Monday, 2 May 2016

மீனம்: 2016 மே மாத பலன்கள்

மீனம்:

பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் மாத பிற்பகுதியில் சகாயஸ்தானாதிபதி சுக்கிரனும் ஆட்சி வலுப் பெற்று அவரைப் பார்க்கப் போவதால் இந்த மாதம் அடுத்தவரின் எதிர்பாராத உதவியால் நல்ல திருப்பங்களும் வரவுகளும் இருக்கும் என்பது உறுதி. சிலருக்கு ஆகஸ்டு மாதத்திற்கு மேல் நடக்கப் போகும் நன்மைகளுக்கான ஆரம்பங்களும் அறிமுகங்களும் இப்போது இருக்கும்.

சமீப காலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த மாதம் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவருக்கு இந்த மாதம் சாதகமான தீர்வு கிடைக்கும்.

சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் இருக்கின்றன. மீனராசி இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 18ம் தேதி இரவு 12மணி முதல் 21ம் தேதி இரவு 12மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

1 comment :