பலவீனம் பெற்ற நிலையில் இந்தமாதம் ஆரம்பிப்பதால் கும்பத்தினருக்கு வாழ்க்கைத்துணைவர், நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் உள்ள மாதமாக இது இருக்கும். என்னதான் பிரச்னை என்றாலும் ராசிநாதன் வலுவுடன் இருப்பதால் வரும் அனைத்து கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. 

புத்திர ஸ்தானாதிபதி புதபகவான் பலவீனமாவதால் பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனக்குறை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பருவவயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் ஒரு கண் வையுங்கள். குடும்பஸ்தானம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையான பொருள் ஏதாவது வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள்.

பெண்கள் விஷயத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. இல்லையெனில் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால் அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள்.

2,5,11,13,15,17,18,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 16ம் தேதி காலை 11மணி முதல் 18ம் தேதி இரவு 12மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

2 comments :

  1. Super article and this will useful for new astrologer Astrology Lessons

    Astrology Forum

    ReplyDelete
  2. A more profound see it would uncover the logical part of crystal gazing and we would be astounded to figure out how best in class a science is astrologer near me Vedic soothsaying which is being abhorred and named as superstitious by certain individuals these days.

    ReplyDelete