Monday, May 2, 2016

சிம்மம்: 2016 மே மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மத்திற்கு அனைத்து சிறப்புக்களும் சேரும் மாதம் இது. யோகம் தரக்கூடிய கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதாலும் ராசிநாதன் உச்சவலுவுடன் உள்ளதாலும் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில் அமைப்புகளிலும் மறைமுகமான எதிரிகள் உருவாகி கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். சிம்மத்திற்கு இப்பொழுது தோல்வி இல்லை.

உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும்.

இந்தமாதம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.

2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 3ம் தேதி மதியம் 1 மணி முதல் 5ம் தேதி மதியம் 1மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment