Monday, May 2, 2016

கன்னி: 2016 மே மாத பலன்கள்

கன்னி:

ராசிநாதன் புதபகவான் எட்டில் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் பகவான் ஆட்சியாக இருப்பதும் பாவக் கிரகங்களான கேது செவ்வாய் சனி ஆகியோர் உபசய ஸ்தானங்களான மூன்று ஆறில் இருப்பதும் கன்னிக்கு நன்மைகளைத் தரும் கிரகநிலைகள் என்பதால் இந்த மாதம் கன்னிக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் மாதம் என்பதோடு புதிதாக எந்த பிரச்னையும் வராத மாதமாகவும் இருக்கும்.

குறிப்பிட்ட சிலர் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த மாதம் நல்லவைகள் நடக்கும். ஆனாலும் ராசி வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை. நல்ல வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்த சிலருக்கு இந்த மாதம் நிலையான உத்தியோகம் அமையும்.

பெண்களுக்கு இந்த மாதம் சிறப்புகள் தேடி வரும். நான்கு பேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் மாதம் இது. மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
 
1,2,3,5,6,15,19,20,26,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 5ம் தேதி மதியம் 1 மணி முதல் 7ம் தேதி மதியம் 1மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment