Monday, May 2, 2016

மிதுனம்: 2016 மே மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் லாபவீட்டில் சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருப்பதால் இந்தமாதம் மிதுனத்திற்கு நல்ல மாதமாகவே அமையும். அதோடு பாவக்கிரகங்களான ராகுபகவான் மூன்றிலும் செவ்வாய் சனி இருவரும் ஆறிலும் இருப்பது ஒருவகையில் மிதுனத்திற்கு யோகம் தரும் என்பதால் இன்னும் சில மாதங்களுக்கு பணவரவிலோ வேலை தொழில் வியாபார அமைப்பிலோ மிதுனத்திற்கு சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதும் ஒரு நல்ல செய்திதான்.

பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் நிறைவாகவே இருக்கும். ராசிநாதன் வலுக்குறைவாக இருந்தாலும் அவருக்கு குரு பார்வை இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாகவே முடியும். ராசியை செவ்வாய் வலுப்பெற்று பார்ப்பதால் தேவையில்லாமல் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

2,5,7,9,10,15,17,18,19,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 25ம் தேதி காலை 9 மணி முதல் 27ம் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment