Monday, May 2, 2016

மேஷம்: 2016 மே மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் எட்டில் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பதோடு ராசியும் குருவின் பார்வையில் இருப்பதால் இந்தமாதம் மேஷராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத மாதமாகவே இருக்கும். அதே நேரத்தில் வேலை தொழில் செய்யும் இடங்களில் சங்கடங்களோ விரயங்களோ இருக்கும் என்பதால் மேஷராசிக்காரர்கள் சிக்கனமாகவும் பொது இடங்களில் வீண்வாதத்தை தவிர்க்க வேண்டிய மாதமாகவும் இது இருக்கும்.

மேஷத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை இந்த மாதம் சந்திப்பீர்கள். செவ்வாய் சனியுடன் இணைவதால் எரிச்சலும், சற்று ஏமாற்றங்களும் கலந்த மாதமாகத்தான் இது இருக்கும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டுத்துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்தமாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். குலதெய்வதரிசனம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். ராசிக்கு குருபார்வை இருப்பதால் எவ்வித மாறுதல்கள், எதிர்மறைபலன்கள் உங்களுக்கு நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி

2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 ம் தேதி இரவு 12மணி முதல் 23ம் தேதி இரவு 12மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment